சில்லறை விலைகள் உச்சம்
நாட்டிலுள்ள பொருளாதார மத்திய நிலையங்களுக்குக் கிடைக்கும் மரக்கறிகளின் விளைச்சல் குறைவடைந்துள்ள நிலையில் நுகர்வோரால் தாங்கிக்கொள்ள முடியாத அளவுக்கு மரக்கறிகளுக்கான சில்லறை விலையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.
கொழும்பிலுள்ள முதல்நிலை வார சந்தைகள் சிலவற்றில் இந்த நிலை உருவாகியுள்ளதை அவதானிக்க கூடியதாக இருந்தது. ஒரு கிலோ போஞ்சி மற்றும் கறி மிளகாய் 600 ரூபாவுக்கும், தக்காளி ஒரு கிலோவின் விலை 500 ரூபாவுக்கும், ஒரு கிலோ கெரட்டின் விலை 400 ரூபாவுக்கும், பெரிய வெங்காயம் ஒருகிலோ 360 ரூபாவுக்கும், லீக்ஸ் ஒரு கிலோவின் விலை 320 ரூபாவுக்கும், உள்நாட்டு உருளைக் கிழங்கு ஒரு கிலோ 280 ரூபாவுக்கும் விற்பனை செய்யப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
– தினகரன் –