ரயர்களை வைத்து சடலங்களை ஒன்றாக எரிக்கத் தீர்மானம்!

பாணந்துறை ஆதார வைத்தியசாலைகளில் கொரோனா தொற்றால் மரணித்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என்றும் இந்த சடலங்களை ஒன்றாக இட்டு தகனம் செய்வது குறித்து கவனம் செலுத்தியுள்ளதாகவும் பாணந்துறை நகர சபை தலைவர் நந்தன குணதிலக்க தெரிவித்துள்ளார்.

ரயர்களை வைத்து விறகுகளால் சடலங்களைத் தகனம் செய்யக்கூடிய நிலை தற்போது ஏற்பட்டுள்ளது என்றும் தகனம் செய்வதற்காகத் தற்காலிகமாக தகனசாலைகளை வெளியே அமைப் பதற்கான திட்டங்கள் இருந்தாலும், உள்ளூர் அதிகாரிகள் அதற்காக அதிக பணத்தைச் செலவழிக்க வேண்டியிருக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

பாணந்துறை நகர எல்லையில் ஒரே ஒரு தகனசாலையே இருப்பதால், ஒரு நாளில் அதிகபட்சம் 3 சடலங்களை மாத்திரம் தான் எரிக்கலாம் என்பதால் கோரகான, மொறட்டுவ, வாதுவ உள்ளிட்ட சுற்றுப் பகுதிகளில் உள்ள தகனசாலைகளுக்கு அனுப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், நாளாந்த கொரோனா மரணங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளமையால் தகனசாலையில் நெருக்கடி நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

பாணந்துறை வைத்தியசாலை பிணவறைக்கு 37 சடலங்கள் மாத்திரம் தான் கொள்ளளவு திறன் இருந்தாலும் தற்போது, கொரோனா தொற்றால் மரணித்தவர்களின் 50க்கும் மேற்பட்ட சடலங்கள் இருப்பதாக பாணந்துறை ஆதார வைத்தியசாலையின் வைத்தியர் ஒருவர் தெரிவித்துள்ளார். (தினக்குரல் 19-8-21)

Check Also

ஹங்வெல்லை துப்பாக்கிச் சூடு நடந்தது என்ன?

வாஹித் லெப்பை மொஹம்மது பர்சான் 46 வயதான மூன்று பிள்ளைகளின் தந்தை. ஹங்வெல்லை நகரின் ஹோட்டல் ஒன்றினை நடாத்திச் செல்பவர். …

Free Visitor Counters Flag Counter