நிபந்தனைகளின் அடிப்படையில் உம்ராவுக்கு அனுமதி

சவூதி அரே­பிய ஹஜ், உம்ரா அமைச்சு உலகின் பல நாடு­களைச் சேர்ந்த மக்­க­ளுக்கு பல்­வேறு நிபந்­த­னை­களின் கீழ் இவ்­வ­ருடம் உம்ரா யாத்­தி­ரைக்­கான அனு­ம­தியை வழங்­கி­யுள்­ளது.

இந்­நி­லையில் உம்ரா யாத்­தி­ரைக்­கான அனு­மதி இது­வரை இலங்­கைக்கு வழங்­கப்­ப­ட­வில்லை எனவும் அதனால் மக்கள் உம்ரா யாத்­தி­ரைக்­கென முக­வர்­க­ளுக்கு பணம் செலுத்த வேண்­டா­மெ­னவும் அரச ஹஜ் குழு கோரிக்கை விடுத்­துள்­ளது.

அவ்­வாறு முக­வர்­க­ளுக்கு பணம் செலுத்தி ஏமாற்­றப்­பட்டால் அரச ஹஜ் குழு­வி­னரால் அவ்­வா­றான முக­வர்­க­ளுக்கு எதி­ராக நட­வ­டிக்கை எடுக்க முடி­யாது போகலாம் எனவும் எச்­ச­ரிக்கை விடுத்­துள்­ளது.

இது தொடர்பில் அரச ஹஜ் குழுவின் தலைவர் அஹ்கம் உவைஸ் ‘விடி­வெள்­ளி’க்கு கருத்து தெரி­விக்­கையில், ‘உம்ரா யாத்­தி­ரையை ஏற்­பாடு செய்­வ­தற்கு முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்­தினால் இது­வரை அனு­மதிப் பத்­தி­ரங்கள் வழங்­கப்­ப­ட­வில்லை. அதனால் உம்ரா பய­ணத்தை ஏற்­பாடு செய்­வ­தாகக் கூறி முக­வர்­களால் மக்­க­ளி­ட­மி­ருந்து பணம் அற­வி­டவும் முடி­யாது.

சவூதி அரே­பிய ஹஜ் மற்றும் உம்ரா அமைச்சு இலங்­கை­யர்­க­ளுக்கு உம்ரா யாத்­தி­ரைக்­கான அனு­ம­தியை வழங்­கினால் அரச ஹஜ் குழு பொது­மக்­களை தெளி­வு­ப­டுத்தும். அது தொடர்பில் அறி­விக்கும். அது­வரை முக­வர்கள் மக்­க­ளி­ட­மி­ருந்து உம்ரா யாத்­தி­ரைக்­கென பணம் அற­வி­டாமல் இருக்க வேண்டும். அவ்­வாறு ஹஜ் குழுவின் அனு­ம­தி­யின்றி அற­வி­டு­வது சட்­ட­வி­ரோ­த­மாகும். உம்ரா யாத்­திரை மேற்­கொள்ள திட்­ட­மிட்­டுள்­ள­வர்கள் அரச ஹஜ்­கு­ழுவின் உத்­தி­யோ­க­பூர்வ அறி­விப்பு வெளி­யி­டப்­ப­டும்­வரை பொறு­மை­யாக இருக்க வேண்டும்’ எனக் கூறினார்.

இதே­வேளை உம்ரா விசா ஹிஜ்ரி வருடம் 1443 துல்­ஹிஜ்ஜா பிறை 15லிருந்து 1443 ஷவ்வால் பிறை 15 வரை விநி­யோ­கிக்­கப்­படும் என சவூதி அரே­பிய ஹஜ், உம்ரா அமைச்சு தெரி­வித்­துள்­ளது. உம்ரா பய­ணிகள் 1443 முஹர்ரம் பிறை 1 முதல் 1443 ஷவ்வால் பிறை 30 வரை சவூதி அரே­பி­யா­வுக்கு அனு­ம­திக்­கப்­ப­டுவர் எனவும் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

அத்­தோடு சவூதி அரே­பிய ஹஜ் உம்ரா அமைச்சு மொரோக்கோ, டியு­னி­சியா, அல்­ஜீ­ரியா, லிபியா, சூடான், ஜோர்தான், மயு­ரி­டா­னியா, பலஸ்தீன், ஈராக், யெமன், ஓமான், பஹ்ரைன், கட்டார், பெல்­ஜியம், கனடா, நெதர்­லாந்து, ஸ்பெயின், அவுஸ்­தி­ரியா, மலே­சியா, தாய்­லாந்து, பர்­னாவி, பங்­க­ளாதேஷ் ஆகிய நாடு­களைச் சேர்ந்த பய­ணி­க­ளுக்கு உம்­ரா­வுக்­கான அனு­ம­தி­யினை வழங்­கி­யுள்­ளது.

