ஊரடங்குச் சட்டம் அமுலிலிருக்கும் போது பேணப்பட வேண்டிய விடயங்கள்:
- அத்தியவசிய பொருட்களை வீட்டுக்கு விநியோகம் செய்யும் முறையினூடாகப் (Home delivery) பெற்றுக் கொள்ளல். இதற்கு அரசு அனுமதித்துள்ள நிறுவனங்களின் பெயர்பட்டியல் ஊடகங்கள் மூலம் வெளியிடப்பட்டுள்ளது.
- ஊரடங்குச் சட்டம் அமுலிலிருக்கும் போது வீட்டை விட்டு எவரும் வெளியில் செல்ல முடியாது. மிகவும் இக்கட்டான விதிவிலக்கான சந்தர்ப்பங்களில் மாத்திரம் உரிய அனுமதியை (curfew pass ) குறித்த பிரதேச பொலிஸ் நிலையத்தினூடாக பெற்றுக் கொண்ட பின்னரே வெளியில் சொல்ல முடியும். நிபந்தனைகளுடனே குறித்த அனுமதி வழங்கப்படும்.
- கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் நோக்கில் எம்மனைவரதும் நலனுக்காகவே ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது என்பதை விளங்கி பொறுப்புணர்வுடன் அதனை முழுமையாக பின்பற்றி நடத்தல். அதன் சட்டங்களை மீறுபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
தற்காலிகமாக ஊரடங்குச் சட்டம் நீக்கப்படுகின்ற காலப்பகுதியில் பேணப்பட வேண்டிய விடயங்கள்:
- அத்தியவசிய பொருட்களை முடிந்தளவு வீட்டுக்கு விநியோகம் செய்யும் முறையினூடாகப் (Home delivery) பெற்றுக் கொள்ளல். முடியாதபோது பொருட்களை கொள்வனவு செய்வதற்காக வீட்டிலிருந்து ஒருவர் மாத்திரம் செல்லல்.
- சிறுவர்களும், வயோதிபர்களும் வெளியில் செல்வதைத் தவிர்த்து வாலிபர்களின் மூலம் வெளித் தேவைகளை பூர்த்தி செய்தல்.
- வெளியில் செல்பவர்கள் கட்டாயமாக முகக்கவசம் அணிதல்.
- வரிசைகளில் நிற்கும் போது ஒவ்வொருவருக்குமிடையில் 1 மீற்றர் அல்லது 3 அடி இடைவெளியை பேணி நிற்றல்.
- கொள்வனவு நிலையங்களில் மிகக் குறைந்த நேரத்தை செலவிடல்.
- வீடு திரும்பியவுடன் கைகளை கழுவி நன்றாக சுத்தம் செய்த பின் அல்லது குளித்து ஆடையை மாற்றிய பின் குடும்ப அங்கத்தவர்களுடன் தொடர்பாடல்.
சுய தனிமைப்படுதலின் போது பேணப்பட வேண்டிய விடயங்கள்:
- கடந்த இரண்டு வாரங்களுக்குள் கொரோனா நோயாளி என்று சந்தேகிக்கப்படும் ஒருவருடன் நேரடித் தொடர்பு வைத்துள்ளீரா? அப்படியாயின் நீர் உடனடியாக சுய தனிமைப்படுத்தலுக்கு உட்பட வேண்டும்.
- நோய் அறிகுறி சம்பந்தமாக அவதானத்துடன் இருக்கவும்.
- வீட்டிலிருக்கும் ஏனையோரை விட்டும் பிரிந்திருந்து வீட்டிலேயே தரித்திருக்கவும்.
- பிறருடன் நடமாடும் பொழுது ஆகக்குறைந்தது 01 மீற்றர் தூரத்தை பேணிக் கொள்ளவும்.
- சுகாதாரமான பாதுகாப்பு முகக் கவசங்களை அணியவும்.
- இருமும் போதும் தும்மும் போதும் முகத்தை மூடிக் கொள்ளவும்.
