இலங்கை என்ன செய்யப் போகிறது?

பிச்சைக்காரனுக்கு சுடுசோறு கிடைக்காது என்றொரு பேச்சுவழக்கு உண்டு. இன்று இலங்கையின்‌ நிலைமையும்‌ அதுவாகவே அமைந்துள்ளது.

நாலாப்பக்கமும்‌ கடன்‌ சுமை, தேசிய நெருக்கடிகளை சமாளிக்க நிதி இல்லை, பணத்தை அச்சடித்து செலவுகளை கையாள நினைத்தாலும்‌ இறக்குமதியை செய்ய டொலர்‌ இல்லை. இந்த ஆண்டில்‌ மாத்திரம்‌ 6.7 பில்வியன்‌ ௮மெரிக்க டொலர்களை கடனாக செலுத்தியாக வேண்டும்‌. இந்த நெருக்கடிகளை சமாளிக்க நிதி இல்லை, பணத்தை அச்சடித்து செலவுகளை கையாள நினைத்தாலும்‌ இறக்குமதியை செய்ய டொலர்‌ இல்லை. இந்த ஆண்டில்‌ மாத்திரம்‌ 6.7 பில்வியன்‌ ௮மெரிக்க டொலர்களை கடனாக செலுத்தியாக வேண்டும்‌. இந்த ஆண்டு தொடக்கம்‌ எதிர்வரும்‌ 2026 ஆம்‌ ஆண்டு வரையில்‌ இலங்கை 26 பில்லியன்‌ அமெரிக்க டொலரை சர்வதேச கடனாக செலுத்த வேண்டியுள்ளது.

தேசிய ரீதியில்‌ செலவு செய்ய வருமானம்‌ இல்லாத நிலையிலும்‌, வெளிநாட்டு கையிருப்பும்‌ பற்றாக்குறையாகிய நிலையில்‌ உண்மையான பிரச்சினைகளை மூடி மறைக்க வெவ்வேறு மாற்று வேலைத்திட்டங்களை கையாள அரசாங்கம்‌ முயற்சித்தது. ஒரு பிரச்சினைக்கு தவறான தீர்வை வழங்க முயற்சித்ததன்‌ விளைவாக பல்வேறு பிரச்சினைகள்‌ தலைதூக்க ஆரம்பித்தன. ஆரம்பத்தில்‌ இருந்தே பொருளாதார கொள்கையில்‌ விட்ட தவறுகள்‌ காரணமாக இன்று நெருக்கடிகளையும்‌ அடுத்தடுத்து பல பிரச்சினைகளை சந்திக்க நேர்ந்துள்ளது.

இலங்கை வாங்கியுள்ள மொத்த கடன்களில்‌ 50 சதவீதமானவை சர்வதேச பிணை முறிகள்‌ மூலமாக பெற்றுக்கொள்ளப்பட்டவையாகும்‌. சர்வதேச பிணை முறிகளில்‌ கடன்களை பெற்றுக்கொள்ளும்‌ வேளையில்‌, அதற்கு எந்தவித நிபந்தனைகளும்‌ இல்லை. உதாரணமாக கூறுவதென்றால்‌, அபிவிருத்தி கடன்களை பெற்றுக்கொள்ளும்‌ வேளையில்‌ அந்த கடன்களில்‌ வேறு செலவுகளை முன்னெடுக்க முடியாது. குறித்த அபிவிருத்தி திட்டத்திற்கான நிபந்தனைகள்‌ பின்பற்றப்பட வேண்டும்‌. ஆனால்‌, பிணை மூறிகளில்‌ பெற்றுக்கொள்ளும்‌ வேளையில்‌ அதனைக்கொண்டு நாம்‌ செய்யவுள்ள வேலைத்திட்டம்‌ என்னவென்பதைக்‌ கூற வேண்டிய அவசியம்‌ இல்லை.

