பெப்ரவரி மாதம் செலுத்திய நீர்க்கட்டணத்தையே மார்ச், ஏப்ரல், மே மாதங்களுக்கும் செலுத்துங்கள்

இலங்கையில கொரோனா முடக்க காலத்தில் நீர்வழங்கள் வடிகாலமைப்புச் சபையின் நீர்மானி வாசிப்பாளர்கள் வீடுகளுக்குச் சென்று நீர்ப்பாவனை அலகினை கணக்கிட முடியாது போனது. ஆகவே இறுதியாக இந்த ஆண்டின் பெப்ரவரி மாதத்தில் தங்களுக்கு கிடைத்த நீர்க்கட்டண அட்டையில் உள்ள கட்டணத்திற்கு சமமான தொகையையே மார்ச், ஏப்ரல், மே மாதங்களுக்கும் செலுத்தும் படி நீர்ப்பவானையாளாகளை வேண்டுவதாக நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் தலைவர் நிசாந்த ரணதுங்க தெரிவித்தார்.

தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் தலைவர் நிசாந்த ரணதுங்க தலைமையில் ரத்மலானையில் உள்ள நீர்வழங்கல் வடிகலாமைப்புச் சபையின் தலைமைக் காரியாலாயத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே மேற்கண்டவாறு தெரிவித்த அவர் தொடர்ந்து கூறுகையில், இக் கட்டணங்கள் கூடவோ, குறைவாகவோ நீர்பாவனை செய்திருந்தால் அக் கட்டணங்கள் 6மாத நீர்க்கட்டண கணக்கில் நிவர்த்திசெய்து தரப்படும். இதனால் தாமதக் கட்டணம் அறவிடப்படுவதில்லை. சபைக்கு மாதாந்தம் 4.5 பில்லியன் வருமானம் கிடைக்க வேண்டியது இம்மாதம் 1.35 பில்லியனே கிடைக்கப் பெற்றுள்ளது.

ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கவும் நிதி பற்றாக்குறையாக உள்ளது. நீர் கட்டணம் சம்பந்தமாக பிரச்சினைகளை பொதுமக்கள் 24 மணித்தியால மூலம்மும் 1939 என்ற இலக்க தொலைபேசி தொடர்பு கொள்ளலாம். அல்லது நீர்கட்டண அட்டை சம்பந்தமாக எதிர்காலத்தில ஈமெயில் ஊடாக நீர்கட்டண பில்லைப் பெற்றுக் கொள்ள உங்களது ஈமெயில் முகவரியை 0719399999 என்ற இலக்கத்திற்கு குறுந்ததகவல் செய்யமுடியும்.

மேல் மாகணத்தில் அநேகமான தொழிற்சாலைகள், வீடுகள் அலுவலகங்கள் மூடியிருந்ததால் நீரைப் பெற்றுக் கொள்பவாகள் குறைவாகவே கடந்த 2 மாதங்களில் காணப்பட்டனர். கொழும்பில் 100 வருடங்கள் பழைமை வாய்ந்த நிலத்தின் கீழ் உள்ள இரும்புக் குழாய்கள் அகற்றப்பட்டு மீள புதிய குழாய்கள் அமைக்கும் திட்டம் நடைபெற்று வருகின்றது. எதிர்காலத்தில் நீர்குழாய்களில் இருந்து மண்,கல் அழுக்குகள், மடிகள் கட்டமாக அகற்றப்பட்டு சுத்தமான நீர் பொதுமக்களுக்கு வழங்கப்படும்.

ஏற்கனவே நாடு முழுவதிலும் உள்ள நீர்விநியோகத் திட்டங்கள் தொடர்ந்தும் நிர்மாணிக்கப்படும். சாதாரணமாக ஒரு வீட்டுக்கு உதாரணமாக 5 அலகுக்கு 235 ருபா சபைக்கு செலவாகின்றது. ஆனால் 106.92 ரூ பாவுக்கே சபை நீர் வழங்கி வருகின்றது. இதனால் சபை 45 வீதம் நஷ்டமடைகின்றது என்றார். இந்த ஊடக சந்திப்பில் சபையின் பொது முகாமையாளர் மற்றும் பிரதிப் பொது முகாமையாளர்களும் கலந்து கொண்டனர்.

Check Also

ஹங்வெல்லை துப்பாக்கிச் சூடு நடந்தது என்ன?

வாஹித் லெப்பை மொஹம்மது பர்சான் 46 வயதான மூன்று பிள்ளைகளின் தந்தை. ஹங்வெல்லை நகரின் ஹோட்டல் ஒன்றினை நடாத்திச் செல்பவர். …

Free Visitor Counters Flag Counter