சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வரும் க.பொ.தர உயர்தரப் பரீட்சைக்கான கால அட்டவணை போலியானது என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
பரீட்சைகள் ஆணையாளர் வெளியிட்டுள்ள விசேட அறிக்கையிலேயே குறித்த விடயம் வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கமைய, உயர்தரப் பரீட்சை குறித்து கல்விமைச்சு மற்றும் பரீட்சைகள் திணைக்களத்தினால் வெளியிடப்படுகின்ற உத்தியோகபூர்வ தகவல்களை மாத்திரம் கருத்திற் கொண்டு பொறுப்புடன் செயற்படுமாறு பரீட்சைகள் ஆணையாளர் சனத் பீ பூஜித கேட்டுக் கொண்டுள்ளார்.
நாட்டில் ஏற்பட்டுள்ள சவாலான சூழ்நிலையில், தூர நோக்கை கருத்திற் கொண்டு ஒட்டுமொத்த கல்வி நடவடிக்கைகள் தொடர்பான தீர்மானங்கள் மேற்கொள்ளப்படும் எனவும், சில தரப்பினரால் சமூக வலைத்தளங்களில் பரப்பப்படும் இவ்வாறான செய்திகள் குறித்து கவலையடைவதாகவும் பரீட்சைகள் ஆணையாளர் குறிப்பிட்டுள்ளார்.
உயர்தரப் பரீட்சை தொடர்பில் கல்வியமைச்சு மற்றும் பரீட்சைகள் திணைக்களத்தின் வெளியிடப்பட்டுள்ள உத்தியோகபூர்வ அறிவிப்புக்களுக்கு ஏற்ப செயற்படுமாறு பாடசாலைகளின் அனைத்து உறுப்பினர்களிடமும் கேட்டுக்கொள்வதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் மேலும் தெரிவித்தார்.