கொழும்பிலுளள் பிரபல முஸ்லிம் மகளிர் சர்வதேச பாடசாலை ஒன்றில் இடம்பெற்றுள்ளதாகக் கூறப்பட்ட, பாரிய நிதி மோசடி காரணமாக, அந்த பாடசாலை வீழ்ச்சிப் பாதைக்கு தள்ளப்பட்டிருப்பது குறித்து பெற்றார் கவலை தெரிவித்துளள்னர்.
குறிப்பிட்ட பாடசாலையின் நிர்வாகத்துடன் தொடர்புடைய, முக்கியஸ்தர்கள் சிலர் செய்ததாக கூறப்படும் மோசடிகள் குறித்து, சமூக ஊடகங்களில் தகவல்கள் வெளியான போதும் அவர்கள் குறித்து இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாதது குறித்து, பெற்றார் மற்றும் நலன்விரும்பிகள் அதிருப்தியை வெளியிட்டுள்ளனர்.
அண்மையில் நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா தொற்று காரணமாக நாட்டிலுள்ள சர்வதேசப் பாடசாலைகள் பெற்றாருக்கு பாடசாலை கட்டணத்தில் சலுகைகளை வழங்கியபோதும், 33 வருடங்களாக லாப நோக்கமின்றி இயங்கும் இப் பாடசாலை எவ்வித நிவாரணமும் வழங்காதது குறித்து, பெற்றார் அதிருப்தி தெரிவித்துளள் னர்.
இவ்வாறான பாடசாலைகளில் அனைவரும் கட்டணத்தில் சலுகை வழங்குமாறு கல்வி அமைச்சு வேண்டுகோள் விடுத்தும், இப்பாடசாலை இதுவரை முழுக் கட்டணத்தையும் அறவிடுவது குறித்து பெற்றார் விசனம் தெரிவித்துள்ளனர்.
இதேநேரம் இம்மாத மத்தியில் நடைபெறவுள்ள இந்தப் பாடசாலை வருடாந்த பொதுக்கூட்டத்தில் 80 மில்லியன் ரூபா நிதி மோசடி செய்யப்பட்டுள்ளதாக சமூக ஊடகங்களில் செய்தி வெளியானதனை அடுத்து முஸ்லிம் பெண்களுக்குரிய இப்பாடசாலையும் வீழ்ச்சி கண்டு விடலாம் என்பதனால் இதனைப் பாதுகாப்பதற்கு முன்வருமாறு உலமாக்கள், கல்வியியலாளர்கள் உயர் நிலையிலுளள் இக்கல்லூரி மாணவிகள் முன்வர வேண்டும் என இப்பாடசாலையைப் பாதுகாப்பதற்கான முயற்சியிலீடுபட்டுள்ள நலன் விரும்பிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.