மேற்கு ஆசியா – அரசியல் நலன்களை தேடும் அரசுகள்

கொரோனா அரசியல் மூலம் பிராந்திய மற்றும் உலக வல்லரசுகள் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளையும், இராணுவ ரீதியான பலப்படுத்தல் பரீட்சைகளையும், அரசுகளை நெருக்கடிக்குள்ளாக்கும் நடவடிக்கைகள் அல்லது நட்பு ரீதியான பலமான உறவுகளை ஏற்படுத்துவதன் மூலம் பரஸ்பர உதவிகளை வழங்குதல் போன்றவற்றிற்கான களங்களாக மேற்காசியா மாறிவருகின்றது. அந்தவகையில் முதலாவதாக கொரோனா வைரஸ் அச்சத்தினையும் தாண்டி பிராந்திய வல்லரசுகள் தங்களின் தாக்குதல் நடவடிக்கைகளில் ஈடுபடுவதை அவதானிக்க கூடியதாக உள்ளது. துருக்கி, ஈராக்,
சிரியா ஆகிய நாடுகளின் சில பகுதிகளை ஒருங்கிணைத்து குர்திதான் எனும் தனி நாட்டை உருவாக்க போராடி வருகின்றனர். ஈராக் நாட்டின் வடக்கு பகுதியில் ஆதிக்கம் செலுத்திவரும் குர்தீ போராளிகள் கான்டில் மலைப்பகுதியில் முகாம்களை அமைத்துள்ளனர்.

மேலும் இங்கிருந்தவாறே துருக்கிய எல்லையில் தாக்குதல் நடவடிக்கைக ளையும் மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் ஏப்ரல் 24 அன்று ஈராக் நாட்டின் கான்டில் மலைப்பகுதியில் அமைந்துள்ள ஹரா மாகாணத்தில் பதுங்கி இருந்த குர்தி போராளிகளை குறி வைத்து துருக்கி விமானப்படை மேற்கொண்ட தாக்குதலில் 8 போராளிகள் மரணமடைந்தனர்.

உண்மையில் குர்திதானின் பெரும் பாலான பகுதிகளை துருக்கி ஆக்கிர மித்துள்ளது. அவற்றை மீள அவ்இன மக்களிற்கு வழங்க மறுக்கும் துருக்கி குர்தீ போராட்டத்தினை மிக மோசமாக அடக்கி வருகின்றது. ஆனாலும் அமெ ரிக்கா மற்றும் ரஷ்ய நாடுகளின் தலையீட்டினால் குர்தீ போராட்டத்தினை துருக்கியினால் முற்றாக சிதைக்க முடியாமல் போனது. கொரோனா யுத்தத்தினால் உலகமே ஸ்தம்பித்து போய் இருக்கும் இக்கால கட்டத்தினை துருக்கி தனக்கு சாதகமாக கொண்டு குர்தீ; இனப் போராளிகளை அழிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளமையை அவதானிக்கலாம்

இதே போன்று ஏப்ரல் 27 ஆம் திகதி சிரியா நாட்டுத் தலைநகர் டமாஸ்கஸ் அருகே இஸ்ரேலிய போர் விமானங் கள் ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியுள்ளது. இது தொடர்பாக சிரியா இராணுவம் வெளியிட்டதாக அந்நாட்டு அரசு ஊடகம் வெளியிட்ட அறிக்கையில் டமாஸ்கஸ் அருகே உள்ள சில பகுதிகளை குறிவைத்து இஸ்ரேல் போர் விமானங்கள் லெபனான் பகுதி யிலிருந்து திங்கட் கிழமை அதிகாலை யில் ஏவுகணைத் தாக்குதல் நடத்தின. இஸ்ரேல் போர் விமானங்கள் வீசிய ஏவுகணைகளில் பெரும்பாலான வற்றை சிரியாவின் வான் பாதுகாப்பு அமைப்புக்கள் தாக்கி அழித்துவிட்டன என்று கூறப்பட்டுள்ளது. தாக்குதல் தொடர்பான வேறு எந்தத் தகவலையும் சிரியா இராணுவம் தெரிவிக்கவில்லை. எனினும் இஸ்ரேலிய தாக்குதலில் ஈரான் ஆதரவு வீரர்கள் 4 பேர் உயிரிழந்ததாக போர் கண்காணிப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.