சவூதி அரே­பிய சுகா­தார அமைச்சு ஏனைய நாடு­களின் கொவிட் 19 வைரஸ் தொற்று நிலை­மையை மதிப்­பீடு செய்து அத­ன­டிப்­ப­டையில் யாத்­தி­ரைக்­கான அனு­ம­தி­யினை வழங்­கு­வ­தா­கவும் தெரி­வித்­துள்­ளது.

மற்றும் உம்ரா யாத்­தி­ரி­கர்கள் பய்சர் (Pfizer), மொடர்னா,  அஸ்ட்­ரா­செ­னெகா அல்­லது ஜோன்ஸன் அன்ட் ஜோன்ஸன் தடுப்­பூ­சிகள் ஏதே­னு­மொன்றில் இரண்டு டோஸ்­க­ளையும் ஏற்­றிக்­கொண்­ட­வர்­க­ளாக இருக்க வேண்டும் எனவும் நிபந்­தனை விதிக்­கப்­பட்­டுள்­ளது. அத்­தோடு சைனாபாம் தடுப்­பூசி இரண்டு டோஸ்­களை ஏற்­றி­யுள்­ள­வர்கள் தடுப்பு சக்­தியை அதி­க­ரித்துக் கொள்­வ­தற்­காக மேற்­கு­றிப்­பிட்ட தடுப்­பூ­சி­களில் ஒன்­றினை ஏற்­றி­யி­ருக்க வேண்­டு­மெ­னவும் நிபந்­தனை விதித்­துள்­ளது.

உம்ரா பய­ணி­க­ளுக்­கான சவூதி அரே­பி­யாவின் நிபந்­த­னைகள்

* உம்ரா விசா ஹிஜ்ரி வருடம் 1443 துல்­ஹிஜ்ஜா பிறை 15 லிருந்து 1443 ஷவ்வால் பிறை 15 வரை விநி­யோ­கிக்­கப்­படும்.

* உம்ரா யாத்­தி­ரி­கர்கள் 1443 முஹர்ரம் பிறை 1 முதல் 1443 ஷவ்வால் பிறை 30 வரை சவூதி அரே­பி­யா­வுக்கு அனு­ம­திக்­கப்­ப­டுவர்.

* ஆகக்­கூ­டி­யது 25 யாத்­தி­ரி­கர்­க­ளுக்கே ஒரு பஸ்ஸில் பய­ணிக்க முடியும்.

* ஹோட்டல் அறை­யொன்றில் ஆக­க்­கூ­டி­யது இரு­வ­ருக்கே தங்க முடியும்.

* உம்­ரா­வுக்கு அனு­ம­திக்­கப்­படும் நாடுகள் மற்றும் யாத்­தி­ரி­கர்­களின் எண்­ணிக்கை தீர்­மா­னிக்­கப்­பட்டு அறி­விக்­கப்­படும்.

* யாத்­தி­ரி­கர்­களின் ஆகக் குறைந்த வய­தெல்லை 18 ஆகும்.

* யாத்­தி­ரி­கர்கள் முழுமையாக கொவிட் 19 தடுப்பூசி பெற்றுக்கொண்டிருப்பது கட்டாயமாகும்.

* சவூதி அரேபியாவினால் அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசியைப் பெற்றுக்கொண்டதற்கு அத்தாட்சியாக அதற்கான அட்டையை வைத்திருக்க வேண்டும்.

* யாத்திரிகர்கள் e–விசா பெற்றுக்கொள்வதற்கு முன்பு தங்கள் நாடுகளில் அங்கீகரிக்கப்பட்ட வைத்திய நிலையமொன்றிலிருந்து  வைத்திய மதிப்பீட்டு அறிக்கையைப் பெற்றிருக்க வேண்டும்.

Check Also

ஹங்வெல்லை துப்பாக்கிச் சூடு நடந்தது என்ன?

வாஹித் லெப்பை மொஹம்மது பர்சான் 46 வயதான மூன்று பிள்ளைகளின் தந்தை. ஹங்வெல்லை நகரின் ஹோட்டல் ஒன்றினை நடாத்திச் செல்பவர். …

Free Visitor Counters Flag Counter