பள்ளி நிர்வாகம் பதவி நீக்கப்படும் – வக்ப் சபை

ஜும்‌ஆ கூட்டுத்‌ தொழுகைக்கு அனுமதியளித்த வவுனியா நகர்‌ பள்ளிவாசல்‌ நிர்வாகம்‌ பதவி நீக்கம்‌.

கிழக்கில்‌ சில பள்ளிகளில்‌ மீலாத்‌ நிகழ்வுகள்‌ தடுக்கப்பட்டதுடன்‌ எச்சரிக்கையும்‌ விடுப்பு

கொவிட்‌ 19 தொடர்பான சுகாதார அமைச்சின்‌ சட்ட விதிகளையும்‌, வக்பு சபையின்‌ வழிகாட்‌டல்களையும்‌ மீறும்‌ பள்ளிவாசல்‌ நிர்வாகிகளுக்கு ஒரு போதும்‌ மன்னிப்பு வழங்கப்படமாட்டாது. அவ்வாறான நிர்வாகிகள்‌ உடன்‌ பதவி நீக்கம்‌ செய்யப்படுவதுடன்‌ வெற்றிடங்களுக்கு புதியவர்கள்‌

நியமிக்கப்படுவார்கள்‌. அத்தோடு கொவிட்‌ சட்டதிட்டங்களை மீறியமைக்காக பொலிஸாரினால்‌ வழக்கு தொடரப்பட்டு தண்டிக்‌கப்படுவார்கள்‌ என வக்பு சபை அறிவித்துள்ளது.

கொவிட்‌ 19 தொடர்பான ௬காதார அமைச்சின்‌ சுற்று நிருபம்‌, புத்தசாசன மற்றும்‌ மதவிவகாரங்கள்‌ அமைச்சின்‌ சுற்று நிருபம்‌ மேலும்‌ வக்பு சபையின்‌ வழி காட்டல்களை மீறி கடந்த வெள்ளிக்கிழமை ஜும்‌ ஆ கூட்டுத்‌ தொழுகை நடாத்திய வவுனியா நகர்‌ பள்ளிவாசல்‌ மறு அறிவித்தல்‌ வரை மூடப்பட்டுள்ளதாக வக்பு சபையின்‌ தலைவர்‌ சட்டத்தரணி சப்ரி ஹலீம்தீன்‌ தெரிவித்தார்‌.

ஜும்‌ ஆ கூட்டுத்‌ தொழுகைக்கு அனுமதியளித்த வவுனியா நகர்‌ பள்ளிவாசல்‌ நிர்வாகத்தை பதவி நீக்கம்‌ செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும்‌, புதிய நிர்வாக சபையொன்று நியமிக்கப்படவுள்ளதாகவும்‌ அவர்‌ கூறினார்‌. பள்ளிவாசல்‌ நிர்வாகிகளுக்கு எதிராக வழக்குத்‌ தொடருவதற்கு பொலிஸாரும்‌, சுகாதாரத்துறையினரும்‌ நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளதாகவும்‌ அவர்‌ தெரிவித்தார்‌.

இதே வேளை கிழக்கு மாகாணத்தின்‌ சில பள்ளிவாசல்‌களில்‌ மீலாதுன்‌ நபி மெளலூது ஓதும்‌ நிகழ்வு இடம்பெற்றதையடுத்து பொலிஸாரும்‌, பொது சுகாதார அதிகாரிகளும்‌ அந்நிகழ்வுகளை தடைசெய்து சம்பந்தப்பட்டவர்கள்‌ எச்சரிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த வக்பு சபையின்‌ தலைவர்‌ அவ்வாறான பள்ளிவாசல்கள்‌ தொடர்பான அறிக்கையை பொலிஸாரிடம்‌ கோரியுள்ளதாகவும்‌ சம்பந்தப்பட்ட பள்ளி வாசல்‌ நிர்வாகங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படுமெனவும்‌ கூறினார்‌.

பொலிஸாருக்கும்‌, பொது சுகாதார அதிகாரிகளுக்கும்‌ கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து பொலிஸாரும்‌, சுகாதார துறையினரும்‌ கடந்த வெள்ளிக்கிழமை வவுனியா நகர்‌ பள்ளிவாசலில்‌ ஜும்‌ ஆ தொழுகை இடம்பெற்றபோது திடீர்‌ சோதனை நடாத்தினர்‌. அச்சந்தர்ப்பத்தில்‌ பள்ளிவாசலில்‌ சுமார்‌ 7கபேர்‌ தொழுகைக்காக ஒன்று கூடியிருந்தனர்‌.

பள்ளிவாசலில்‌ கூட்டுத்தொழுகைகள்‌ தடைசெய்யப்பட்‌டிருப்பதால்‌ பொலிஸார்‌ கூடியிருந்தவர்களையும்‌, நிர்வாகத்தினரையும்‌ எச்சரித்தனர்‌. மறுதினம்‌ ‘சனிக்கிழமை’ மறு அறிவித்தல்‌ வரை பள்ளிவாசல்‌ மூடப்பட்டிருப்பதாக அங்கு அறிவித்தல்‌ ஒட்டப்பட்டது. தொடர்ந்தும்‌ பள்ளிவாசல்‌ மூடப்‌பட்டிருப்பது குறிப்பிடத்தக்கதாகும்‌.

பள்ளிவாசல்‌ நிர்வாக சபை உறுப்பினர்‌ ஒருவரை ‘விடிவெள்ளி’ தொடர்பு கொண்டு வினவியபோது அவர்‌ பின்வருமாறு தெரிவித்தார்‌. ‘பள்ளிவாசலில்‌ தொழுகைக்காக ஒன்று கூடியவர்களின்‌ பெயர்‌ விபரங்களை பொலிஸார்‌ தருமாறு கோரினார்கள்‌. அவர்களுக்கு பிசிஆர்‌ பரிசோதனை மேற்‌ கொள்ள வேண்டுமென்றார்கள்‌.

தொழுகைக்காக வருகை தந்தவர்கள்‌ தமது விபரங்களைப்‌ பதிவதற்கு பள்ளிவாசலில்‌ பதிவேடு ஒன்று பேணப்படாமை காரணமாக அந்த விபரங்களை வழங்க முடியாது என நாங்கள்‌ தெரிவித்தோம்‌. அவ்வாறான விபரங்களை கையளித்தால்‌ மூடப்பட்டுள்ள பள்ளிவாசலை மீளத்‌ திறப்பதற்கு அனுமதியளிக்க முடியும்‌ என்றார்கள்‌.

இதேவேளை கொவிட்‌ 19 வைரஸ்‌ தொடர்பில்‌ பள்ளிவாசல்‌ நிர்வாகங்கள்‌ பொறுப்புடன்‌ நடந்து கொள்ள வேண்டுமெனவும்‌ நாட்டின்‌ சட்டங்களை கண்டிப்பாக பின்பற்ற வேண்டுமெனவும்‌ வக்பு சபையின்‌ தலைவர்‌ அனைத்து பள்ளிவாசல்‌ நிர்வாகங்களையும்‌ கோரியுள்ளார்‌.

(ஏ.ஆர்‌.ஏ.பரீல்‌) – விடிவெள்ளி 16/10/21

Check Also

ஹங்வெல்லை துப்பாக்கிச் சூடு நடந்தது என்ன?

வாஹித் லெப்பை மொஹம்மது பர்சான் 46 வயதான மூன்று பிள்ளைகளின் தந்தை. ஹங்வெல்லை நகரின் ஹோட்டல் ஒன்றினை நடாத்திச் செல்பவர். …

Free Visitor Counters Flag Counter