அதற்கமையவே கடந்த 2007 ஆம்‌ ஆண்டில்‌ 500 மில்லியன்‌ அமெரிக்க டொலர்‌ சர்வதேச பிணைமுறி கடனாக பெற்றுக்கொள்ளப்பட்டது. 2019 ஆம்‌ ஆண்டாகும்‌ வேளையில்‌ இந்த தொகையானது 17,500 மில்லியன்‌ அமெரிக்க டொலராக அதிகரித்‌ துள்ளன. இவ்வாறு பெற்றுக்கொள்ளப்பட்ட கடன்களால்‌ செய்யப்பட்ட முதலீடுகள்‌ என்ன? எதற்காக பயன்படுத்தப்பட்டது? என்ற கேள்விக்கு பதில்‌ இல்லை. கடன்கள்‌ ஒருபோதும்‌ குற்றமல்ல, ஆனால்‌ அவ்வாறு வாங்கிய கடன்களில்‌ செய்துகொண்ட முதலீடுகள்‌ என்ன? அதனால்‌ எமக்கு கிடைக்கும்‌ வருமானம்‌ என்ன என்பதில்‌ தான்‌ கேள்வி எழுப்ப வேண்டியுள்ளது.

தவறான அரச கொள்கைகளே இந்த நெருக்கடிகளுக்கு காரணமாகும்‌. குறிப்பாக இவர்கள்‌ ஆட்சிக்கு வந்தவுடன்‌ வரிக்கொள்கையை மாற்றியமையே அனைத்து நெருக்கடிகளுக்கும்‌ காரணமாகும்‌. இதனால்‌ 2020ஆம்‌ ஆண்டில்‌ மாத்திரம்‌ 500 பில்லியன்‌ அரச வருமானம்‌ இல்லாது போனது. 2021 ஆம்‌ ஆண்டிலும்‌ இதே அளவிலான வருமானம்‌ இல்லாது போனது. அடுத்து வரும்‌ இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளுக்கு இதன்‌ தாக்கம்‌ இருக்கும்‌.

இலங்கை வரி இராச்சியமா அல்லது கடன்‌ இராச்சியமா என்ற கேள்விக்கு பல்வேறு வாத பிரதிவாதங்களை முன்வைக்கலாம்‌. ஆனால்‌, எமது கடன்‌ சுமைகளை நாமே பார்த்துக்கொள்ளாது எதிர்கால சந்ததிக்கு கொடுத்தமை மிகப்பெரிய தவறாகும்‌. மக்களின்‌ பைகளுக்கு ஒரு சதம்‌ கூட சென்றடையாது, அதிவேக நெடுஞ்சாலைகளை அமைப்பதிலும்‌, விமான நிலையங்களை அமைப்பதிலும்‌ அர்த்தம்‌ இல்லை. இதன்‌ விளைவாக என்ன நடந்துள்ளது? உணவுக்காகவும்‌ மருந்துக்காகவும்‌ கை ஏந்த வேண்டிய நிலைக்கு இலங்கை தள்ளப்பட்டுள்ளது.

எரிபொருள்‌ தேவைக்காக நைஜீரியா, ஓமான்‌ நாடுகளிடம்‌ கடன்‌ கேட்க வேண்டிய நிலைமை. வெளிநாட்டு கையிருப்பையே கடன்களில்‌ நிரப்ப வேண்டிய மிக மோசமான நிலைக்கு நாடு வந்துவிட்டது. இது ஒன்றும்‌ இலங்கையின்‌ அடையாளமாகவே, புகமாகவோ பெருமையாகவோ பேச முடியாது. பணம்‌ தரமாட்டோம்‌. மாறாக உணவு பொருட்களை தருகின்றோம்‌ என சர்வதேசம்‌ எம்மை மட்டந்தட்டும்‌ அளவிற்கு இலங்கையை மண்டியிட வைத்துவிட்டனர்‌ எமது தலைவர்கள்‌.

