கொவிட் 19 என அழைக்கப்படும் கொரோனா வைரஸ் தொற்றினால் நேற்றைய தினம், உயிரிழந்த ரத்மலானை பகுதியை சேர்ந்த நபர் அண்மையில் இந்தியாவிற்கு பயணம் மேற்கொண்டு நாடு திரும்பியவர் என கண்டறியப்பட்டுள்ளது.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் அனில் ஜாசிங்க இதனை தெரிவித்தார்.
58 வதுடைய நபர் ஒருவர் கொரோனா தொற்றினால் நேற்றிரவு IDH வைத்தியசாலையில் வைத்து உயிரிழந்தார்.
குறித்த நபர் தனது மனைவியுடன் கடந்த 16 ஆம் திகதி இந்தியா சென்று நாடுதிரும்பியுள்ளார் என விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
அத்துடன் குறித்த இருவரும் இத்தாலியிலிருந்து இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட குழுவினருடன் காணப்பட்டமையினால் கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கலாம் என காவல் துறை சந்தேகம் வெளியிட்டுள்ளதோடு, இந்தியாவிலேயே கொரோனா தொற்றுக்குள்ளானார்களா என்பது தொடர்பிலும் காவல் துறையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
மேலும் நேற்றைய தினம் உயிரிழந்த குறித்த நபரின் மனைவிக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிபடுத்தப்பட்டதன் பின்னர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகவும் பின்னர் குணமடைந்த நிலையில் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனாாவல் நேற்றைய தினம் உயிரிழந்த நபரின் இறுதி கிரியைகள் இன்றைய தினம் இடம்பெறவுள்ளதோடு ஏற்கனவே உயிரிழந்தவர்களின் சடலங்கள் தகனம் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.