இராணுவ நிர்வாகத்தையும் முன்னெடுக்க தெரியும் – ஜனாதிபதி

இராணுவ நிர்வாக கொள்கையுடைய கோட்டாபயவை எதிர்பார்த்தோம்‌ என்று சிலர்‌ குறிப்பிடுகிறார்கள்‌. விவசாயியின்‌ கழுத்தைப் பிடித்து சேதனப்‌ பசளையை பயன்‌படுத்து என்று என்னால்‌ கூறமுடியும்‌. ஆனால்‌ அவ்வாறு செய்ய வேண்டிய தேவை எனக்கு கிடையாது. அதனை எதிர்பார்க்‌கவுமில்லை.

மக்களுக்கு வழங்கிய வாக்குலுதிகளை சிறந்த முறைமில்‌ செயற்படுத்‌துகிறேன்‌. விமசனங்களை ஒருபோதும்‌ பொருட்படுத்த போவதில்லை. மாற்றத்தை ஏற்படுத்த இளைஞர்கள்‌ அரசாங்கத்துடன்‌ ஒன்றிணைய வேண்டும்‌ என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார்‌

ஒரே நாடு – ஒரே சட்டம்‌ எண்ணக்கரு தொடர்பான ஜனாதிபதி செயலணிமின்‌ தலைமைப்‌ பதவி ஞாசனார தேரருக்கு வழங்கப்பட்டமைக்கு எதிராக பல விமர்சனங்கள்‌ எழுத்துள்ளன. இருப்பினும்‌ அவர்‌தான்‌ 5 வருட காலத்திற்கு முன்னிருந்து ஒரே நாடு -ஒரே சட்டம்‌ என்ற எண்ணக்கரு தொடர்பில்‌ கருத்துரைத்தார்‌. ஆகவே அதற்‌கான பொறுப்பை அவரிடம்‌ ஒப்படைத்தேன்‌. அதுவே எனக்கு தேவையாக காணப்பட்டது. அதற்கும்‌ குற்றச்சாட்டுக்கள்‌ முன்வைக்கப்படுகின்றன என்றும்‌ கூறினார்‌.

வீரகெட்டிய பிரதேசத்தில்‌ நேற்று இடம்‌ பெற்ற ‘1500 சாலை மக்கள்‌ பாவனைக்கு’ திறந்து வைப்பு நிகழ்வில்‌ கலந்துகொண்டு உரையாற்றுகையில்‌ மேற்கண்டவாறு குறிப்‌பிட்டார்‌. ஜனாதிபதி மேலும்‌ குறிப்பிடுகையில்‌.

கொவிட்‌ தாக்கத்திற்கு மத்திமில்‌ நாட்டின்‌ அபிவிருத்தி பணிகள்‌ முன்னெடுக்கப்பட்‌டுள்ளன.கடந்த இரண்டு வருடங்கள்‌ சாதாரணமானவை. எவ்வித பிரச்சினைகளும்‌ ஏற்படவில்லை என்று கருதுபவர்கள்‌ எதிர்‌ பார்ப்புக்களை நிறைவேற்றும்போது அதற்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்கள்‌ என்னை விமர்சிக்‌கிறார்கள்‌.

2019 ஆம்‌ ஆண்டு ஆட்சியை பொறுப்பேற்‌ஐதை தொடர்ந்து கொவிட்‌ தாக்கத்தை கட்‌டுப்படுத்தவும்‌ அபிவிருத்தி பணிகளையும்‌ கட்டுப்பாடுகளுக்கு அமைய முன்னெடுக்‌கவும்‌ வேண்டிமிருத்தது. கடந்த இரண்டு வருட காலத்தில்‌ நாட்டை பல முஜை முடக்க வேண்டிய தேவை காணப்பட்டது. இவ்வாரான நிலையில்‌ எவ்வாறு பொருளாதாரத்தை முன்னேற்றுவது? இதனை விமர்சிப்பவர்கள்‌ அறிந்தும்‌ அறியாததை போல்‌ கருத்துரைக்கின்றார்கள்.

கொவிட்‌ தாக்கத்தின்‌ காரணமாக பில்‌லியன்‌ கணக்கான வருவாயை எட்டித்தரும்‌ ௬ற்றுலாத்துறை முழுமையாக வீழ்ச்சியடைந்தது. அதுமாத்திரமல்ல சுற்றுலாத்துறை சேவை கைத்தொழிலுடன்‌ ஈடுபட்ட ௬மார்‌ 30 இலட்சம்‌ மக்கள்‌ பாதிக்கப்பட்டார்கள்‌. நாட்டை முடக்கும்‌ போது அனைத்து தரப்பினரது பொருளாதாரமும்‌ பாதிக்கப்பட்டது.

