மாடறுப்புத் தடையிலிருந்து அரசு பின்வாங்கக் கூடாது
மாடறுப்பை தடை செய்வதற்காக எடுத்த தீர்மானத்தில் இருந்து பின் வாங்காது அதனை செயற்படுத்துவதற்கு நடவடிக்கையெடுக்குமாறு கலாநிதி ஓமல்பே சோபித்த தேரர் அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மகிந்த ராஜபக்ஷவின் தாயாரின் நினைவு தின நிகழ்வு எம்பிலிப்பிட்டியவிலுள்ள டீ.ஏ.ராஜ பக்ஷ மண்டபத்தில் நடைபெற்ற போது அதில் கலந்துகொண்டு கருத்து கூறும் போதே ஓமல்பே சேõபித்த தேரர் இவ்வாறு வலியுறுத்தியுள்ளார்.
அந்த நிகழ்வில் பிரதமர் மகிந்த ராஜபக்ஷ கலந்துகொண்டிருந்த நிலையில், அவர் முன்னிலையில் க ரு த் து ö வ ளி யி ட் ட ஓ ம ல் ÷ ப சோபித்த தேரர் கூறுகையில்,
பசு வளத்தை நாங்கள் தவறாக பயன்படுத்தியதால் பால்மாவை வெளிநாட்டில் இருந்த இறக்குமதி செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். அதேபோன்று உரத்தையும் வெளிநாட்டில் இருந்து கொண்டு வருகின்றோம். இறுதியில் நெருக்கடிக்குள்ளேயே நாங்கள் சிக்கியுள்ளோம்.
இதனால் மாடறுப்பை தடை செய்வதற்கான தீர்மானத்தை உறுதியாக செயற்படுத்துங்கள். உங்களுடைய அந்த நிலைப்பாட்டுடன் இணைந்து 200 அமைப்புகள் பத்து இலட்சம் கையெழுத்துக்களை உங்களுக்கு வழங்க எதிர்பார்த்துள்ளோம். இதன்படி தீர்மானத்தில் இருந்து பின்வாங்காது அதனை செயற்படுத்துங்கள் என்றார்.
தினக்குரல் 4-11-21