சூறாவளி அச்சம் காரணமாக தென்மேற்கு ஜப்பானில் நான்கு மாகாணங்களில் 810,000 க்கும் மேற்பட்ட மக்களை வெளியேறுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
அதேநேரம் நாட்டின் 10 மாகாணங்களில் உள்ள 5.5 மில்லியன் மக்களை வெளியேறுமாறும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
சூறாவளியானது ஞாயிற்றுக்கிழமை தீவிரமடையும் என்று எதிர்பார்க்கப்படுவதுடன் இதனால் கனமழை, புயல் மற்றும் மணிக்கு 100 மைல் (160 கிமீ / மணி) வேகத்தில் பலத்த காற்று வீசும் என்றும் கூறப்படுகிறது.
பல ஆண்டுகளாக இப்பகுதியில் தாக்கிய பலமான புயல்களில் ஒன்றான இது, ஜப்பான் முழுவதும் தொழிற்சாலைகள், பாடசாலைகள் மற்றும் வணிகஸ்தலங்களை மூடுவதற்கு வழிவகுத்துள்ளது.
அத்துடன் நூற்றுக்கணக்கான விமானங்கள் மற்றும் ரயில் சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன.