அன்பின் அக்குறணை மக்களுக்கு!
அஸ்ஸலாமு அலைக்கும்
அக்குறணை கோவிட் கண்காணிப்பு செயலணி பற்றிய முக்கிய அறிவித்தல்
இலங்கையில் கோவிட் தொற்றும் மரணமும் தினமும் அதிகரித்த வண்ணருக்கின்றது. சுகாதாரத் துறையினரும், அரசாங்கமும் பல முயற்சிகளை மேற்கொள்கின்றனர். நாடு மூடப்பட்டிருக்கின்றது. இந்த நோயிலிருந்து எங்களையும், எங்களது அன்புக்குரிய உறவினர்களையும் பாதுகாத்துக் கொள்ள இலங்கை வாழ் ஒவ்வொரு பிரஜைகளும், சமூகங்களும், ஊர்களும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டியிருக்கி ன்றது. அந்த வகையில் அக்குணையில் இருக்கின்ற முக்கிய சமூக நிறுவனங்கள் ஒன்றிணைந்து, வைத்தியர்களை ஆலோசனைகளின் அடிப்படையில் ஊரையும், மக்களையும் பாதுகாத்துக் கொள்வதற்காக “அக்குறணை கோவிட் கண்காணிப்பு செயலணி: என்ற ஒரு கட்டமைப்பை உருவாக்கி, செயல்பட்டு வருகின்றனர் என்பதை ஊர் மக்களுக்கு தெரிவித்துக் கொள்கின்றோம்.
நல்லதொரு திட்டமிடலுடன், சகல பகுதிகளையும் உள்ளடக்கியதாக, குறிப்பாக பள்ளிவாசல்கள் மையப்படுத்தி குறித்த திட்டம் அமுல்படுத்தப்படுகின்றது.
ஊரின் பிரதான அமைப்புக்களான அக்குறணை ஜம்இய்யதுல் உலமா, அக்குறணை மஸ்ஜிதுகளின் சம்மேளனம், அக்குறணை பிரதேச சபை, அக்குறணை வைத்தியர்கள் அமைப்பு, அக்குறணை வர்த்தக சங்கம், அக்குறணை முலன்பரிச் சங்கம், அக்குறணை ஜனாஸா சங்கம் மற்றும் அக்குறணைடோல்க் ஆகிய நிறுவனங்களை உள்ளடக்கிய இந்த கோவிட் கண்காணிப்பு செயலணி, அக்குறணை பிரதேச செயலகம், அக்குறணை சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயம் மற்றும் அலவதுகொடை பொலீஸ் நிலையம் ஆகியவற்றின் ஆலோசனைகள், ஒத்துழைப்புக்களுடன் பணிகளை முன்னெடுக்கின்றது.
ஒவ்வொரு பள்ளிவாயல்களிலும் அந்தந்த நிர்வாக சபைகளினால் Rapid Action Team கள் உருவாக்கப்பட்டு வருகின்றன. அதில், குறித்த பகுதியில் மக்களுக்கு உதவுவதற்காக விழிப்புணர்வு ஏற்படுத்துபவர்கள், சுகாதாரத் தொண்டர்கள், தகவல் சேகரிப்பவர்கள் அடங்கியிருப்பர். சுமார் 30 வைத்தியர்கள், அக்குறணை சுகாதார வைத்திய அதிகாரியுடன் இணைந்து நோயாளர்களுக்குத் தேவையான வைத்திய ஆலோசனைகளை வழங்க முன்வந்திருக்கின்றனர். மக்கள் எதிர்கொள்கின்ற ஏனைய பிரச்சினைகளையும் கவனத்தில் எடுத்து தேவையான ஒத்துழைப்புக்களையும் வழங்க எதிர்பார்க்கின்றோம்.
எங்களதும், ஊரினதும், நாட்டினதும் நலன்கருதி நன்கு திட்டமிட்டு மூன்னெடுக்கப்பட்டுள்ள இத் திட்டத்திற்கு உங்களாலான பூரண ஒத்துழைப்பும், பங்களிப்பையும், தேவையான ஆலோசனைகளையும் வழங்குவீர்களென எதிர்பார்க்கின்றோம்.
மேலதிக விபரங்களை உங்களது பகுதி மஹல்லாவில் பெற்றுக் கொள்ளலாம், அல்லது அக்குறணை கோவிட் கண்காணிப்பு செயலணியுடன் தொடர்புகொண்டு பெற்றுக் கொள்ளலாம்.
உங்களது ஒத்துழைப்பிற்கு மிக்க நன்றி!
அக்குறணை ஜம்மியத்துல் உலமா மற்றும் அக்குறணை மஸ்ஜிதுகள் சம்மேளனம்