கொவிட்‌ தாக்கத்தினால்‌ முதற்கட்டமாக நாட்டை முடக்கும்‌ போது தைத்த ஆடை எற்‌றுமதி துறை முழுமையாக பாதிக்கப்பட்டது. அத்துடன்‌ அந்நிய செலாவணியும்‌ வீழ்ச்சியடைந்தது. பொருளாதாரம்‌ பாதிக்கப்பட்‌டுள்ள நிலையில்‌ செலுத்த வேண்டிய அரச (முறை கடன்களை உரிய காலத்தில்‌ செலுத்தியுள்ளோம்‌.

இவ்வாறான பின்னணியில்‌ ஊரடங்கு சட்டம்‌ அமுல்படுத்தப்பட்ட காலத்தில்‌ அரச சேவையாளர்கள்‌ வீட்டில்‌ இருந்தார்கள்‌.ஒரு பகுதியினர்‌ நிகழ்நிலை முறைமை ஊடாக சேவையில்‌ ஈடுபட்டார்கள்‌. இருப்பினும்‌ அரச சேவையாளர்கள்‌ அனைவருக்கும்‌ உரிய நேரத்தில்‌ எவ்வித தடையுமில்லாமல்‌ மாத சம்பளத்தை வழங்கினோம்‌. ஆசிரியர்கள்‌ 2 வருட காலம்‌ வீட்டில்‌ இருந்தார்கள்‌. அவர்களுக்கும்‌ சம்பளம்‌ வழங்கினோம்‌. நாட்டை முடக்கும்‌ ஒவ்வொரு வேளையிலும்‌ கொவிட்‌ நிவாரணம்‌ வழங்கினோம்‌. கொவிட்‌ தாக்கத்திற்கு மத்தியில்‌ மக்களின்‌ தேவைகளை நிறைவேற்றும்‌ பொறுப்பில்‌ இருத்து ஒருபோதும்‌ விலகவில்லை.

தற்போது விவசாயிகள்‌ என குறிப்பிட்டுக்‌ கொள்ளும்‌ ஒரு தரப்பினர்‌ போராட்டத்தில்‌ ஈடுபடுகிறார்கள்‌. கடந்த காலங்களில்‌ 25 ரூபாவாக காணப்பட்ட உத்தரவாத விலை தற்போது 50 ரூபாவிற்கும்‌ அதிகமாக காணப்‌படுகிறது. 2 வருட காலமாக இரசாயன உரத்தை இலவசமாக வழங்கினோம்‌. 69 இலட்சம்‌ மக்கள்‌ என்‌ முகத்திற்காக ஜனாதிபதி தேர்தலில்‌ வாக்களிக்கவில்லை. ௬பீட்சமான கொள்கைத்திட்டத்தில்‌ குறிப்பிடப்பட்ட விடயங்களுக்காகவே வாக்களித்‌தார்கள்‌.

நிலையான விவசாயத்தை நோக்கி செல்வோம்‌. சேதன பசளையை தேசிய மட்‌டத்தில்‌ உற்பத்தி செய்வோம்‌. விஷமற்ற உணவை உற்பத்தி செய்வோம்‌ என்ற வாக்குறுதிகளை தேர்தல்‌ காலத்தில்‌ முன்‌வைத்தோம்‌. விஷ உணவை வழங்குவது உணவு பாதுகாப்பு அல்ல என்பதை பேராசிரியர்கள்‌ விளங்கிக்கொள்ள வேண்டும்‌. மாற்றத்தை கோரினார்கள்‌. தற்போது மாற்றமடையும்‌ போது அது கடினமாக உள்ளது.

