முழு உலகையும் நடுநடுங்க வைத்து பாரிய அளவில் சேதங்களை ஏற்படுத்திய ஒரு நோயாக கொரோனா வைரஸ் காணப்படுகிறது. இதனடிப்படையில் இலங்கையிலும் இதன் தாக்கம் அதிகரிக்கின்றது. இலங்கையில் 05.05.2020 இன்று வரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 755 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 9 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்நோயைக் கட்டுப்படுத்த இலங்கை மக்கள் தாங்களால் முடிந்த ஒத்துழைப்பை இலங்கை அரசாங்கத்திற்கு வழங்கி வருகின்றார்கள். அத்துடன் முப்படையினர், பொலிஸார், அரச நிறுவனங்கள் ,தனியார் நிறுவனங்களும் அவர்களால் முடிந்த ஒத்துழைப்பை வழங்குகின்றார்கள்.
கடந்த நாட்களில் பௌத்த, இந்து, கத்தோலிக்க சகோதரர்களின் சித்திரை புத்தாண்டு , உயிர்த ஞாயிறு போன்ற கொண்டாட்டங்கள், வழிபாடுகள் வந்தாலும் அதை வீடுகளில் இருந்தே எளிமையான முறையில் கொண்டாடினார்கள். அதே போல் இஸ்லாமியர்களான நாங்கள் புனித ரமழானுடைய மாதத்தில் இருந்து கொண்டு இருக்கின்றோம்.
இந்த கால கட்டத்தில் இலங்கை மக்கள் என்ற வகையில் எங்களுக்கும் பாரிய கடமை இருக்கிறது.கொரோனா வைரஸை கட்டுப்படுத்த வீடுகளில் இருந்தே ரமழானுடைய வழிபாடுகளை மேற்கொள்ள வேண்டும். அதிகமான நன்மைகளை பெறக்கூடிய இந்த மாதத்தில் தானதர்மங்கள் செய்ய வேண்டும்.
உலகில் ஏற்பட்டுள்ள இந்த அசாதாரண சூழ்நிலையைப் புரிந்து கொண்டு பெருநாளுக்காக ஆடைக் கொள்வனவு செய்வதை முற்றிலும் தவிர்க்க வேண்டும் . பெருநாளை வீடுகளில் இருந்து எளிமையாக கொண்டாட வேண்டும் மக்களுடைய ஒத்துழைப்பு இல்லாமல் இந் நோயைக் கட்டுப்படுத்த முடியாது. எனவே இலங்கை மக்களாக நாம் அனைவரும் ஒன்றிணைந்து இந் நோயை இல்லாதொழிப்போம்.