இலங்கையின் நெருக்கடியும், வர்க்கமும், நுகர்வும்

பால் மா வாங்குவதற்கு மக்கள் நீண்ட வரிசையில் காத்துக்கொண்டிருப்பது காணப்படுகிறது, அங்கு ஒரு வாடிக்கையாளருக்கு ஒரே ஒரு பக்கெட் விற்கப்பட்டது. சில நேரங்களில் அவர்கள் வெறுங்கையுடன் திரும்பிச் சென்றனர்.

வாரந்தோறும், இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கான தட்டுப்பாடு, அதிகரிக்கும் வாழ்க்கைச் செலவு என்பன சாதாரண மக்களின் அன்றாட வாழ்க்கையை முடக்குகின்றன. பொருளாதார மந்தநிலை அதிகரிக்கும்போது முறைசாராத் துறையில் வருமான வீழ்ச்சி மற்றும் உணவுப் பொருட்களின் விலை அதிகரிப்பு என்பனவற்றால் உழைக்கும் மக்கள் பிழியப்படுகின்றனர். இலங்கைக்கு இறக்குமதி செய்வதற்குத் தேவையான அந்நியச்செலாவணி கையிருப்புகள் குறைந்துவரும் நெருக்கடிக்கு மத்தியில் உலகளாவிய எண்ணெய் விலைகள் மூன்று வருட உச்சத்திற்கு அதிகரித்திருப்பதால், தேசிய பொருளாதாரமே முடங்கும் அபாயத்தில் உள்ளது.

இறக்குமதி செய்யப்பட்ட அத்தியாவசிய பொருட்களுக்கான பற்றாக்குறை நிலைமை எவ்வாறு ஏற்பட்டது? பொறுப்பை ஏற்படுத்தும் போது , இந்த ஆண்டுகளில் யார் சம்பாதித்தார்கள், இப்போது யார் அதிகம் இழக்கிறார்கள் என்பதைப் பார்த்து இந்த நெருக்கடிக்கு வழிவகுக்கும் பொருளாதாரக் கொள்கைகளை நாம் பகுப்பாய்வு செய்ய வேண்டும். உண்மையில், நெருக்கடிகள் கடுமையான முரண்பாடுகளை வெளிப்படுத்துகின்றன, இதில் நாட்டிற்குள் கடுமையான வர்க்கசமத்துவமின்மை மற்றும் பிரித்தெடுக்கும் உலகளாவிய செயல்முறைகள் உள்ளன. சுருக்கமாகக் கூறினால் எவர் செல்வத்தைக் குவிக்கிறார்கள் , எவர் சுரண்டப்படுகிறார்கள் மற்றும் எவர் அகற்றப்படுகிறார்கள் என்பதாகும்.

ஆடம்பரமான நுகர்வு

இலங்கையின் வெளிநாட்டு வருமானம் எப்போதும் உழைக்கும் மக்களின் குறிப்பாக உழைக்கும் பெண்களின் வியர்வை மற்றும் துன்பத்திலிருந்து வருகிறது. அதாவது, பெருந்தோட்டங்களில் தேயிலை பறிக்கும் பெண்கள், ஆடைத் தொழிற்சாலைகளில் சுரண்டப்படும் இளம் பெண்கள் மற்றும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மத்திய கிழக்கில் தொழிலாளர்களுக்குரிய உரிமைகள் இல்லாமல் கடுமையான தொழில் நிலைமைகளுக்கு உட்பட்ட உள்நாட்டு பெண் மற்றும் ஆண் தொழிலாளர்கள் ஆகியோர் உள்ளடங்குகின்றனர். சுற்றுலாத்துறை நாட்டிற்கு அந்நிய செலாவணியை ஈட்டித்தரும் மற்றொரு பாரிய துறையாகும். ஆனால் பொருளாதாரத்திற்கு அதன் நிகர இலாபம் விவாதத்திற்கு உரியதாகும். ஹோட்டல்கள், ரியல் எஸ்டேட் மற்றும் உள்கட்டமைப்பு ஆகியவற்றில் கணிசமான முதலீடு கொழும்பு மற்றும் அதிவேக வீதிகளை அழகுபடுத்துதல் என்பன வெளிநாட்டு வருமானத்தில் போதிய வருவாயைக் கொண்டுவந்துள்ளதா?