கொவிட்‌ -19 வைரஸ்‌ தொற்றுதான்‌ எமது வீழ்ச்சிக்கு காரணம்‌ என கூறுவது ஏற்றுக்கொள்ளவே முடியாத காரணமாகும்‌. உலகிற்கே கொவிட்‌ வைரஸ்‌ சவாலாக அமைந்தது உண்மைதான்‌. ஆனால்‌ அது மட்டுமே இலங்கையின்‌ பொருளாதாரத்திற்கு தாக்கத்தை செலுத்தவில்லை. அரசாங்கம்‌ தனது நம்பிக்கையையும்‌ நிலையான உறுதிப்பாட்டையும்‌ வளர்த்துக்கொள்ளவில்லை. அதுவே நாட்டின்‌ வீழ்ச்சிக்கு பிரதான காரணமாகும்‌. கொவிட்‌ வைரஸாக்கு முன்னர்‌, 33 பில்லியன்‌ அமெரிக்க டொலராக இருந்த பங்களாதேசின்‌ வெளிநாட்டு கையிருப்பு தற்போது 44 பில்லியன்‌ அமெரிக்க டொலராக அதிகரித்துள்ளது. கொவிட்டுக்கு முன்னர்‌ 79 பில்லியன்‌ அமெரிக்க டொலராக இருந்த வியட்நாமின்‌ வெளிநாட்டு கையிருப்பு தற்போது 105 பில்லியன்‌ அமெரிக்க டொலராக அதிகரித்துள்ளது.

ஆனால்‌, இலங்கையிலோ கொவிட்‌ வைரஸாக்கு முன்னர்‌ 7.5 பில்லியன்‌ அமெரிக்க டொலராக இருந்த வெளிநாட்டு கையிருப்பு, தற்போது 2 பில்லியனுக்கும்‌ குறைவடைந்துள்ளது. சீனாவிடம்‌ கடன்‌ வாங்கி அதனை 3.1 பில்லியனாக்கியுள்ளனர்‌ என்பது வேறு விடயம்‌. கொவிட்‌ காலத்திலும்‌ கூட. இந்தியாவின்‌ நேரடி வெளிநாட்டு முதலீடாக 84 பில்லியன்‌ அமெரிக்க டொலர்‌ கிடைத்துள்ளதாம்‌. சிங்கப்பூர்‌ 90 பில்லியன்‌ அமெரிக்க டொலர்‌ முதலீடுகளை பெற்றுள்ளதாக தரப்படுத்தல்கள்‌ கூறுகின்றன. ஆனால்‌ இலங்கையில்‌ 0.5 வீத முதலீடே பதிவாகியுள்ளது.

இதற்கெல்லாம்‌ அரசாங்கத்தின்‌ மீது சர்வதேச முதலீட்டாளர்களின்‌ நம்பிக்கையில்லாத்‌ தன்மையே காரணம்‌. முதலீடுகள்‌ என்ற பெயரில்‌ அரச சொத்துகளின்‌ பங்குகளை விற்கும்‌ கொள்கையையே இன்று எமது ஆட்சியாளர்கள்‌ கையாள்கின்றனர்‌. இந்தச்‌ செயற்பாடுகள்‌ காரணமாக இன்று இலங்கையின்‌ வங்கிக்‌ கட்டமைப்பு மிகப்பெரிய அச்சுறுத்தலில்‌ உள்ளது. வங்கிகளில்‌ டொலர்‌ பற்றாக்குறை மட்டுமல்ல, ரூபாயின்‌ பற்றாக்குறையும்‌ ஏற்பட்டுள்ளது. எமது வங்கிகள்‌ மீதான நம்பிக்கை இழக்கப்பட்டு வருகின்றது. தரப்படுத்தல்‌ நிறுவனங்கள்‌ இலங்கையின்‌ வங்கிகளை தரப்படுத்தலில்‌ கீழ்நிலைப்படுத்தியுள்ளன. இது வங்கிக்கட்டமைப்பை பாரிய அளவில்‌ பாதிக்கும்‌. சர்வதேச நாடுகளும்‌, தரப்படுத்தல்களும்‌ எமக்கு அவசியம்‌ இல்லையென நாம்‌ கூறினாலும்‌, சர்வதேசம்‌ எம்மை அவ்வாறு பார்க்கப்போவதில்லை. தரப்படுத்தல்‌ நிறுவனங்களின்‌ சான்றுகளை வைத்தே சர்வதேசம்‌ எம்முடன்‌ கொடுக்கல்‌ வாங்கல்களை செய்யப்போகின்றது. ஆகவே, இப்போதாவது சர்வதேச நாணய நிதியத்தை நாடுவதன்‌ அவசியம்‌ குறித்து சிந்தித்தாக வேண்டும்‌. அதேபோல்‌ நாட்டின்‌ நம்பிக்கையை கட்டியெழுப்ப வேண்டும்‌. இது இரண்டுமே ஒன்றுடன்‌ ஒன்று தொடர்புபட்ட காரணியாகும்‌. நம்பிக்கையை கட்டியெழுப்பும்‌ வேலைத்திட்டத்தில்‌ நாம்‌ எவ்வாறு மீளப்போகின்றோம்‌ என்பதை சர்வதேசத்திற்கு வெளிப்படுத்த வேண்டும்‌.

