இஸ்ரேல் – UAE வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த விமான சேவை ஆரம்பம்! (15 Photos)

இஸ்ரேலுக்கும் ஐக்கிய அரபு அமீரகத்துக்கும் இடையிலான நேரடி விமான சேவை நேற்று ஆரம்பமாகியுள்ளது. இது ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாக கருதப்படுகின்றது.

இஸ்ரேல் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்துக்கு இடையே தூதரக உறவை ஏற்படுத்தும் விதமாக கடந்த கடந்த 13 ஆம் திகதி இரு நாடுகளுக்கும் இடையில் வரலாற்று சிறப்புமிக்க அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது. 

இதன் மூலம் இஸ்ரேலுடன் தூதரக உறவை ஏற்படுத்தியுள்ள முதல் வளைகுடா நாடாகவும், 3 ஆவது அரபு நாடாகவும் ஐக்கிய அரபு அமீரகம் தன்னை உறுதிப்படுத்தியுள்ளது.

இதனிடையே தொலைத்தொடர்பு, வர்த்தகம், வேலைவாய்ப்பு என அனைத்து துறைகளிலும் இஸ்ரேலை புறக்கணிக்கும் வகையில் இயற்றப்பட்டிருந்த சட்டத்தை ஐக்கிய அரபு அமீரகம் கடந்த சில தினங்களுக்கு முன்பு ரத்து செய்தது.

இதனையடுத்து இஸ்ரேலியர்கள் மற்றும் இஸ்ரேலிய நிறுவனங்கள் ஐக்கிய அரபு அமீரகத்தில் வர்த்தகம் செய்ய முடியும். மேலும் இது விமான போக்குவரத்து, வங்கி மற்றும் நிதி பரிவர்த்தனை உள்ளிட்டவற்றுக்கான வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 

அந்த வகையில் வரலாற்று நிகழ்வாக இஸ்ரேலிலிருந்து ஐக்கிய அரபு அமீரகத்துக்கு நேரடி விமான சேவை நேற்று ஆரம்பமாகியது.

இஸ்ரேலின் டெல் அவிவ் நகரில் இருந்து ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைநகர் அபுதாபிக்கு இஸ்ரேலிய விமான நிறுவனத்துக்கு சொந்தமான விமானம் புறப்பட்டது.

இந்த விமானத்தில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாஹூ தலைமையிலான அரசின் அதிகாரிகள் மற்றும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பின் மூத்த ஆலோசகரும் அவரது மருமகனுமான ஜெரட் குஷ்னர் உள்ளிட்ட அமெரிக்க அதிகாரிகளும் பயணம் செய்துள்ளனர்.

இந்த விமானம் சவுதி அரேபியாவின் வான்பரப்பு வழியாக ஐக்கிய அரபு அமீரகம் செல்ல உள்ளது. இந்த நிகழ்வு நடைபெறும் பட்சத்தில் சவுதி அரேபிய வான்பரப்பு வழியாக பறக்க இஸ்ரேல் விமானத்துக்கு அனுமதி வழங்கப்படுவது இதுவே முதல்முறையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

Check Also

இஸ்ரேலில் நான்காவது டோஸ் தடுப்பூசி செலுத்த பரிசீலனை!

டெல்டா வகை கொரோனாவுக்கு எதிராக போராடுவதற்காக இஸ்ரேல் அரசு பூஸ்டர் டோஸ் தடுப்பூசிகளை செலுத்த முடிவு செய்துள்ளது. உலகளவில் கொரோனா …

Free Visitor Counters Flag Counter