அரபு வசந்தத்தின் பின்னர் சிரியா ஈரான் கூட்டு பலம் அடைந்து வரு வது மேற்காசிய பிராந்தியத்தில் இஸ் ரேலின் இருப்புக்கு சவால் ஆகிவி டும் என்பதால் இத்தகைய தாக்குதல் நடவடிக்கைகளை இஸ்ரேல் மேற் கொண்டு வருகின்றது. சிரியாவும், ஈரானும் கொரோனா யுத்தத்திற்கு முகம் கொடுத்து வரும் நிலையில் அவ்விரு நாடுகளையும் மேலும் பலவீனப்ப டுத்தும் விதத்திலான நகர்வுகளை இஸ்ரேல் கைக்கொள்ளகின்றமையை அவதானிக்கலாம். இரண்டாவதாக இராணுவ ரீதியாக பலப்படுத்தும் நடவடிக்கைகளில் பிராந்திய வல்லரசுகள் ஈடுபடுவதனை அவதானிக்க கூடியதாக உள்ளது. உல கையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட முதல் 10 நாடுகளில் ஈரானும் உள்ளது.

அங்கு கொரோனா வைரஸ் தாக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஐந்து ஆயிரத்தை கடந்து சென்று கொண் டிருக்கின்றது. வைரஸ் பாதித்தவர் களின் எண்ணிக்கை 85 ஆயிரத்தை கடந்துள்ளது. ஏற்கனவே அமெரிக் காவின் பொருளாதார தடைகளால் திணறிவரும் ஈரான் கொரோனா வைரஸ் அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் தனது முதல் இராணுவ செயற்கோளை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தி சாதித்துள்ளது. மத்திய ஈரானில் உள்ள பாலை வனத்திலிருந்து நூர் என்ற செயற்கைகோள் விண்ணில் செலுத் தப்பட்டதாக ஈரான் இராணுவம் தெரி வித்துள்ளது. இலக்கை வெற்றிகரமாக அடைந்த செயற்கை கோள், புவி வட்டப் பாதையில் 425 கி.மீ தொலைவில் சுற்றி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் இச்செயற்கை கோள் இரா ணுவத் தகவல்களினை உளவு பார்க் கும் திறன் அற்றது என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது. செயற்கைகோள் பரிசோதனை என்பதும் அதன் உரு வாக்கம் என்பதும் ஒரு செயற்கோளின் உருவாக்கத்துடன் மட்டுப்படுத்தப்படுவது இல்லை, அதற்கான ஆய்வுகளும் புதிய புதிய திறன்களையும் தொழில் நுட்பங்களையும் உட்செலுத்துவது என் பதும் காலத்திற்கு காலம் இடம்பெற்று கொண்டு இருக்கும். இதன் அடிப்படையில் அமெரிக்காவின் ஈரானின் செயற் கோளினை குறைமதிப்பீட்டை நோக்க வேண்டியுள்ளது. அமெரிக்காவின் அணுவாயதங்களுக்கும், ஏவுகணைகளுக்கும் சவால் விடுவது போன்று ஒரு நாளில் அமெரிக்காவின் இராணுவ விண்வெளிப்படைக்கு சவால் விடும் வகையில் ஈரானின் இராணுவ வளர்ச்சி களும் அமைய வாய்ப்புகள் இல்லாமல் இல்லை.

