அரச ஊழியர்கள் நாட்டுக்கு சுமையல்ல; ராஜபக்ஷவினரின் குடும்ப ஆட்சியே நாட்டுக்கு பெரும் சுமை; சம்பிக்க ரணவக்க
இந்த நாட்டுக்கு அரச ஊழியர்கள் சுமையல்ல, ராஜபக்ஷவினரின் குடும்ப ஆட்சியே இந்த நாட்டுக்கு சுமையாக மாறியுள்ளது. அதேவேளை இந்த அரசி ன் தவறான கொள்கை காரணமாக விரைவில் சமூக பிளவொன்று உருவாகப்போகின்றது. அதனை எந்தத் தடைகள் போட்டும் தடுத்து நிறுத்த முடியாது என ஐக்கிய மக்கள் சக்தி எம்.பி.யான சம்பிக்க ரணவக்க எச்சரித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற வரவு செலவுத் திட்ட இரண்டாம் வாசிப்பு மீதான நான்காம் நாள் விவாதத்தில் உரையாற்றும் போதே இவ்வாறு எச்சரித்த அவர் மேலும் கூறு கையில்,
எதிர்க்கட்சிகளின் ஆர்ப்பாட்டங்கள் காரணமாக நாட்டில் கொரோனா தொற்றும் மீண்டும் அதிகரிக்குமென பொதுமக்கள் அப்படியானால் நாட்டில் எரிவாயு பெற்றுக் கொள்ள பால்மாவிற்காக, மண்ணெண்ணெய்க்கான, அத்தியாவசிய பொருட்களை பெற்றுக்கொள்ள மக்கள் ஆயிரக்கணக்கில் வரிசைகளில் நிற்கின்றனர். இவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்படாதா?
நாடு வறுமையை நோக்கிசென்று கொண்டிருக்கின்றது. மக்கள் வாழ முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது. ஆனால் இம்முறை வரவு செலவு திட்டத்தில் இவ்வாறான பிரச்சினைகளுக்கு என்ன தீர்வு வழங்கப்பட்டுள்ளது என்ற கேள்விக்கு அரசிடம் பதில் இல்லை. இப்போது மழைக்காலநிலை என்பதனால் மின்சார நெருக்கடி ஏற்படாது. ஆனால் அடுத்த ஆறு வாரங்களுக்கு மழை பெய்யாது போகும் நிலையில் முதலில் எரிபொருள் தட்டுப்பாடும், அடுத்ததாக மின்சார நெருக்கடியும் ஏற்படும். இவை எதற்கும் வரவு செலவு திட்டத்தில் தீர்வு இல்லை.
நல்லாட்சியில் நாம் கடன்களை பெற்றதாக கூறுகின்றனர், எமது நிதி அமைச்சர் மங்கள சமரவீர உள்ளிட்ட அதிகாரிகள் 2019 ஆம் ஆண்டில் %.2 பில்லியன் டொலர்களை சேமித்து வைத்துவிட்டே சென்றனர். அது இல்லையென்றால் இப்போது நாடு வீழ்ச்சி கண்டிருக்கும். ஆனால் இந்த அரசு ஆட்சிக்கு வந்த 18 மாதங்களில் 3%40 பில்லியன் டொலர் கடன்களை பெற்றுள்ளது. இந்த கடனுக்கு நடந்தது என்ன?
இவற்றை மக்கள் மீது சுமத்தி மக்களை நெருக்கடிக்குள் தள்ளவே அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச அரச ஊழியர்கள் நாட்டுக்கு சுமையென கூறியுள்ளார், ஏழு இலட்சம் அரச ஊழியர்கள் புதிதாக நியமிக்கப்பட்டுள்ளனர், இவற்றில் 80 வீதமான நியமனங்கள் ராஜபக்ஷவினரால் வழங்கப்பட்டவை. இந்த நாட்டில் உண்மையில் அரச ஊழியர்கள் சுமை கிடையாது. இந்த நாட்டின் பெரிய சுமை ராஜபக் ஷவினரின் குடும்ப ஆட்சியே . இவர்களின் தவறான கொள்கையால் நாடு பாதாளத்தை நோக்கி சென்றுகொண்டிருக்கின்றது. எனவே பாராளுமன்றமாவது நாட்டை மீட்டெடுக்க நட வடிக்கை எடுக்க வேண்டும்.
இதேவேளை அடுத்த இரண்டு ஆண்டுகளில் இலங்கைக்கு மிக முக்கியமான சவால்கள் காத்திருக்கின்றன. பாரிய கடன் தொகையை செலுத்த வேண்டிய நெருக்கடி உள்ளது. அதற்கான முறையான வேலைத்திட்டம் முன்வைக்க வேண்டும், இல்லையானால் சமூக பிளவொன்று உருவாகும், அதனை எந்தத் தடைகள் போட்டும் தடுத்து நிறுத்த முடியாது. மக்களின் எழுச்சி இன்று நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கின்றது, அந்த மக்களின் எழுச்சியை இந்த வரவு செலவு திட்டம் மேலும் ஊக்குவித்துள்ளதுஎனவே இனிவரும் காலம் இந்த அரசுக்கு நெருக்கடியான காலமே என்றார்
பா.கிருபாகμன், ந.ஜெயகாந்தன் (தினக்குரல் 18-11-21)