இலங்கையில் பல உயர்மட்ட அதிகாரிகள் கொவிட்-19 நோயால் பாதிக்கப்பட்டு தற்சமயம் சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது.
அதன்படி முன்னாள் பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹணவும், விமானப் படைத் தளபதி ஏர் மார்ஷல் சுதர்சன பத்திரன ஆகியோர் கொவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தேசிய தேர்தல் ஆணையகத்தின் தலைவர் ஜெனரல் சமன் ஸ்ரீ ரத்நாயக்கவும் பாதிக்கப்பட்டு தற்போது சிகிச்சை பெற்று வருகிறார்.
இதற்கிடையில் ஆகஸ்ட் மாதத்தில் மாத்திரம் 08 பாராளுமன்ற உறுப்பினர்கள் கொரோனா தொற்றுக்கு சாதகமாக சோதனை செய்துள்ளனர்.
இறுதியாக இராஜாங்க அமைச்சர் ஜனக வக்கும்புர நேற்று கொரோனா தொற்றுக்கு சாதகமாக சோதனை செய்தார். இந்த மாதம் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட எட்டாவது நபர் இவர் ஆவார்.
கடந்த சில நாட்களாக நாட்டில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கொரோனா தொற்றாளர்கள் அன்றாடம் பதிவாகி வரும் நிலையில், தொற்றிலிருந்து பாதுகாக்க சுகாதார அமைச்சினால் பிறப்பிக்கப்பட்ட உத்தரவுகளை அவசியம் கடைபிடிக்குமாறு வலிறுத்தப்பட்டுள்ளது. -வீரகேசரி-