- எந்நேரமும் சவர்க்காரமிட்டு முழுமையாக கைகளைக் கழுவவும்.
- வீட்டில் பாவிக்கும் பொருட்களை ஏனையவர்களுடன் பறிமாறிக் கொள்வதைத் தவிர்க்கவும்.
- பாவிக்கும் பொருட்களை நன்றாக சுத்தப்படுத்திக் கொள்ளவும். அத்துடன் பாவித்துவிட்டு ஒதுக்கும் பொருட்களை அழித்து விடவும்.
- அகற்றக்கூடிய தட்டில் உணவுகளை எடுப்பதோடு தனிமைப்படுத்தப்பட்ட மலசல கூடம் மற்றும் குளியலறைகளை பயன்படுத்தவும்.
- தனிமைப்படுத்தல் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டு ஆகக்குறைந்தது 14 நாட்களுக்கு இவ்விடயங்களை பின்பற்றவும்.
- இக்கால கட்டத்தில் நோயின் அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக கீழ்க்காணும் தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொள்ளவும்.
- 0112-444480/ 0112-444481/ 1933 மற்றும் lahd@police.lk என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்.
நீர் தனிமைப்படுத்தல் அறிவுரைகளிற்கு முரணாக செயற்பட்டால் அதன் பின்விளைவுகள் என்ன?
- தனிமைப்படுத்தல் மற்றும் நோய் தடை செய்தல் கட்டளை சட்டத்திற்கு கீழ் அமையும் விடயங்கள்
- நீங்கள் தனிமைப்படுதல் செயற்பாட்டிற்கு உட்படுத்தப்பட முடியும்.
- உங்கள் பயணங்கள் மட்டுப்படுத்தப்பட முடியும்.
- மற்றவரிகளிடமிருந்து விலக்கிட அல்லது சிகிச்சைக்காக பலவந்தமாக அனுப்பப்பட முடியும்.
- அதற்கு உடன்படாவிடின் பிடியாணையின்றி கைது செய்யப்படவும் வழக்கு தொடரப்படவும் முடியும்.
- குற்றம் நிரூபிக்கப்பட்டால் 06 மாதம் வரை சிறை தண்டனையும் அல்லது ரூபா. 2000 தொடக்கம் ரூபா. 10000 வரையான அபராதமும் விதிக்கப்பட முடியும்.
- இலங்கை தண்டனைச் சட்டக் கோவையின் கீழான குற்றமாகும்.
- கவனயீனமாக அல்லது வேண்டுமென்று நோய் பரவுவதற்கு இடமளித்தல் அல்லது தனிமைப்படுத்தல் செயற்பாட்டை பின்பற்ற தவறல் என்ற அடிப்படையில் குற்றமாகும்.
- இது பிடியாணையின்றி கைது செய்து சிறையில் அடைக்கக்கூடிய குற்றமாகும்.
- இதற்கு 06 மாதம் தொடக்கம் 02 வருடம் வரை சிறை தண்டனையுடன் ரூபா. 1500 அபராதத்திற்கு உட்படுத்த முடியுமான குற்றமாகும்.
- தவறொன்றிற்கு ஒத்தாசை வழங்குதல் குற்றமாகும்.
- மேற்படி குற்றத்திற்கு ஒத்துழைப்பு வழங்கும் நபர்கள் அல்லது உதவி புரியும் நபர்களை பிடியாணையின்றி கைது செய்து சிறையில் அடைத்து அவர்களுக்கு எதிராக வழக்கு தொடரப்பட முடியும்.
- மேற்படி குற்றத்திற்காக தண்டனைக்குட்படுத்தப்பட முடியும்.
- மேற்குறிப்பிட்ட குற்றங்களுக்கு பயன்படுத்திய அசையும், அசையா சொத்துக்கள் தடை செய்யப்படும்.
https://acju.lk/news-ta/acju-news-ta/item/1879-2020-03-29-07-16-20