இலங்கை முஸ்லிகளின் தனிமையும், ஒரேநாடு ஒரே சட்டம் முன்மொழிவும்

1980களில் இருந்து அரேபிய செல்வாக்கால், முஸ்லிம்கள் தனித்துவம் என்பதை தனிமைப்படுதல் என புரிந்துகொண்டதாக கலாநிதி அமீர் அலி எழுதியிருந்ததை வாசித்தேன்.

2013ல் என்னை சிறைப்பிடித்த இன்றைய ஜனாதிபதிகளின் ஆட்க்கள் எனக்கு வஹாபிகளின் தொடர்பு இருக்கலாம் என சந்தேகப்பட்டார்கள். பாரம்பரிய முஸ்லிம்கள் அல்ல வகாபிகள்தான் பிரச்சினை நாங்கள் விரைவில் அவர்களுக்குப் முடிவு கட்டுவோம் என்று கடுமையாகச் சொன்னார்கள். அதனால்தான் நான் சிறைமீண்டதும் சூபிகளும் வஹாபிகளும் பேச வேண்டும் என தொடற்சியாக எழுதினேன். முஸ்லிம்களின் அதிஸ்ட்டம் 2015 தேதலில் ரஜபக்சக்கள் தோற்றுப்போனார்கள். ஆனால் இன்றைய நிலமை வேறு.

சிங்கள ஆழும் சக்திகள் திட்டமிட்டு விதைக்கும் முஸ்லிம்கள் பற்றிய அச்சம் 2019 ஈஸ்டரின் பின்னர் யு.என்.பி செல்வாக்கு மண்டலமாக இருந்த இலங்கையின் மேற்க்கு கரையோர சிங்களவர்கள் மத்தியிலும் கிழக்கு தமிழர்கள் மத்தியிலும் வெற்றிகரமாக பரவியுள்ளது. அதுதான் தேர்தலில் யு.என்.பி மற்றும் தமிழரசுக் கட்சிகளுக்கு பாதகமாக எதிரொலித்தது.

இன்றுள்ள சூழலில் முஸ்லிம்கள் ஊர் பிரதேசம் கடந்து கலந்துரையாட வேண்டும். மெளனம் கலைந்து தமக்குள் உரையாட வேண்டும். அதன்மூலம் மட்டும்தான் எதிர்காலத்துக்கான வழியை கண்டுபிடிக்க முடியும்.

சிங்கள அரசு தனது முதல் நகர்வை திருமண வயசு 18 என்கிற புள்ளியில் இருந்து தந்திரமாக ஆரம்பித்துள்ளது. கணிசமான இலங்க முஸ்லிம் ஆண் பெண்களும் பல முஸ்லிம் நாடுகளும் ஏற்றுக்கொண்டதாக கருதப்படும் மாற்றங்களில் இருந்தே அரசு ஆரம்பிக்கிறது என சிங்கள நண்பர்கள் குறிப்பிட்டார்கள். சர்வ தேச ஆதரவுள்ள அந்த தந்திரம் வலிமையானது. மேற்படி முஸ்லிம் நாடுகளின் முடிவை ஏற்றுக்கொள்வதா நிராகரிப்பதா என்கிற கேழ்வியை சிங்கள அரசு தந்திரமாக இலங்கை முஸ்லிம்கள் மத்தியில் நகர்த்தி இருக்கு. 

சிங்கள அரசு ஆய்வுகளின் அடிப்படையிலும் தேசிய சர்வதேசிய அடிப்படையில் தனிமைப் படுத்தும் நோக்கத்தோடும் காய் நகர்த்துகிறார்கள். இந்த நிலையில் சும்மா கருத்தெழுதுவது பயன்படாது. தலை நிமிர்வதானால் பல ஊர்களையும் பிரதேசங்களையும் சேர்ந்த சூபிகளும் வகாபிகளும் இருந்துபேசி சமரசமான முடிவுகளுக்கு வர வேண்டுமென்று 2014ல் இருந்தே வலியுறுத்தி வர்கிறேன். அதனையே மீண்டும் வலியுறுத்துகிறேன். கிழக்கு முஸ்லிம்கள் தெற்க்கு முஸ்லிம்களோடு பேசி சமரசமான முடிவுகளை எடுக்க வேண்டும்.