குறிப்பிட்ட காலத்திற்குள்‌ நாம்‌ நாட்டிற்குள்‌ செய்ய வேண்டிய அவசியமான வேலைத்திட்டங்கள்‌, மனித உரிமைகளை, சட்ட சுயாதீனத்தை, ஐக்கியத்தை வெளிப்படுத்தி அதன்‌ மூலமாக சர்வதேசம்‌ ஏற்றுக்கொள்ளும்‌ மற்றும்‌ நம்பிக்கை வைக்கும்‌ விதமாக அபிவிருத்திகளை செய்ய முடியும்‌ என்பதை காட்டியாக வேண்டும்‌. குறிப்பாக ஊழல்‌, கொள்ளை இல்லை என்பதை வெளிப்படுத்த வேண்டும்‌. சர்வதேச நாணய நிதியம்‌ பூச்சாண்டி, அல்ல. 1950களில்‌ இருந்தே சர்வதேச நாணய நிதியத்தை நாம்‌ கையாண்டு வருகின்றோம்‌. 1965 ஆம்‌ ஆண்டளவில்‌ இலங்கை சர்வதேச நாணய நிதியத்திடம்‌ இருந்து முதன்‌ முதலில்‌ கடன்களை பெற்றதில்‌ இருந்து இன்றுவரை 76 தடவைகள்‌ கடன்களை பெற்றுள்ளது.

சர்வதேச நாணய நிதியத்துடன்‌ உள்ள பிரதான நாடுகளான அமெரிக்கா மற்றும்‌ ஐரோப்பிய ஒன்றியத்தின்‌ ஆதிக்கம்‌ இருப்பதால்‌ திறந்த பொருளாதாரத்திற்கு செல்ல வேண்டும்‌ என்ற அழுத்தம்‌ கொடுப்பார்கள்‌ மற்றும்‌ வெவ்வேறு நிபந்தனைகளை முன்வைப்பார்கள்‌ என பொதுவான கருத்தொன்று உருவாக்கப்பட்டுள்ளது. விலை நிர்ணயத்தை நீக்குதல்‌, ௮ரச வருமானத்தை அதிகரித்தல்‌, அநாவசிய செலவுகளை கட்டுப்படுத்தல்‌ என்ற நிபந்தனைகள்‌ உள்ளன. அரசாங்கம்‌ நாட்டின்‌ அநாவசிய செலவுகளை கட்டுப்படுத்தி இருப்பை காட்டிக்கொண்டே இருக்க வேண்டும்‌. இது ஒரு நாட்டிற்கு இருக்க வேண்டிய அவசியமான கொள்கை என்பதை கருத்தில்‌ கொள்ள வேண்டும்‌. உண்மையில்‌ சர்வதேச நாணய நிதியம்‌ முன்வைக்கும்‌ நிபந்தனைகள்‌ எமக்கு அவசியமான நிபந்தனைகளாகும்‌. இப்போதுள்ள நெருக்கடியில்‌ அவர்கள்‌ விதிக்கும்‌ நிபந்தனைகள்‌ மிகவும்‌ ஆரோக்கியமானதாகும்‌. அதுமட்டும்‌ அல்ல சர்வதேச நாணய நிதியத்திடம்‌ இருந்து கடன்களை பெறும்‌ வேளையில்‌ நாமே வேலைத்திட்டத்தை முன்வைக்க முடியும்‌. ஆனால்‌ சர்வதேச நாணய நிதியம்‌ குறித்து சரியாக விளங்கிக்கொள்ளாது முன்வைக்கும்‌ விமர்சனங்களே மக்களிடத்தில்‌ தெளிவின்மைக்கு காரணமாகும்‌.