மூன்றாவதாக ஈரான் சீனாவிற்கு இடையிலான உறவு பலமடைந்துள்ளது. சீனா கொரோனாவிலிருந்து மீண்டு வருவதற்கான மருத்துவ மற்றும் சுகாதார உதவிகளை ஈரானுக்கு வழங் குவதுடன் இரு நாடுகளுக்கு இடையி லான சகலவிதமான புரிந்துணர்வுக ளும் ஒப்பந்தங்களும் ஏற்படுவதற்கான தொரு சூழலை கொரோனா அரசியல் மேற்காசியாவில் ஏற்படுத்தியுள்ளது. இதனை இரு நாட்டு ஊடக குழும தலை மைகளின் கருத்து பரிமாற்றங்களில் அவதானிக்கலாம். சீன ஊடகக் குழுமத் தலைமை இயக்குனரின் கொரோனா வைரஸைக் கூட்டாக எதிர்த்து போராடு வதன் மூலம் ஒத்துழைப்பையும் நட்பை யும் ஆழமாக்குவது என்ற கட்டுரையை ஈரானின் இஸ்லாமியக் குடியரசு செய்தி நிறுவனம் மார்ச் 18 ஆம் நாள் வெளியிட்டது.

சீன ஊடகக் குழுமத் தலைமை இயக் குனர் ணன் ஹாய்சியொங் அண்மை யில் இஸ்லாமிக் குடியரசு செய்தி நிறு வனத்தின் தலைவர் சாய்த் ஜியா ஹN மிக்கு அனுப்பிய கடிதத்தில், புதிய கொரோனா வைரஸ் சீனாவில் பரவத் தொடங்கிய போது ஹNமி சீன செய்தி ஊடகங்களுக்கு ஆறுதலை தெரிவித் தமைக்கு நன்றி தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில் தற்போது ஈரான் அரசும் மக்களும் வைரஸை எதிர்த்துப் போராட நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். வைரஸை எதிர்ப்பதில் ஈரான் வெற்றி பெறுவதாக நம்புகின்றேன் என்று தெரிவித்தார்.

வைரஸிற்கு எதிராக சீனாவும் ஈரானும் ஒன்றுக்கொன்று ஆதரவு அளிப்பது குறித்து ணன் ஹாய்சியொங் கூறுகையில், இயன்ற அளவில் ஈரானுக்கு உதவியையும் ஆதரவையும் வழங்க விரும்புகின்றோம். கோவிட் 19 வைரஸைக் கூட்டாக எதிர்ப்பதன் மூலம், இரு தரப்பு நட்புறவும் ஒத்துழைப்பும் மேலும் ஆழமாக்கப்படுமென நம்புகின்றோம் என்று தெரிவித்தார். இவ் சீன ஈரான் நட்பு மூலம் சீனா தனக்கு தேவையான தொடர்ச்சியான எண்ணெய் வளங்களை பெறுவதோடு மட்டுமல்லாமல் மேற்காசியாவில் அமெரிக்காவின் வலுவான ஆதிக்கத்திற்கும் சவால் விடும் சூழலினை சீனா கொரோனா அரசியல் மூலம் உருவாகியுள்ளது.

நான்காவதாக அதிகரித்து வரும் சீனா ஈரான் நெருக்கமும் அதனை நெருக்கடிக்குள்ளாக்கும் வகையிலான அமெரிக்காவின் செயற்பாடுகளையும் குறிப்பிடலாம். முதலில் அமெரிக்கா ஈரானுடன் சமாதானமாக செல்லும் உத்தியினை கையாள முற்பட்டது. இந்த வகையில் அமெரிக்கா ஈரானுக்கு கனிசமான மருத்துவ உதவிகளை வழங்குவதாக கூறியது. இதனை ஈரானின் மூத்த மதத் தலைவர் அயதுல்லா அலி காமெனி மறுத்துவிட்டார். அமெரிக்காவின் உதவி குறித்து ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜாவத் சாரீப் கூறும் போது நாங்கள் அமெரிக்க அதிபர் ட்ரம்பை கேட்டுக்கொள்வது ஒன்றே ஒன்று தான். எண்ணெய் மற்றும் பிற பொருட்களை ஏற்றுமதி செய்வதற்கான தடைகளை நீக்க வேண்டும். நாங்கள் அமெரிக்காவிடமிருந்து நிதியை எதிர்பார்க்கவில்லை. என்று தெரிவித்துள்ளார். இதனால் அமெரிக்காவின் அவ் உத்தி தோல்வியில் முடிவடைந்தால் மீண்டும் ஈரானுக்கு எதிரான வலுவான நடவடிக்கைகளை மேற்கொண்டு ஈரானுக்கு நெருக்கடிகளை கொடுத்து வருகிறது. இதனால் ஈரான் பலத்த பாதிப்புக்களை எதிர் கொண்டு வந்தாலும் அமெரிக்காவிடம் அடிபணியாது இருக்கின்றது. இதற்கு ஆதாரமாக வளைகுடா கடற்பகுதியில் ஏற்பட்ட முரண்பாட்டை குறிப்பிடலாம்.

