அக்குறணை பிரதேச சுகாதார மற்றும் திண்மக்கழிவுகள் முகாமைத்துவ மேம்பாட்டுக்காக அக்குறணை பிரதேச சபை தவிசாளரிடம் கண்டி மாவட்ட செயலாளரினால், மற்றுமொரு உதவி உபகாரம் கையளிப்பு”
கண்டி மாவட்ட செயலாளர் திரு. காமினி அவர்களது தலைமையில் கொரோனா தொற்றினைக் கட்டுப்படுத்துமுகமாக உருவாக்கப்பட்ட “US AID” Global Community அமைப்பின் அனுசரனையுடன் தெரிவுசெய்யப்பட்ட அரச நிர்வாக அமைப்புகளுக்கு திண்மக்கழிவுகளை வகைப்டுத்தி இடும் கொள்கலன்கள், கை கழுவும் உபகரணம், மற்றும் அறிவுருத்தல் பதாகை அடங்கிய தொகுதிகள் வழங்கும் நிகழ்வு இன்று கண்டி செயலகத்தில் நடைபெற்றது.
தெரிவு செய்யப்பட்ட அரச நிர்வாக அமைப்புக்கள் ஆறிலும் அக்குறணை பிரதேச சபை சுகாதார மற்றும் கொரோனா தொற்று கட்டுப்படுத்தும் செயல்பாடுகள் சிறப்பாக முறைப்படுத்தப்பட்டிருந்தமை மற்றும் திண்மக்கழிவுகள் முகாமைத்துவம் என்பன மிகவும் சாதகமான வகையில் அமைந்திருந்தமையே மாவட்ட செயலாளரினால் தெரிவு செய்யப்பட்டு தவிசாளர் இஸ்திஹார் இமாதுதீன் அவர்களிடம் இவ்வுபகரணத் தொகுதி கையளிக்கப்பட்டமை விஷேட அம்சமாகும்.
அத்துடன் இந்நிகழ்வில் மத்திய மாகாண ஆணையாளர் திரு. மேனக்க ஹேரத் , மத்திய மாகாண உதவி ஆணையாளர் திருமதி. நிலூகா புளத்கே உட்பட இன்னும் அரச அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
எதிர்வரும் காலங்களில் ஊரின் நிர்வாக எல்லைக்குள் சுகாதார மற்றும் திண்மக்கழிவுகள் முகாமைத்துவம் இன்னும் வலுவூட்டி நிர்வாக செயற்பாடுகள் முறைப்படுத்தப்பட்டு மக்களுக்கு இலகுவானதாக நடாத்திச் செல்வதில் கவனம் செலுத்தப்படும் என கௌரவ தவிசாளரினால் கருத்துத் தெரிவிக்கப்பட்டது.