காதி நீதிமன்றங்களை நேரில் வந்து பாருங்கள்

காதி நீதி­மன்ற அமர்­வு­களை நேரில் வந்து கண்­கா­ணிக்­கு­மாறும் அதன் பின்பு இந்­நீ­தி­மன்­றங்கள் பற்றி “ஒரே நாடு ஒரே சட்டம்’ தொடர்பான ஜனா­தி­பதி செய­ல­ணியின் அறிக்­கையை ஜனா­தி­ப­தி­யிடம் கைய­ளிக்­கு­மாறும் செய­ல­ணியின் தலைவர் கல­கொட அத்தே ஞான­சார தேர­ருக்கு எழுத்து மூலம் அழைப்பு விடுக்­கப்­பட்­டுள்­ளது.

தான் கட­மை­யாற்றும் காதி­நீ­தி­மன்­றுக்கு நேரில் வந்து அமர்­வு­களை கண்­கா­ணிப்புச் செய்­யுங்கள் என இலங்கை காதி நீதி­வான்கள் போரத்தின் உப­த­லை­வரும் இரத்­தி­ன­புரி மாவட்ட காதி­நீ­தி­வானும் அவி­சா­வளை மற்றும் பதுளை காதி­நீ­தி­மன்­றங்­களின் பதில் காதி­நீ­திவா­னு­மா­கிய எம்.இப்ஹாம் யெஹ்யா ஞான­சார தேர­ருக்கு அனுப்­பி­வைத்­துள்ள கடி­தத்தில் குறிப்­பிட்­டுள்ளார்.

கடந்த 18 ஆம் திகதி “ஒரே நாடு ஒரே சட்டம்’ செய­ல­ணியின் தலை­மைக்­கா­ரி­யா­லய விலா­சத்­திற்கு ஞான­சார தேர­ருக்கு அனுப்பி வைத்­துள்ள கடி­தத்தில் மேலும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது,

இந்­நாட்டின் முஸ்­லிம்கள் 1806 முதல் தனியார் சட்­டத்தின் கீழ் ஆளப்­பட்டு வரு­கின்­றார்கள். இந்தச் சட்­டத்தை, இந்த உரி­மையை முஸ்­லிம்கள் தொடர்ந்தும் அனு­ப­விப்­ப­தற்கு தாங்கள் உதவ வேண்­டு­மென கேட்டுக் கொள்­கிறேன். முஸ்லிம் விவாக விவா­க­ரத்துச் சட்­டத்­தினை நீங்கள் முழு­மை­யாக ஆழ­மாக படித்­த­றிந்தால் அதில் உள்­ள­டங்­கி­யுள்ள அநே­க­மான சட்ட ஏற்­பா­டுகள் அனைத்து இன மக்­க­ளுக்கும் பொருத்­த­மா­ன­தாக இருக்கும் என்­பதை நீங்கள் விளங்கிக் கொள்­வீர்கள்.

காதி­நீ­தி­மன்­றங்­க­ளுக்கு நீதி­ப­திகள் ஏனைய நீதி­மன்­றங்­க­ளுக்குப் போல் நீதிச் சேவை ஆணைக்­கு­ழு­வி­னாலே நிய­மிக்­கப்­ப­டு­கி­றார்கள். எந்த நீதி மன்­றங்­க­ளையோ, நீதி­ப­தி­க­ளையோ அவ­ம­திப்­பது தண்­ட­னைக்­கு­ரிய குற்­ற­மாகும்.

நீங்கள் எனது நீதி­மன்ற அமர்­வொன்­றுக்கு வருகை தந்து நேரில் அமர்­வினை அவ­தா­னித்தால் நீங்கள் உண்­மை­யினைப் புரிந்து கொள்­வீர்கள். இங்கு விண்­ணப்­ப­தா­ரிகள் மற்றும் பிர­தி­வா­தி­க­ளுக்கு அவர்­க­ளுக்கு இல­கு­வான வகையில் சிங்­களம், தமிழ், ஆங்­கி­லத்தில் விசா­ர­ணைகள் இடம்­பெ­று­கின்­றன. காதி­நீ­தி­ப­திகள் சம்­ப­ள­மின்றி சிறிய கொடுப்­ப­ன­வொன்­றினைப் பெற்­றுக்­கொண்டே இப்­பா­ரிய சேவையைச் செய்­கி­றார்கள்.

காதி­நீ­தி­மன்ற அமர்­வினைக் கண்­கா­ணித்­ததன் பின்பு, இந்த முறை­மையை இல்லாமற் செய்யாது ஏற்கனவே நீதியரசர் சலீம் மர்சூப் தலைமையில் நியமிக்கப்பட்ட குழுவினால் பரிந்துரைக்கப்பட்டுள்ள திருத்தங்களை அமுல்படுத்துவதற்கு ஜனாதிபதிக்கு ஆலோசனை வழங்குமாறு வேண்டிக்கொள்கிறேன் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

(ஏ.ஆர்.ஏ.பரீல்) விடிவெள்ளி பத்திரிகை 2022-01-31

Check Also

ஹங்வெல்லை துப்பாக்கிச் சூடு நடந்தது என்ன?

வாஹித் லெப்பை மொஹம்மது பர்சான் 46 வயதான மூன்று பிள்ளைகளின் தந்தை. ஹங்வெல்லை நகரின் ஹோட்டல் ஒன்றினை நடாத்திச் செல்பவர். …

Free Visitor Counters Flag Counter