பள்ளிவாசல்களில்‌ 100 பேர்‌ ௭ன்ற வரையறை மீறப்படுகிறது – CID அறிக்கை

பள்ளிவாசல்களில்‌ 100 பேர்‌ ௭ன்ற வரையறை மீறப்படுகிறது – புலனாய்வுப்‌ பிரிவினர்‌ அறிக்கை

பள்ளிவாசல்களில்‌ கூட்டுத்‌ தொழுகைகளில்‌ ஆகக்கூடியது 100 பேர்‌ மாத்திரமே தொழ முடியும்‌ என சுகாதார அமைச்சின்‌ வழிகாட்டல்கள்‌ அடங்கிய சுற்று நிருபம்‌ தெரிவித்தாலும்‌ சில பள்‌ளிவாசல்களில்‌ 300, 500 எனும்‌ எண்ணிக்கையிலானோர்‌ தொழுகிறார்கள்‌.

மாடிகளைக் கொண்ட பள்ளி வாசல்களில் 750 முதல் 1000 பேர் அளவில் தொழுவதாக உளவுப்பிரிவினர் அறிக்கை சமர்ப்பித்துள்ளதாக கண்டி சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சி.கே. ரத்நாயக்க வக்பு சபை உறுப்பினர் மௌலவி பஸ்ருல் ரஹ்மானிடம் முறையிட்டுள்ளார்.

கண்டி மாவட்டத்திலுள்ள பள்ளிவாசல்களில் கொவிட் 19 வழிகாட்டல்கள் பொலிசாரால் கண்காணிக்கப்படவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இதுபற்றிய கடிதமொன்றினையும் வக்பு உறுப்பினரிடம் கையளித்துள்ளார். கடிதத்தின் பிரதிகள் உளவுப்பிரிவு, பிரதி பொலிஸ்மா அதிபர், கண்டி மாவட்ட சிரேஷ்ட பிரதி பொ லிஸ்மா அதிபர் ஆகியோருக்கும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.

சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் (SSP) கடந்த 30 ஆம் திகதி பஸ்ருல் ரஹ்மானை தனது காரியாலயத்துக்கு அழைத்து இது தொடர்பில் பேச்சுவார்த்தை நடத் தினார்.

கொவிட் 19வழிகாட்டல்களை பள்ளிவாசல்களில் மீறுவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் தெரிவித்ததுடன் பள்ளிவாசல் நிர்வாகிகளையும், முஸ்லிம் சமூகத்தையும் இது தொடர்பில் தெளிவுபடுத்தும்படியும் வேண்டிக்கொண்டார்.

இதேவேளை வக்புசபை கடந்த செவ்வாய்க்கிழமை 3 ஆம் திகதி விசேட சுற்றுநிருபமொன்றினை வெளியிட்டுள்ளது. இச்சுற்று நிருபத்தில் பள்ளிவாசல்களில் கூட்டுத்தொழுகைகளின் ஈடுபடுப்வர்களின் எண்ணிக்கை ஆகக்கூடியது 100 ஆக இருக்கவேண்டும்

வுழுச் செய்யும் ஹவ்ழ் மூடப்படவேண்டும், பயான்கள் சுருக்கிக் கொள்ளப்படவேண்டும் என்பன உட்பட 11 நிபந்தனைகள் உள்ளடங்கியுள்ளதாகவும் வக்பு சபை உறுப்பினர் மௌலவி பஸ்ருல் ரஹ்மான் தெரிவித்தார்.

Check Also

ஹங்வெல்லை துப்பாக்கிச் சூடு நடந்தது என்ன?

வாஹித் லெப்பை மொஹம்மது பர்சான் 46 வயதான மூன்று பிள்ளைகளின் தந்தை. ஹங்வெல்லை நகரின் ஹோட்டல் ஒன்றினை நடாத்திச் செல்பவர். …

Free Visitor Counters Flag Counter