இலங்கையின் அரசியல் பொருளாதாரத்தின் முரண்பாடு என்னவென்றால், உழைக்கும் மக்கள் அந்நிய செலாவணியை சம்பாதித்தபோது, இந்த நாட்டில் உள்ள உயரடுக்கு அதை ஆடம்பரமான இறக்குமதிக்கு அதாவது ஆடம்பரமான வாகனங்கள் மற்றும் அவர்களின் வீடுகளுக்கான தளபாடங்கள் , உபகரணங்கள் என்பனவற்றுக்கு செலவழித்தது. மேலும் செல்வந்த வர்க்கங்களின் நுகர்வை விரிவுபடுத்துவதற்காக, வெளிநாட்டு வருவாய் வெளிநாட்டு கடன்களுக்காக பயன்படுத்தப்படுத்தப்பட்டது. இருப்பினும், தவிர்க்க முடியாத சென்மதிநிலுவை நெருக்கடியுடன் இறக்குமதிகள் குறைக்கப்படுவதால், உழைக்கும் மக்களுக்கு அத்தியாவசிய உணவுப்பொருட்கள் மறுக்கப்படுவதுடன், அங்கு பால் உணவுகள், பருப்பு வகைகள் பற்றாக்குறையுடன் விலை உயர்வுக்கு வழிவகுக்கிறது, அத்துடன் இது அவர்களின் ஊட்டச்சத்தை பாதிக்கிறது.

இறைமைக் கடன் மற்றும் வாகன இறக்குமதிகளின் உதாரணம் அறிவுறுத்தலாக உள்ளது. கடந்த ஆண்டு நிலவரப்படி இலங்கை நிலுவையாகவிருக்கும் தனது இறைமை பிணைமுறிகளை திருப்பிச் செலுத்த போராடி வருகிறதுடன் அனைத்து வாகன இறக்குமதிகளுக்கும் தடை விதித்துள்ளது. 2007 ஆம் ஆண்டு தொடங்கி, நாட்டின் வெளி நாட்டு வருமானம் சர்வதேச மூலதனச் சந்தைகளில் இறைமைப் பிணைமுறிப் பத்திரங்களை பெரும்பாலும் பத்து வருட விதிமுறைகளுடன், கடன் வாங்குவதற்குப் பயன்படுத்தப்பட்டது. ஆனால் சில ஐந்து, ஆறு அல்லது பதினொரு வருட தவணை முறைகளுடனாகும். இந்த இறைமை பிணைமுறி பத்திரங்கள் சராசரி ஆறு சதவிகித ஆண்டு வட்டியுடன் திருப்பிச் செலுத்தப்பட வேண்டும். பத்து வருடங்களில் திருப்பிச் செலுத்தப்படும்போது, 1,000 மில்லியன் அமெரிக்க டொலருக்கு 1800 மில்லியன் டொலர் செலுத்தப்பட வேண்டும்.

இந்த சூழலில், 2010 முதல் 2019 வரை, இலங்கையின் வாகன இறக்குமதி கட்டணம் 8,628 மில்லியன் டொலராகும். இன்று இலங்கைக்கு மிகப்பெரிய தலைவலியாக இருப்பது அடுத்த பல ஆண்டுகளில் திருப்பிச் செலுத்தப்பட வேண்டிய 13,000 மில்லியன் டொலர் இறைமை பத்திரங்களாகும் . இங்கே, ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக 863 மில்லியன் அமெரிக்க டொலர் வாகனங்களை இறக்குமதி செய்வதன் மூலம் இறைமை பிணைமுறி கடனில் இருந்து அந்நியச் செலாவணியைப் பயன்படுத்தி ஒவ்வொரு ஆண்டும் பத்து வருடங்கள் கழித்து 1,500 மில்லியன் அமெரிக்க டொலர் கடனை செலுத்த வேண்டும். பத்து ஆண்டுகளில் கடனை திருப்பிச் செலுத்தும் தொகை பலமடங்காகிறது மற்றும் இறைமை பிணைமுறிக் கடன் இருப்பின் நீடித்த தன்மை தெளிவாகிறது. உயரடுக்கின் கடந்தகால ஆடம்பர நுகர்வுக்கு பணம் செலுத்த முடியாததால், நாடு இப்போது மக்களுக்கு அத்தியாவசிய உணவுப்பொருட்களின் இறக்குமதியை கட்டுப்படுத்தும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. செல்வந்த வர்க்கங்களுக்கு ஒரு பெரிய செல்வ வரியை விதிப்பது மற்றும் அத்தகைய செல்வத்தை தற்போதைய நெருக்கடியிலிருந்து தப்பிப்பிழைப்பதற்கு உழைக்கும் வர்க்கங்களுக்கு மறு விநியோகம் செய்வது நியாயமற்றதா?

