அஸ்ஸலாமு அலைக்கும்
அக்குறணை வர்த்தக சங்கத்தின் முக்கிய அறிவித்தல்_
நாளை 04/05/2020 திங்கட்கிழமை அக்குறணை நகரின் Lockdown மற்றும் ஊரடங்கு நீக்கப்பட்டு கடைகள் திறக்கப்படும் போது கடை உரிமையாளர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் கடைபிடிக்க வேண்டிய ஒழுங்குகள் பின்வருமாறு
திங்கட்கிழமை அனைத்து விதமான கடைகளும் திறக்கப்படும் என்பதை அறியத்தருகின்றோம்.
பஸாரிற்கு வருகை தரும் அனைவரும் கண்டிப்பாக முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும்.
பெண்கள், வயோதிபர்கள், நோயாளிகள் மற்றும் சிறார்கள் பஸாரிற்கு வருவதை தவிர்ந்துகொள்வது சிறந்தது.
பஸாரிற்கு வருகை தரும் வாடிக்கையாளர்களை நோய் தொற்று ஏற்படா வண்ணம் சமூக இடைவெளியினை பின்பற்றுவதற்கான வழிகாட்டல்களை வழங்குவதற்கு அக்குறணை வர்த்தக சங்கத்தினால் தொண்டர் குழு நியமிக்கப்பட்டு பொது மக்களுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்படும்.
வீதியோர வியாபாரங்கள் (Pavement Business) முற்றுமுழுதாக தடைசெய்யப்பட்டுள்ளதாக போலிஸார் மற்றும் அக்குறணை பிரதேச செயலாளர் அறியதந்துள்ளார்.
பஸாரிற்கு வருகை தரும் பொது மக்கள் பின்பற்ற வேண்டிய ஒழுங்குகள் மற்றும் கட்டுப்பாடுகள் தொடர்பில் அனைத்து பள்ளிவாயில்கள் மற்றும் வீதி அறிவிப்புக்கள் மூலமும் பொதுமக்களுக்கு வழங்கப்படும் என்பதையும் தெரிவித்துக்கொள்கின்றோம்.
தலைவர் அ.வர்த்தக சங்கம்
மேலதிக விபரங்களுக்கு
Mr.MRM Nazlan(Sec) 0776283306
Mr.AFM Naleem(V.P) 0773593230
Mr.AFM Rizvy (V.P) 0773293279
இப்படிக்கு தலைவர் அக்குறணை வர்த்தக சங்கம்