சர்வதேச நாணய நிதியத்தை நாடாது போனாலும்‌ கூட அவர்கள்‌ எதனை கூறுவார்களோ அதனை இப்போதே நடைமுறைப்படுத்த ஆரம்பித்துவிட்டோம்‌. ஆகவே இதனையே சர்வதேச நாணய நிதியமும்‌ கூறப்போகின்ற காரணத்தினால்‌ புதிதாக அச்சம்‌ கொள்ளத்தேவையில்லை. ஆனால்‌ இருக்கும்‌ பிரச்சினை என்னவென்றால்‌ இங்குள்ள குடும்ப ஆட்சி, சர்வாதிகார போக்கு, அடக்குமுறைகளை கைவிட்டே ஆகவேண்டும்‌. ஆகவே அரசாங்கத்தில்‌ இருந்துகொண்டு

தீர்மானம்‌ எடுக்கும்‌ முக்கிய புள்ளிகள்‌ நாட்டையும்‌ மக்களையும்‌ பற்றி சிந்திக்க முன்னர்‌ அவர்களின்‌ குடும்ப ஆட்சியை பற்றி சிந்திப்பதன்‌ காரணமாகவும்‌, தமக்கு பணம்‌ சம்பாதிக்க வாய்ப்புகள்‌ இல்லாது போகும்‌ என்பதற்காகவுமே சர்வதேச நாணய நிதியத்தை நாடுவதை தவிர்த்துக்கொண்டுள்ளனர்‌ என்ற பெரிய குற்றச்சாட்டு ஒன்றும்‌ உள்ளது.

ஊழலில்‌ நிறைந்து வழியும்‌ ஒரு நாட்டில்‌ எந்த முதலீடுகளை செய்தாலும்‌ அந்நாடு அபிவிருத்தியடையப்போவதில்லை. நேரடி செலவை விட நாட்டில்‌ மறைமுக செலவு நூறுக்கு 800 வீதத்தினால்‌ அதிகரித்துள்ளது. இலங்கையின்‌ நேரடி செலவு 100 சதவீதமாக இருந்தால்‌ மறைமுக செலவுகள்‌ 50 வீதமாக இருக்கவேண்டும்‌. ஆனால்‌ இலங்கையில்‌ நூறுக்கு முன்னூறு வீதம்‌ மறைமுக செலவு என்றால்‌ கண்டிப்பாக இலங்கை ஊழலில்‌ நிறைந்துள்ளது என்றே அர்த்தமாகும்‌. இதனை நிறுத்தினாலே போதும்‌ நாட்டை மீட்டெடுக்க முடியும்‌. அதற்காக உருப்படியான ஆட்சியாளர்களை உருவாக்குவதில்‌ தான்‌ எமது எதிர்காலம்‌ தங்கியுள்ளது.

-டேசா- தமிழ் மிரர் 8/01/2022

Check Also

ஹம்தியின் மரணம் குறித்து விரிவான விசாரணை நடத்துக

சிறுநீரக சத்திர சிகிச்சைகளை அடுத்து உயிரிழந்த கொழும்பு கொட்டாஞ்சேனையைச் சேர்ந்த 3 வயதான ஹம்தி பஸ்லிமின் மரணம் தொடர்பில் விரிவான …

Free Visitor Counters Flag Counter