வக்பு சபையின் தீர்மானம் மக்களுக்கு சிரமத்தை எற்படுத்தும் – ஹலீம் எம்.பி.

வக்பு சபையின் தீர்மானம் மக்களுக்கு சிரமத்தை எற்படுத்தும் – தடையை வாபஸ் பெறுமாறு வலியுறுத்துகிறார் ஹலீம்

உழ்ஹிய்யா தொடர்பில் வக்பு சபையின் தீர்மானமானது குர்பான் கொடுக்கும் முயற்சிகளில் ஈடுபடும் முஸ்லிம்களுக்கு பெரும் சிரமத்தை ஏற்படுத்தும் என கண்டி மாவட்ட ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் முஸ்லிம் சமய விவகார அமைச்சருமான எம்.எச்.அப்துல் ஹலீம் தெரிவித்தார்.

எனவே, வக்பு சபை தமது தீர்மானம் குறித்து மறுபரிசீலனை செய்து தடையை வாபஸ் பெற வேண்டும் எனவும் ஹலீம் வலியுறுத்தினார்.

வக்பு சபை பள்ளி வளாகத்தில் மாடறுத்தல், குர்பான் நடவடிக்கைகள் மேற்கொள்வதை தடை செய்திருக்கிறது. எந்த அடிப்படையில் இவ்வாறான இருக்கமான தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது என தெளிவுபடுத்தப்படவில்லை. எனினும் இத்தீர்மானம் மக்களை பெரும் சிரமத்திள்கு தள்ளிவிடும். பெரும்பாலான இடவசதிகள் அற்ற பகுதிகளில் பள்ளிவாசல்களை மையப்படுத்தி குர்பானுக்கான அனைத்து நடவடிக்கைகளும் இடம்பெறுகின்றன. குறிப்பாக கூட்டுக் குர்பானி பள்ளிகளை மையப்படுத்தியே இடம்பெறுவது வழமை. எனவே, வக்பு சபையின் தடை தீர்மானம் மக்களை வீனாக அசௌகரியத்தை ஏற்படுத்துவதாகவே அமையும். எனவே இதுகுறித்து மீள் பரிசீலனை செய்து அவசரமாக தடையை வாபஸ் பெற வேண்டும் ஹலீம் எம்.பி. மேலும் தெரிவித்தார்.

Check Also

அக்குறணை வெள்ளப் பிரச்சினை பற்றிய எனது பார்வை

அண்மையில் (2023/12/07 மற்றும் 08 ஆம் திகதி) அக்குறணையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு பலரது பேசுபொருளாக மாறியிருப்பதை நேரடியாகவும் சமூக வலைதளங்கள் …

Free Visitor Counters Flag Counter