அதி வீரியம் கொண்டதும் தடுப்பூசிகளுக்கு கட்டுப்படாத “எப்சிலன்” கொவிட் வைரஸ் திரிபு விரைவில் இலங்கைக்கு பரவும் ஆபத்து இருப்பதாக மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
நான்காவது கொரோனா அலையில் பாகிஸ்தான் மற்றும் இந்தியாவில் இந்த வைரஸ் திரிபு கண்டறியப்பட்டமையானது, விரைவில் இது இலங்கைக்குள் நுழையும் ஆபத்து இருப்பதாக மருத்துவ நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
எப்சிலன் வைரஸ் திரிபின் புதிய மூன்று பிறழ்வுகள் உருவாகியுள்ளதாக வொஷிங்டன் பல்கலைக்கழக ஆராய்ச்சி அறிக்கை தெரிவிக்கிறது. இது தற்போதுள்ள தடுப்பூசிகளின் எதிர்ப்பு சக்தியை 70 சதவீதம் வரை பலவீனப்படுத்துவதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த எப்சிலன் வைரஸ் CAL.20C, கலிபோர்னியா வகை அல்லது B 1.429 எனப்படும் மூன்று பிறழ்வுகைளை கொண்டுள்ளது. இது முதன்முதலாக கலிபோர்னியாவில் கண்டறியப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அமெரிக்காவின் நியூயோர்க் மற்றும் பாகிஸ்தானின் லாகூரிலும் அடையாளம் காணப்பட்டது.
இந்நிலையில், தற்போது இந்த கொடூர வைரஸ் திரிபானது இமாச்சலப் பிரதேசம் வழியாக இந்தியாவிற்கும் பரவியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. -தமிழன்.lk-