ஸ்மார்ட்போன் திருடிய குடும்பம் – திறமையான இரு பிள்ளைகளும் கைது!

ஸ்மார்ட்போன் திருடிய குடும்பம் கைது! – பிள்ளைகள் இருவரும் க.பொ.த சாதாரண பரீட்சையில் திறமை சித்தியடைந்துள்ளனர்

பிபில பஸ் நிலையத்திற்கு முன்பாக உள்ள கையடக்கத் தொலைபேசி கடையொன்றில் இருந்து 158,000 ரூபா பெறுமதியான 6 கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் ஒளி விளக்கு என்பவற்றைத் திருடிய குற்றச்சாட்டில் 37 வயதுடைய பெண்ணும் அவரது இரண்டு பிள்ளைகளும் மொனராகலை பிரதேச குற்றத்தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்களால் திருடப்பட்ட 6 கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் ஒரு ஒளி விளக்கையும் பொலிஸார் மீட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட தாயும் இரண்டு பிள்ளைகளும் மொனராகலை நக்கல பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

கடையின் உரிமையாளர் அன்னதானம் வழங்குவதற்காக கடையை விட்டு வெளியேறிய போது, ​​சந்தேக நபரின் குடும்பத்தினர் கையடக்கத் தொலைபேசியின் சிம் கார்டைச் சரிபார்க்கும் சாக்கில் கடைக்குள் நுழைந்துள்ளனர். அங்கிருந்த விற்பனை உதவியாளரிடம் இரகசியமாக இந்த கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந்தக் கொள்ளைச் சம்பவத்தை நடத்தியவர் சி.சி.டி.வி கேமராவில் பதிவாகியுள்ளது.

தாய் மற்றும் இரண்டு பிள்ளைகள் அப்பகுதியில் உள்ள கடைகளில் பல கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்ட குடும்பம் என பொலிஸாரால் அடையாளம் காணப்பட்டுள்ளது.

இவர்கள் இதற்கு முன்னர் பிபில மற்றும் மெதகம ஆகிய இரண்டு கையடக்கத் தொலைபேசி விற்பனை நிலையங்களில் கையடக்கத் தொலைபேசிகளைத் திருடியதாகவும் பின்னர் அவற்றை பணத்திற்கு விற்பனை செய்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

பொலிஸாரால் கைது செய்யப்பட்ட சிறுமி இந்த வருடம் க.பொ.த உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றவுள்ளார். க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் எட்டு ‘ஏ’ சித்திகளுடன் சித்தியடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். கைது செய்யப்பட்ட சிறுமியின் சகோதரரும் க.பொ.த சாதாரண தரத்தில் 07 ஏ சித்தியடைந்துள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

என். டி. தி. பண்டார – புத்தல | கெலும் குணதிலக்க – மொனராகலை

Check Also

ஹங்வெல்லை துப்பாக்கிச் சூடு நடந்தது என்ன?

வாஹித் லெப்பை மொஹம்மது பர்சான் 46 வயதான மூன்று பிள்ளைகளின் தந்தை. ஹங்வெல்லை நகரின் ஹோட்டல் ஒன்றினை நடாத்திச் செல்பவர். …

Free Visitor Counters Flag Counter