சர்வதேச இரட்சகர்கள்

நிச்சயமாக, செல்வந்த வர்க்கங்கள் மற்றும் அவர்களின் புதிய தாராளவாத சார்புக் குரல்கள் ‘செல்வ வரி’ என்பதைக் கூட சொல்ல விரும்பவில்லை, சில ஆண்டுகளுக்கு முன்பு ‘இறக்குமதி கட்டுப்பாடு’ என்று குறிப்பிடுவது தப்பானதாகவிருந்தது. மூலதனச் சந்தைகளில் கடன் வாங்கும் நம்பிக்கையில்,சர்வதேச நாணய நிதியத்தால் மீண்டும் காப்பாற்றப்படுவதே இப்போது அவர்களின் தீர்வாகவுள்ளது. இந்த மூலோபாயம் நம்பத்தகாதது, ஏனெனில் மூலதனச் சந்தைகள் சர்வதேச நாணய நிதியத்தின் மூலம் நம்பிக்கை கொள்வதற்கு வாய்ப்பில்லை. மேலும் இலங்கை ஏற்கனவே செலுத்தும் அதிக வட்டி விகிதத்தில் பல மடங்கு கடன் வாங்க வேண்டிய கட்டாயம் ஏற்படலாம். அதிக கவலை என்னவென்றால், சர்வதேச நாணய நிதியத்தின் ஒப்பந்தமானது நாட்டின் மீதமுள்ள சமூக நலத்திட்டங்களையும் குறைமதிப்பிற்கு உட்படுத்தும் நிபந்தனைகளுடன் வரும் என்பதாகும். கடந்த நாற்பத்து நான்கு ஆண்டுகளில் நாணய நிதியம் மற்றும் உலக வங்கியின் தொடர்ச்சியான பொருளாதார குண்டுவீச்சு ஏற்கனவே உணவு மானியத்தை குறைத்துள்ளது. அத்துடன் அரச சேவைகள் வெளிப்படையான மற்றும் ஊர்ந்து செல்லும் தனியார்மயமாக்கல் மூலம் மக்களின் சமூக மற்றும் பொருளாதார சுமையை அதிகரித்துள்ளது.

கடந்த வாரத்தில், கொழும்பு துறை முக மேற்கு முனையத்தை 700 மில்லியன் அமெரிக்க டொலருக்கு அபிவிருத்தி செய்வதற்கு இந்தியாவின் ஆதரவிலான அதானி குழுமத்துடனும், 500 மில்லியன் அமெரிக்க டொலர் கடனுடன் கிராமப்புற வீதிகளை நிர்மாணிக்க உலக வங்கியுடனும் இலங்கை ஒப்பந்தங்களில் கைச்சாத்திட்டுள்ளது .துறைமுகங்கள் மற்றும் வீதிகள் மக்களுக்கு முன்னுரிமை அல்ல என்பதை நாங்கள் அறிவோம். இருப்பினும்,யாசகர்கள் தேர்வாளர்களாக இருக்க முடியாது, மேலும் அரசாங்கம் எந்தவிதமான வெளிநாட்டு முதலீடுகளையும் நாடுகிறது. கடந்த சில வருடங்களாக சீனாவின் கடன்கள் மற்றும் மின் நிலையமொன்றில் 500 மில்லியன் அமெரிக்க டொலர் முதலீடு பற்றிய ஊகங்கள் அனைத்தும் அபி விருத்தி தொடர்பான கேள்விக்குரிய விளைவுகளுடன் புவிசார் அரசியல் நலன்களால் வடிவமைக்கப்பட்ட மூலோபாய முதலீடுகளாகும்.

