டுபாயில் இருந்து வந்த 15 பேருக்கு கொரோனா

நாட்டில் இன்றைய தினம் மேலும் 15 பேர் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் இன்று அடையாளம் காணப்பட்ட 17 கொரோனா தொற்றாளர்களில் 15 பேர் டுபாயில் இருந்து அழைத்துவரப்பட்டவர்கள் என்றும் ஏனைய இருவரும் கடற்படை வீரர்கள் என்றும் சுகாதார பணிப்பாளர் அனில் ஜாசிங்க தெரிவித்தார்.

இவ்வாறு அடையாளம் காணப்பட்ட அனைவரும் தனிமைப்படுத்தல் முகாமில் உள்ளவர்கள் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இதையடுத்து இலங்கையில் அடையாளம் காணப்பட்டுள்ள கொரோனா தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 1045 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோய் பிரிவு தெரிவித்துள்ளது.

மேலும், கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கையும் 604 ஆக உயர்வடைந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ள 432 பேர் வைத்தியசாலைகளில் தங்கி சிகிச்சைபெற்று வருகின்றனர். 139 பேர் கொரோனா தொற்று சந்தேகத்தில் வைத்திய கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். 

அத்தோடு, கொரோனா தொற்றுக்கு இலக்காகி இலங்கையில் 9 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Check Also

ஹங்வெல்லை துப்பாக்கிச் சூடு நடந்தது என்ன?

வாஹித் லெப்பை மொஹம்மது பர்சான் 46 வயதான மூன்று பிள்ளைகளின் தந்தை. ஹங்வெல்லை நகரின் ஹோட்டல் ஒன்றினை நடாத்திச் செல்பவர். …

Free Visitor Counters Flag Counter