கலாநிதி எம். ஏ. எம். சுக்ரியின் மரணம் இலங்கை வாழ் அனைத்து முஸ்லிம் சமூகத்திற்கும் ஈடுசெய்ய முடியாத பெரும் பேரிழப்பாகும்.
ஜாமியா நளீமியா கலாபீடத்தின் பணிப்பாளரும் மற்றும் முன்னாள் பேராதனைப் பல்கலைக்கழக அரபு இஸ்லாமிய நாகரிகத்துறை முதுநிலை விரிவுரையாளரும் பன்னூலாசிரியரும் அறிஞருமான கலாநிதி எம். ஏ. எம். சுக்ரி அவர்களுடைய மரணம் இலங்கை வாழ் அனைத்து முஸ்லிம் சமூகத்திற்கும் ஈடுசெய்ய முடியாத பெரும் பேரிழப்பாகும் என்று முன்னாள் முஸ்லிம் சமய கலாசார மற்றும் தபால் துறை அமைச்சர் எம். எச். ஏ. ஹலீம் தெரிவித்தார்.
ஜாமியா நளீமியா கலாபீடத்தின் பணிப்பாளரும் மற்றும் முன்னாள் பேராதனைப் பல்கலைக்கழக அரபு இஸ்லாமிய நாகரிகத்துறை முதுநிலை விரிவுரையாளரும் அறிஞருமான கலாநிதி எம். ஏ. எம். சுக்ரி மரணம் தொடர்பில் விடுத்துள்ள அனுதாபச் செய்தில் முன்னாள் முஸ்லிம் சமய கலாசார மற்றும் தபால் துறை அமைச்சர் எம். எச். ஏ. ஹலீம் இவ்வாறு இதனைத் தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்
இவர் புகழ்மிக்க இஸ்லாமிய மார்க்க ஆய்வறிஞர். இலங்கை முஸ்லிம் சமூகத்தின் கல்வி எழுச்சிக்காக ஆற்றிய பங்களிப்புக்கள் அளப்பரியவை. அவர் எழுதிய ஆய்வு நூல்கள் இலங்கை முஸ்லிம்களின் வரலாற்றில் சிகரமாய் இருக்கும் என்பது உண்மைதான். ஆனாலும் அவரது மரணம் தொடர்பில் அதிர்ச்சியிலிருந்து என்னுடைய மனம் விடுபடமறுக்கிறது. கலாநிதி சுக்ரி மரணம் அடைந்து விட்டாரா என்கின்ற செய்தியை என்னால் ஏற்ப முடியவில்லை.
நளீமியா கலாபீடத்தின் வளர்ச்சியில் அவரது பணிகள் போற்றத் தக்கது. அவரைப் பற்றி கல்வி ரீதியாகவும் பொது நலன்கள் தொடர்பாகவும் பெருமைப்பட்டுக் கொள்ள எவ்வளவு விசயங்கள் உண்டு.
எனினும் இந்தச் சந்தர்ப்பத்தில் அந்நாரின் துயரால் துக்கத்தில் ஆழ்ந்துள்ள குடும்பத்தினர்களுக்கும் இ உறவினர்களுக்கும் அவரது மாணவர்கள் உள்ளிடட அனைவருக்கும் என்னுடைய ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக் கொள்கின்றேன் என்று அவர் மேலும் தெரிவித்தார்.