நாட்டில் நாளொன்றில் 5,000 மெற்றிக் டன் உணவுப் பொருட்கள் கழிவாக வீசப்படுவதாக சுற்றாடல் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
உணவு கழிவுகள் மற்றும் உணவு மாசடைவதைக் குறைப்பதற்கான சர்வதேச விழிப்புணர்வு தினத்தை முன்னிட்டு நேற்று சுற்றாடல் அமைச்சில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
உலகில் மனித தேவைக்காக உற்பத்தி செய்யப்படும் உணவில் மூன்றில் ஒரு பகுதி வீணாகுவதாக சர்வதேச உணவு மற்றும் விவசாய அமைப்பு தெரிவித்துள்ளது.
இவ்வாறாக வருடத்திற்கு 1.3 பில்லியன் டன் உணவு வீணடிக்கப்படுவதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
அதேநேரம் நாட்டில் உற்பத்தி செய்யப்படும் பயிர்களில் 40 சதவீதம் வீணடிக்கப்படுகிறது.
இதனால் நாட்டிற்கு பாரிய பொருளாதார நட்டம் ஏற்படுவதாக சுற்றாடல் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
ஹிரு செய்திகள் hirunews.lk–