• நீங்கள் அக்குறணைக்கு திரும்பி வருவதற்கான காரணம் மிகவும் அத்தியாவசியமான ஒன்றா என ஒரு முறைக்கு இரண்டு முறை நினைத்துப் பாருங்கள்.
• நீங்கள் அக்குறணைக்கு வெளியே தற்போது உள்ள பிரதேசத்தில் உள்ள இடத்தில் இருந்து அக்குறணைக்கு வரமுடியுமா என அந்தப் பிரதேசத்திற்குரிய உரிய அதிகாரிகளை(MOH) தொடர்புகொண்டு உறுதிசெய்துகொள்ளுங்கள். ஒரு பகுதியோ ஊரோ high risk zone ஆக பிரகடனம் செய்யப்பட்டு இருந்தால் அந்த இடத்திற்கு உட்செல்வதும் அங்கிருந்து வெளியேறுவதும் தடுக்கப்பட்டுள்ளது என்பதை கவனத்தில் கொள்ளவும்.
கொழும்பு, களுத்துறை, கம்பஹா, புத்தளம் மாவட்டங்களில் இருந்து வருவது முற்றிலுமாக தடை செய்யப்பட்டுள்ளது!
• உங்களுக்கு காய்ச்சல், இருமல், தொண்டை நோவு போன்ற கோவிட்-19 நோய் அறிகுறிகள் ஏற்பட்டால் நீங்கள் வருவதற்கு முன்னர் மீண்டும் ஒருமுறை உங்கள் பிரதேசத்திற்குரிய சுகாதார அதிகாரிகளிடம் தொடர்புகொண்டு அவர்களின் வழிகாட்டலுக்கு ஏற்ப செயற்படுங்கள்.
• அவ்வாறு நீங்கள் வருவதற்கான தடைகள் ஏதும் இல்லை என உறுதிப்படுத்தப்பட்டால் மட்டும் அக்குறணைக்கு வருவதே பொருத்தமான விடயமாக அமையும். நீங்கள் வருவதற்கு ஒரு நாளிற்கு முன்னர் நீங்கள் வரவிருக்கும் அக்குறணையில் உள்ள மஹல்லாவிலுள்ள பள்ளி நிர்வாகத்தில் அக்குறனைக்கு வருபவர்கள் சம்பந்தமாக விபரங்களை சேர்க்கும் உறுப்பினரிடம் கீழ்வரும் விடயங்களை அறிவிக்கவும்.
▪︎ உங்கள் பெயர்
▪︎ தொலைபேசி இலக்கம்
▪︎ வருகை தரும் திகதி
▪︎ வருகை தருவதற்கான காரணம்
▪︎ தொழில் முகவரி
▪︎ எந்த மாவட்டம், MOH பிரிவு மற்றும் பொலிஸ் பிரிவிலிருந்து வருகை தருகின்றீர்கள்?
▪︎ வருகை தரும் முறை – தினந்தோறும்/வாரம் ஒருமுறை/வேறுமுறை
▪︎ பிரயாணிக்கும் வாகனம் – சொந்த வாகனம்/பொது/வேறு
▪︎ பிரயாணிக்கும் தடவைகள் – தினந்தோறும்/வாரம் ஒருமுறை/வேறு முறை
இப்படிக்கு, அக்குறணை MOH, பிரதேச செயலாளர். சுகாதாரக் குழு