தற்போது விதிக்கப்பட்டுள்ள இலங்கை முழுதுமான ஊரடங்கு உத்தரவை செவ்வாய்க்கிழமை வரை தொடர அரசு முடிவு செய்துள்ளது.
விடுமுறையில் உள்ள படையினர் முகாம்களுக்குத் திரும்புவதற்கு இலகுவாக இருக்கும் வகையில் நாளை நாடு முழுவதும் ஊரடங்குச் சட்டம் அமுலில் இருக்குமென அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக நாளை அதிகாலை 5 மணிக்குப் பிறகு அதிக ஆபத்து இல்லாத பகுதிகளுக்கு (21 மாவட்டங்களுக்கு) இது தளர்த்த பட இருந்தது குறிப்பிடத் தக்கது.
இதன்படி கொழும்பு , களுத்துறை , கம்பஹா , புத்தளம் மாவட்டங்களை தவிர்ந்த இதர அனைத்து மாவட்டங்களிலும் 28 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை காலை 5 மணிக்கு தளர்த்தப்படும் ஊரடங்குச் சட்டம் அன்றிரவு 8 மணிக்கு மீண்டும் அமுலாகும்.