குறைந்த விலைக்கு அரிசிக் கையிருப்பை விற்க முடியும் – சிறிய, நடுத்தர அரிசி ஆலை உரிமையாளர்கள் சங்கம்

பாரிய அரிசி ஆலை உரிமை யாளர்களால் நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்ட விலையை விட குறைந்த விலைக்கு அரிசி கையிருப்பை விற்க முடியும் என அகில இலங்கை சிறிய மற்றும் நடுத்தர அரிசி ஆலை உரிமையாளர்கள் சங்கம் தெரி வித்துள்ளது.

அரிசிக்கான கட்டுப்பாட்டு விலை தொடர்பான வர்த்தமானி அறிவிப்பை நேற்று முன்தினம் நீக்கியது.

இதனை பாரிய அளவிலான அரிசி ஆலை உரிமையாளர்கள் அரிசி வகைகளின் விலையை அதிகரிக்க முடிவு செய்தனர்.

இதற்கமைய நாட்டரிசி, சம்பா மற்றும் கீரி சம்பா போன்றவைகளின் விலைகளானது முறையே ரூபா 115, ரூபா 140 மற்றும் ரூபா 160 என அதிகரிக் கப்பட்டது.

இருப்பினும், அகில இலங்கை சிறிய மற்றும் நடுத் தர அரிசி ஆலை உரிமையாளர் கள் சங்கம் குறைந்த விலையில் அரிசியை வழங்க முடியும் என அறிவித்துள்ளது.

ஒரு கிலோ நாட்டு நெல்லை விவசாயிகளிடம் இருந்து ரூபா 60 இற்கு பெற்று ஒரு கிலோ நாட்டு அரிசியை ரூபாவிற்கு 107 விற்பனைச் செய்ய முடியும் என அச்சங்கத்தின் தலைவரான வி.கே. ரஞ்சித் தெரிவித்துள்ளா னார். ஒரு கிலோ சம்பா மற்றும் கீரி சம்பா நெல்லை முறையே ரூபா %0 மற்றும் ரூபா 80 இற்கு விவசாயிகளிடமிருந்து பெற்று ஒரு கிலோ சம்பா அரிசியை ரூபா 130 இற்கும், ஒரு கிலோ கீரி சம்பா அரிசியை ரூபா 150 க்கு விற்பனைச் செய்ய முடியும் என அவர் மேலும் தெரிவித்தார்.

தொடர்ச்சியான விலை உயர்வை நாடு தக்கவைக்க முடியாது. அத்துடன் இந்த நட வடிக்கையின் மூலம் பாரிய ஆலை உரிமையாளர்கள் மற் றும் இடைத்தரகர்கள் பொது மக்களுக்கு சுமையாக இருக்கும் போது பாரிய இலாபத்தைப் பெற முயற்சிக்கின்றனர். சந்தை மீண்டும் சரிந்தால் அவர்கள் பொறுப்பேற்க வேண்டும்.

தங்களுக்கு பாரிய ஆலை உரி மையாளர்கள் மீது நம்பிக்கை இல்லை என்றும், ஏனெனில் பல்வேறு காரணங்களை காட்டி மீண்டும் விலை உயர்வை அறி விக்க முடியும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார். (தினக்குரல் 30/9/21)

Check Also

ஹங்வெல்லை துப்பாக்கிச் சூடு நடந்தது என்ன?

வாஹித் லெப்பை மொஹம்மது பர்சான் 46 வயதான மூன்று பிள்ளைகளின் தந்தை. ஹங்வெல்லை நகரின் ஹோட்டல் ஒன்றினை நடாத்திச் செல்பவர். …

Free Visitor Counters Flag Counter