அக்குறணை பிரதேசத்திலுள்ள முன்பள்ளிப் பாடசாலைகளை சிறந்த முறையில் முன்னெடுத்துச் செல்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக இஸ்திஹார் இமாமுதீன் தெரிவித்தார்.
தீகலை பிரதேசத்தில் அமைந்துள்ள அக்குறணை பிரதேச சபைக்கு உரித்தான பாலர் பாடசாலைக்கு புதிய மாணவர்களை இணைத்துக் கொள்வதும், அவர்களுக்கான ஆரம்ப நிகழ்வு பாலர் பாடசாலையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட அக்குறணை பிரதேச சபையின் தவிசாளர் இஸ்திஹார் இமாமுதீன் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து பேசுகையில்..
இந்த பாலர் பாடசாலைக்கு சகல வசதிகளையும் கொண்ட இரு மாடிக் கட்டடம் ஒன்று அமைக்க பிரதேச சபையினால் தீர்மானிக்கப்பட்டு அதன் பணிகள் நடைபெற்று வருகின்றன. நிர்மாணப் பணிகள் பூர்த்தி அடையும் பட்சத்தில் கட் டடம் பாலர் பாடசாலை தேவைகளுக்காக கையளிக்கப்படும்.
மாணவர்கள் தங்களுடைய கல்வி வாழ்க்கையில் முதல் கட்டத்தை ஆரம்பிக்கின்ற இடம் இந்த பாலர் பாடசாலைகள்தான். இக்காலத்தில் போடப்படும் அத்திவாரமே மாணவர்களது எதிர்கால கல்வி வாழ்வை தீர்மானிக்கப் போகிறது.
குழந்தைகள் பயன்தரும் விதை போன்றவர்கள், அதனை விதைத்து விருட்சமாக மாற்ற வேண்டிய பொறுப்பு பெற்றோர்கள், ஆசிரியர்கள், அதிகாரிகளாகிய எம்மிடமே உள்ளது. மாணவர்களின் கல்வி வளர்ச்சியை மேம்படுத்த பல்வேறுபட்ட பணிகளை நாம் மேற் கொண்டு வருகின்றோம். எதிர் காலங்களிலும் இன்னும் பல்வேறு வழிகளினூடாக இதனை நாம் மேம்படுத்த எதிர்பார்த்து இருக்கின்றோம் என்று அவர் மேலும் தெரிவித்தார்.
தினகரன் 22/1/2022
தினமும் அக்குறணை வைத்தியர்கள், ஜனாஸா, தொழுகை நேரம், பாடசாலை விபரங்களை SMS மூலம் பெற்றுக் கொள்ள, கீழே உள்ள பட்டன் ஐ அழுத்தி SMS பண்ணவும் **
Daily Akurana News to your Mobile via SMS. Click the Above button and send the SMS. **
**Daily-2+tax when your phone balance is available