நியூ டயமண்ட் கப்பலின் தீ பரவல் கட்டுக்குள்! இந்திய கடலோர காவல்படை தகவல்

எம்.டி.நியூ டயமன் என்ற கப்பலில் ஏற்பட்ட தீபரவலை  கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக இந்தியா கடலோர காவல்படை பிரிவு தமது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது. 

அம்பாறை சங்கமன்கண்டி இறங்குதுறையில் இருந்து 38 கடல்மைல்களுக்கு அப்பால் உள்ள கடற்பிராந்தியத்தில் இந்தியா நோக்கிச்சென்ற எம்.டி.நியூ டயமன் என்ற கப்பலில் நேற்று தீப்பரவல் ஏற்பட்டது. 

Image

இலங்கை கடற்படை, இலங்கை விமானப்படை, இலங்கை துறைமுக ஆணையம், இந்திய கடற்படை மற்றும் இந்திய கடலோர காவல்படை ஆகியவை  இணைந்து பாரிய தீயணைப்பு முயற்சிகளுக்குப் பின்  எம்.டி.நியூ டயமன் கப்பலில் ஏற்பட்ட  தீ பரவலை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளது.

தீயை முழுமையாகக் கட்டுப்படுத்த சுமார் 10 நாட்கள் ஆகக் கூடும் என விமானப்படை பணிப்பாளர் (கட்டுப்பாட்டு பிரிவு) வைஸ் மார்ஷல் பி.டி.கே.டி.ஜயசிங்க தெரிவித்த நிலையில் தீ கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக இந்தியா கடலோர காவல்படை பிரிவு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

Image
Image
Image

Check Also

ஹங்வெல்லை துப்பாக்கிச் சூடு நடந்தது என்ன?

வாஹித் லெப்பை மொஹம்மது பர்சான் 46 வயதான மூன்று பிள்ளைகளின் தந்தை. ஹங்வெல்லை நகரின் ஹோட்டல் ஒன்றினை நடாத்திச் செல்பவர். …

Free Visitor Counters Flag Counter