இவ்வளவு காலமும் சிங்கள பெளத்தர்கள் மத்தியில் பாரம்பரிய முஸ்லிம்கள் வஹாபிகள் என்கிற வரைஅறைகளும் முஸ்லிம்கள் தொடர்பான அச்சமும் முன்னிலைப் பட்டிருந்தது. 2019 ஈஸ்ட்டர் தாக்குதல்களின் பின் முஸ்லிம்கள் பற்றிய அச்சம் கணிசமான கிறிஸ்தவர்களைக் கொண்ட கரையோர சிங்களவர் மத்தியிலும் தமிழர் மத்தியிலும் (குறிப்பாக கிழக்குத் தமிழர்) மலையக தமிழர் மத்திலும் பரவி வருகிறது.

இந்தப் பின்னணியில்தான் ஒரே நாடு ஒரே சட்டம் தீர்மானத்தின் ஆரம்ப நகர்வாக திருமணவயசு 18 சட்டத்தை முன்மொழிந் திருக்கிறார்கள். திருமண வயசை 18 ஆக உயர்துவதற்க்கு இலங்கை முஸ்லிம்கள் ஆண் பெண்கள் மத்தியில் கணிசமான ஆதரவு உள்ளதாக அரசு கருதுகிறது. பல உலக முஸ்லிம்கள் நாடுகளின் மத்தியிலும் கணிசமான ஆதரவு உள்ளது என்பதை சிங்கள அரசு உறுதிப்படுத்தி உள்ளது. அதனால்தான் ஒருநாடு ஒரே சட்ட நடவடிக்கைகளை திருமன வயசு 18 என்பதில் இருந்து ஆரம்பிதிருக்கிறார்கள். தொடர்ந்து பலதார மணம் விவாக ரத்து ஜீவனாம்சம் காதி நீதிமன்றங்கள் போன்ற சட்டங்கள் வரிசை கட்டி வரும். அவற்றை எதிர்கொள்ள தயாராகுவது என்பது இலகுவல்ல. முஸ்லிம்களின் நலன்களை காப்பாற்றுவது பொறுத்து தற்போதைக்கு ஏனைய இனங்களின் ஆதரவு இல்லையென்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

இன்றைய நெடுக்கடிகளுக்கு முகம் கொடுக்க கிழக்கிலங்கை தென் இலங்கை முஸ்லிம்கள் உலக முஸ்லிம் நாடுகளின் ஆதரவோடு தமக்குள் ஒற்றுமைப் படுவது மட்டும்தான் உதவும். உலக முஸ்லிம் நாடுகள் ஏற்றுக்கொண்ட மாற்றங்கள் தொடர்பாக நிலைபாடு எடுக்காமல் உலக முஸ்லிம் நாடுகளின் ஆதரவை பெற முடியாது என்பதை அரசு நன்கு அறிது வைத்துள்ளது.

ஊர்மட்ட கிழைகளின் அடிபடையில் கட்சிகளை மீழமைக்காமல் முஸ்லிம்களின் கட்சி அரசியலை பலம்படுத்த வாய்ப்பில்லை. இன்றைய அரசியல் தேக்கத்தை சிவில் சமூகத்தை வளர்த்து, முன்னிலைப் படுத்தாதாமல் ஆண்களையும் பெண்களையும் அணிதிரட்டாமல் உடைப்பது சாத்தியமில்லை. அதிகமாக தனிமைப்பட்டுள்ள கிழக்கு முஸ்லிம்கள் தென்னிலங்கை முஸ்லிம்களோடு இணைந்து அகில இலங்கை முஸ்லிம் ஐக்கியத்தைக் கட்டி எழுப்பாமல் நிலைபாடுகளில் தெளிவு பெறாமல் சிங்களவரோடும் தமிழரோடும் மலையக தமிழரோடும் வெற்றிகரமான அரசியல் செய்யும் வாய்ப்புகள் அதிகம் இல்லை.

ஜெயபாலன்

Check Also

ஹம்தியின் மரணம் குறித்து விரிவான விசாரணை நடத்துக

சிறுநீரக சத்திர சிகிச்சைகளை அடுத்து உயிரிழந்த கொழும்பு கொட்டாஞ்சேனையைச் சேர்ந்த 3 வயதான ஹம்தி பஸ்லிமின் மரணம் தொடர்பில் விரிவான …

Free Visitor Counters Flag Counter