பாலியல் துஷ்பிரயேகத்துக்குள்ளாக்கப்பட்ட இரு ஜேர்மன் பெண்கள்

கொள்ளுப்பிட்டி மற்றும் தங்காலை பகுதிகளில் பதிவான இருவேறு சம்பவங்களில் ஜேர்மன் பெண்கள் இருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்குள்ளாக்கப்பட்டுள்ளனர்.

கொள்ளுப்பிட்டி பகுதியில் ஜேர்மன் பெண் ஒருவர் போதைப்பொருள் கொடுத்து பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

32 வயதுடைய பெண்ணொருவரே இவ்வாறு துஷ்பிரயோகத்துக்கு உள்ளாகியுள்ளார். இந்த சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டுக்காக 28 வயதான இலங்கை வர்த்தகர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

பாதிக்கப்பட்ட ஜேர்மன் பெண் மருத்துவ பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேக நபரான குறித்த வர்த்தகர், ஜேர்மன் பெண்ணுடன் கடந்த 6 வருடங்களாக நண்பராக இருந்து வந்துள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

ஜேர்மன் பெண்ணின் தந்தை முன்னாள் கடற்படை அதிகாரி எனவும் அவர் இலங்கையர் எனவும் தாய் ஜேர்மன் நாட்டை சேர்ந்தவர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

டிசம்பர் மாதம் 18ஆம் திகதி இலங்கை வந்த அவர், தங்காலையில் உள்ள உறவினர் வீட்டில் தங்கியிருந்த நிலையில் நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் சென்று வந்துள்ளார்.

இதேவேளை, சந்தேகநபருடன் இரண்டு வாரங்களாக குறித்த பெண் கண்டி பிரதேசத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடந்த 6 ஆம் திகதி நாட்டை விட்டு வெளியேறவிருந்த குறித்த பெண் கடந்த 4ஆம் திகதி குறித்த வர்த்தகருடன் கொள்ளுப்பிட்டி பிரதேசத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றிற்கு சென்றுள்ளார்.

அன்றைய தினம் இரவு விடுதிக்கு சென்ற இருவரும் மறுநாள் காலை வரை மது அருந்தியுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது. இதன் போது அந்த பெண்ணின் கடன் அட்டை தொலைந்து போனதால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

அதன் பின்னர் இரவு குறித்த பெண்ணை மயக்கமடைய செய்யும் வகையில் போதை மாத்திரையை குறித்த இளைஞன் வழங்கியுள்ளார். அதன் பின்னர் காலை எழுந்து பார்க்கும் போத தான் துஷ்பிரயோகத்திற்குட்படுத்தப்பட்டுள்ளதாக குறித்த பெண் முறைப்பாடு செய்துள்ளார்.

இதேவேளை, மற்றுமொரு ஜேர்மன் பெண்ணும் தங்காலை பகுதியில் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாகியுள்ளாக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் தங்காலை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். தங்காலையில் உள்ள ஹோட்டல் ஒன்றில் ஜேர்மன் பெண் பாலியல் வன்புனர்வு செய்யப்பட்டுள்ளார்.

சுற்றுலா வழிகாட்டியான சந்தேகநபர் தங்காலையில் உள்ள ஹோட்டல் ஒன்றில் ஜேர்மன் பெண்ணுடன் தங்கியிருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். 

சனிக்கிழமையன்று உள்ளூர் வழிகாட்டி தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாகக் கூறி அந்தப் பெண் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளித்துள்ளார்.

குறித்த பெண் தங்காலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், பண்டாரவளை எல்ல பிரதேசத்தில் வசிக்கும் சந்தேகநபர் பிரதேசத்தை விட்டு தப்பிச் சென்றுள்ளார்.

அவரை கைதுசெய்வதற்கான நடவடிக்கைகளையும் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

வீரகேசரி– (2022-02-09 09:40:32)

Check Also

ஹங்வெல்லை துப்பாக்கிச் சூடு நடந்தது என்ன?

வாஹித் லெப்பை மொஹம்மது பர்சான் 46 வயதான மூன்று பிள்ளைகளின் தந்தை. ஹங்வெல்லை நகரின் ஹோட்டல் ஒன்றினை நடாத்திச் செல்பவர். …

Free Visitor Counters Flag Counter