அதாவது வளைகுடா கடற்பகுதியில் கடந்த மாதம் 15ம் திகதி ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த 6 அமெரிக்க கடற்படைக்கு சொந்தமான கப்பல்களை ஈரானிய படையினர் சுற்றிவளைத்தனர். ஈரானின் கடற்படைக்கு செந்தமான 11 சிறிய ரக படகுகள் அமெரிக்க கப்பல்களை சுற்றி வளைத்து வட்டமிட்டது. இந்நிலையில் ஈரானிய கப்பல்கள் அமெரிக்க கப்பல்களுக்கு அச்சுறுத்தும் விதமாக நடந்து கொண்டால் அவற்றை அழித்துவிடுங்கள் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கடற்படைக்கு அறிவுறுத்தினார். இந்நிலையில் அப்படி ஏதேனும் நடந்தால் வளைகுடாப் பகுதியில் இருக்கும் அமெரிக்க கப்பல்கள் தரைமட்டமாக்கப்படும் என்று ஈரான் மேஜர் ஜெனரல் ஹொசைன் சலாமி எச்சரித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறும் என் நாட்டின் பாதுகாப்புக்கு ஏதேனும் ஊறுவிளைவித்தால், மிக மோசமாக எதிர்வினையாற்றும். அவர்களுக்கு எங்களின் வலிமை பற்றி தெரியும். முந்தைய சமயங்களில் நாங்கள் கொடுத்த பதிலடியிலிருந்து பாடம் கற்றிருப்பார்கள் என்றார்.

இதே போன்று ரஷ்யா, சவூதி அரேபியா, ஏமன் போன்ற நாடுகள் தங்களுக்கு சாதகமான அரசியல் நலன்களை பெற்றுக் கொள்ள கொரோனா தொற்று சூழலை கையாளும் நிலைமையினை அவதானிக்கலாம். எனவே கொரோனா யுத்த காலத்தில் மேற்காசியாவில் இடம்பெறும் வல்லரசுகளின் ஆக்கிரமிப்பு நடவடிக்கையும் அதிகாரப்போட்டியும் போருக்கான தயார்ப்படுத்தல்களாகவே தென்படுகின்றது. எதிர்காலத்தில் பெரும் யுத்தம் ஒன்றுக்கான அச்சாணியும் மேற்காசியா தான் என்பது அரசியல் ஆய்வாளர் மு. திருநாவுக்கரசு உட்பட்ட சர்வதேச ஆய்வாளர்களின் எதிர்வு கூறலும் ஆகும்.

Check Also

இஸ்ரேலில் நான்காவது டோஸ் தடுப்பூசி செலுத்த பரிசீலனை!

டெல்டா வகை கொரோனாவுக்கு எதிராக போராடுவதற்காக இஸ்ரேல் அரசு பூஸ்டர் டோஸ் தடுப்பூசிகளை செலுத்த முடிவு செய்துள்ளது. உலகளவில் கொரோனா …

Free Visitor Counters Flag Counter