ஜெய்லானியில் பள்ளியாக இயங்கும் கொட்டிலை அகற்றுக

“கூர­கல – ஜெய்­லா­னியில் பள்­ளி­வா­ச­லாக இயங்­கி­வரும் தகரக் கொட்­டிலை அகற்­றிக்­கொள்­ளு­மாறு அதன் நிர்­வாக சபை­யிடம் மகஜர் ஒன்றின் மூலம் கோரிக்கை விடுத்­தி­ருக்­கிறேன். ஆனால் பள்­ளி­வாசல் நிர்­வா­கமோ, வக்பு சபையோ இது­வரை எவ்­வித நட­வ­டிக்­கையும் மேற்­கொள்­ள­வில்லை. விரைவில் அது அகற்­றப்­ப­டா­விட்டால் பலாத்­கா­ர­மாக அகற்­று­வ­தற்கு நட­வ­டிக்கை எடுக்­கப்­படும்” என நெல்­லி­கல சர்­வ­தேச பெளத்த நிலை­யத்தின் ஸ்தாப­க­ரான வத்­து­ர­கும்­புரே தம்­ம­ர­தன தேரர் தெரி­வித்தார்.

ஜெய்­லானி பள்­ளி­வாசல் பிர­தே­சத்தை அண்­மித்து பாரிய அளவில் பெளத்த தாது கோபுரம் உட்­பட தர்ம மண்­டபம், வீதிக்­கட்­ட­மைப்பு அபி­வி­ருத்தி பணிகள் என்­பன கூர­கல விஹாரை வளா­கத்தில் இடம் பெற்று வரும் நிலையில் அப்­ப­கு­தி­யி­லுள்ள தப்தர் ஜெய்­லானி பள்­ளி­வா­சலின் நிலைமை தொடர்பில் வின­வி­ய­போதே அவர் இவ்­வாறு தெரி­வித்தார்.

அவர் தொடர்ந்தும் கருத்து தெரி­விக்­கையில், கூர­கல பிர­தேசம் பெளத்­தர்­களின் புனித பிர­தேசம் மாத்­தி­ர­மல்ல தொல்­பொருள் பிர­தே­ச­மாகும். இப்­ப­கு­தி­யிலே தகர கொட்­டிலில் பள்­ளி­வாசல் அமைந்­துள்­ளது. இக்­கொட்­டிலை அகற்­றிக்­கொள்­ளு­மாறு பள்­ளி­வாசல் நிர்­வா­கத்தை மகஜர் மூலம் கோரி­யி­ருக்­கிறேன். ஆனால் அவர்கள் அமை­தி­யாக இருக்­கி­றார்கள். எவ்­வித நட­வ­டிக்­கையும் எடுக்­கப்­ப­ட­வில்லை. அங்­குள்ள ஸியா­ரத்தை வைத்­து­விட்டு பள்­ளி­வா­ச­லாக இயங்கும் தகர கொட்­டிலை அகற்றும் படி வேண்­டி­யி­ருக்­கிறேன்.

முஸ்­லிம்கள் தொழுகை நடத்­து­வ­தற்கு என்னால் ஒரு மண்­டபம் வேறாக அமைத்துக் கொடுக்க முடியும். கூர­கல பிர­தேசம் சிவ­னொ­லி­பா­த­ மலை போன்று அனைத்து மக்­களும் வந்து தங்கள் மத­வ­ழி­பா­டு­களை நடத்தும் வகையில் அமை­ய­வேண்டும்.

பள்­ளி­வாசல் நிர்­வா­கமோ அல்­லது வக்பு சபையோ இது தொடர்பில் நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுக்­கா­விட்டால் பள்­ளி­வாசல் அங்­கி­ருந்து அகற்­றப்­படும். பள்­ளி­வா­சலின் புதிய நிர்­வா­கத்­துக்குள் பிரச்­சினை நில­வு­வ­தாக அறி­கிறேன் என்றார்.

நிர்­வாக சபை உறுப்­பினர் ஏ.எம்.ஜே.எம்.ஜவுபர் இது தொடர்பில் கருத்துத் தெரி­விக்­கையில், வக்பு சபையே அதற்­கான தீர்­மா­னத்தை மேற்­கொள்ள வேண்டும்.இது தொடர்பில் தாம் நட­வ­டிக்கை முன்­னெ­டுப்­ப­தாக வக்­பு­சபை எம்­மிடம் தெரி­வித்­துள்­ளது.

தப்தர் ஜெய்­லானி பள்­ளி­வாசல் மற்றும் ஸியாரம் சுமார் 800 வரு­ட­கால வர­லாறு கொண்­ட­வை­யாகும். நாட்டின் பல பாகங்­க­ளி­லி­ருந்தும் முஸ்லிம்கள் இங்கு விஜயம் மேற்கொள்வது குறிப்பிடத்தக்கது. கடந்த 16 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ கூரகல புனித பிரதேச நிர்மாணப்பணிகளை நேரில் சென்று பார்வையிட்டார். எதிர்வரும் வெசாக் அரச தேசிய நிகழ்வு கூரகலயில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

(ஏ.ஆர்.ஏ.பரீல்) விடிவெள்ளி பத்திரிகை – பக்கம் 01 2022-01-20

Check Also

ஹங்வெல்லை துப்பாக்கிச் சூடு நடந்தது என்ன?

வாஹித் லெப்பை மொஹம்மது பர்சான் 46 வயதான மூன்று பிள்ளைகளின் தந்தை. ஹங்வெல்லை நகரின் ஹோட்டல் ஒன்றினை நடாத்திச் செல்பவர். …

Free Visitor Counters Flag Counter