விவசாயிகளை நெருக்கடிக்குள்ளாக்க வேண்டிய அவசியம்‌ எனக்கு கிடையாது. பலவந்தமான முறையில்‌ சேதனப்‌ பசளையை அறிமுகப்படுத்த வேண்டிய தேவை எனக்கு கிடையாது. நான்‌ சரியானதை செய்கிறேன்‌. மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுகிறேன்‌. இராணுவ நிர்வாக கொள்கையுடைய கோட்டாபயவை எதிர்பார்த்தோம்‌ என்று சிலர்‌ குறிப்பிடுகிறார்கள்‌. என்னால்‌ முடியும்‌. விவசாயியின் கழுத்தை பிடித்து சேதனப்‌ பசளையை பயன்‌படுத்து என்று குறிப்பிட முடியும்‌. இருப்‌பினும்‌ அவ்வாறு செய்ய வேண்டிய தேவை எனக்கு கிடையாது.அதனை எதிர்பார்க்கவில்லை. நான்‌ ஆட்சிக்கு வந்தால்‌ ஜனநாயகம்‌ இல்லாமல்‌ போய்விடும்‌ என்று குறிப்‌பிட்டவர்கள்‌ தற்போது நாங்கள்‌ இராணுவ தலைமைத்துவத்தை எதிர்பார்த்தோம்‌ என குறிப்பிட்டுக்‌ கொள்கிறார்கள்‌. அவ்வாறும்‌ செல்ல முடியும்‌.இருப்பினும்‌ இது ஜனநாயகமிக்க நாடு. பொய்யான குற்றச்சாட்டுகளின்‌ காரணமாக இன்றும்‌ ஜெனிவா செல்ல வேண்டியுள்ளது. சுபீட்சமான கொள்கை திட்டத்தை செயற்படுத்தும்‌ போது பெரும்‌ எதிர்ப்பு வருகின்றது. ஆட்சிக்கு வந்த பிறகு தேவையற்ற செலவுகளை நானே குறைத்துக்‌ கொண்டேன்‌. அரச முறைக்காக வெளிநாடுகளுக்கு செல்லும்‌ போது எனது பாரியார்‌ என்‌னுடன்‌ வந்தார்‌. அவரது செலவுகளை எனது தனிப்பட்ட பணத்தில்‌ செலவழித்தேன்‌. பாரம்பரிய கலாசாரத்தை முழுமையாக மாற்‌றியமைத்தேன்‌.

அபயராம விகாரைமில்‌ விகாராதிபதி முரத்தெட்டுவே ஆனந்த தோரை கொழும்பு, பல்கலைக்கழகத்தின்‌ வேந்தராக நியமித்தேன்‌. நாங்கள்‌ ஆட்சி மாற்றத்திற்கு வருவதற்கு முன்னின்று செயற்பட்டார்‌. அது உண்மை.இருப்பினும்‌ அவர்‌ கடந்த காலங்களில்‌ எமக்கு எதிராக கருத்துரைத்தார்‌. ஆனால்‌ சிறந்த ஆலோசனைகளை அவரிடமே பெற்றோம்‌.

ஒரே நாடு – ஒரே நாடு சட்டம்‌ எண்‌ணக்கரு தொடர்பான ஜனாதிபதி செயலணிமின்‌ தலைமை பதவி ஞாசனார தேரருக்கு வழங்கப்பட்டமைக்கு எதிராக பல விமர்சனங்கள்‌ எழுந்துள்ளன. இருப்‌பினும்‌ அவர்‌ தான்‌ 5 வருட காலத்திற்கு முன்னிருத்து ஒரே நாடு -ஒரே சட்டம்‌ என்ற எண்ணக்கரு தொடர்பில்‌ கருத்துரைத்தார்‌.ஆகவே அதற்கான பொறுப்பை அவரிடம்‌ ஒப்படைத்தேன்‌.அதுவே எனக்கு தேவையாக காணப்பட்டது.அதற்கும்‌ குற்றச்சாட்டுக்கள்‌ முன்வைக்கப்படுகின்றன.

2019ஆம்‌ ஆண்டு ஆட்சிக்கு வந்ததன்‌ பின்னர்‌ இறக்குமதி செய்யப்பட்ட வாசனை திரவியங்கள்‌ இடை நிறுத்தப்பட்டன. அதன்‌ பயனை இன்று விவசாயிகள்‌ பெறுகிறார்கள்‌. எதிர்க்கட்சிமினர்‌ விவசாயிகள்‌ பெறும்‌ நலன்‌ தொடர்பில்‌ கருத்துரைப்பதில்லை. சந்தை விலை பற்றி மாத்திரம்‌ கருத்துரைக்கிறார்கள்‌. இதுவே இன்றைய நிலையாகும்‌.

௬பீட்சமான எதிர்கால கொள்கை திட்டத்தின்‌ பெரும்‌ மாற்றத்தை நிச்சயம்‌ செயற்படுத்துவேன்‌.கொள்கை திட்டத்தை ஏற்று முன்வந்த இளைஞர்களுக்கு மீண்டும்‌ அழைப்பு விடுக்கிறேன்‌ என்றார்‌.

(இராஜதுரை ஹஷான்‌) – வீரகேசரி 7-11-21

Check Also

ஹங்வெல்லை துப்பாக்கிச் சூடு நடந்தது என்ன?

வாஹித் லெப்பை மொஹம்மது பர்சான் 46 வயதான மூன்று பிள்ளைகளின் தந்தை. ஹங்வெல்லை நகரின் ஹோட்டல் ஒன்றினை நடாத்திச் செல்பவர். …

Free Visitor Counters Flag Counter