சீனா, இந்தியா , அமெரிக்கா மற்றும் அமெரிக்காவால் ஆதரிக்கப்படும் நாணய நிதியம் மற்றும் உலக வங்கி ஆகியவை இலங்கையின் வளங்களை சுரண்டுவதற்கான சொந்த நிகழ்ச்சி நிரலைக் கொண்டுள்ளன. மேலும், வர்த்தகம் மற்றும் நிதிப் பாய்ச்சல்களின் தாராளமயமாக்கல் மற்றும் அத்தகைய மேலாதிக்கவாத செயற்பாட்டாளர்களால் முன்தள்ளப்படும் தனியார்மயமாக்கல் ஆகியவை இறக்குமதியைச் சார்ந்திருக்கும் நெருக்கடி மற்றும் இலங்கையின் ஏற்றுமதிக்கான விலைச்சுட்டி வீதத்தின் சரிவு ஆகியவற்றுடன் தொடர்புபட்டதாகும்.

பொது விநியோகம்

தற்போதைய நெருக்கடிக்கு மத்தியில் அரசாங்கத்தின் உடனடி முன்னுரிமையானது உணவுப்பொருட்கள், அதன் விநியோகம் மற்றும் மக்களின் நுகர்வுக்கானதாக இருக்க வேண்டும். தொற்றுநோயிலிருந்து ஒன்றரை வருடங்களை மக்களுக்கு நிவாரணம் அளிப்பது தொடர்பாக தீர்க்கமான முடிவெடுக்காமல் வீணடித்த நிலையில் அரசாங்கம் அதன் போக்கை அவசரமாக மாற்றிக்கொள்ள வேண்டும். அவசரகால ஒழுங்குவிதிகள் மூலம் விலைக் கட்டுப்பாடு மற்றும் கடைகளில் தேடுதல்கள் பற்றிய பெரும் பேச்சுக்குப் பிறகு அரசாங்கம் அதன் முகத்தில் சேற்றைப் பெற்றிருந்தது. அரிசி ஆலை உரிமையாளர்கள் இப்போது அரிசியின் விலையை நிர்ணயிக்கின்றனர் . உண்மையில், சந்தையை சுற்றறிக்கைகளால் கட்டுப்படுத்த முடியாது மற்றும் அது அடக்குமுறை விடயம் .

எதிர்வரும் காலங்களில் இறக்குமதிக்கு மட்டுப்படுத்தப்பட்டளவிலான அந்நியச் செலாவணி கையிருப்பே அரசாங்கத்திடம் உள்ளது என்பதே உண்மை. இறக்குமதி விநியோகம் நிலையற்றதாக இருந்தால், அது பதுக்கல் மற்றும் விலை உயர்வுக்கு வழிவகுக்கும். பொது விநியோகத்திற்கான மாற்று முறையை அரசாங்கம் உருவாக்க வேண்டும். நாடு 1970 களில் உணவு ஆணையாளர் திணைக்களம் கூட்டுறவு மொத்த விற்பனை நிலையம், பல்நோக்கு கூட்டுறவு சங்கங்கள் மற்றும் பங்கீட்டு உணவு முத்திரைகள் ஆகியவற்றை மேற்கொண்டிருந்தது. அவசரமாக ஒரு புதிய பொது விநியோக முறையை உருவாக்கி, செல்வ வரியுடன் உணவு மானியங்களை வழங்குவதை போன்ற ஒன்றை முயற்சிப்பதைத் தவிர எங்களுக்கு வேறு வழியில்லை.

டெய்லி மிரர்

Check Also

ஹம்தியின் மரணம் குறித்து விரிவான விசாரணை நடத்துக

சிறுநீரக சத்திர சிகிச்சைகளை அடுத்து உயிரிழந்த கொழும்பு கொட்டாஞ்சேனையைச் சேர்ந்த 3 வயதான ஹம்தி பஸ்லிமின் மரணம் தொடர்பில் விரிவான …

Free Visitor Counters Flag Counter