இராஜாங்க அமைச்சர் பியல் நிஸாந்த
முன்பள்ளி ஆசிரியர்கள் பெற்றுக் கொண்டுள்ள கடனுக்கான மாதாந்த தவணை கட்டணத்தை செலுத்துவதற்கு சலுகைக் காலத்தை பெற்றுக் கொடுப்பது தொடர்பாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுடன் கலந்துரையாடவுள்ளதாக மகளிர் மற்றும் சிறுவர் மேம்பாட்டு, முன்பள்ளி மற்றும் ஆரம்ப கல்வி, பாடசாலை அடிப்படை வசதிகள் மற்றும் கல்வி சேவைகள் இராஜாங்க அமைச்சர் பியல் நிஸாந்த தெரிவித்தார்.
மாகாண கல்விப் பணிப்பாளர்களுடன் கடந்த 9ஆம் திகதி அமைச்சில் நடைபெற்ற சந்திப்பின் போதே இவ்வாறு குறிப்பிட்டார்.
இச்சந்திப்பின்போது முன்பள்ளி தேசிய கொள்கை சட்ட வரைவு குறித்தும் எதிர்காலத்தில் முன் பள்ளி மாணவர்களுக்காக மற்றும் ஆசிரியர்களுக்காக முன்னெடுக்கவுள்ள திட்டங்கள் பற்றியும் கலந்துரையாடினார்.
இக்கலந்துரையாடலில் பெண்கள் மற்றும் சிறுவர் மேம்பாடு, முன்பள்ளி மற்றும் ஆரம்பக் கல்வி மற்றும் கல்வி சேவைகள் அமைச்சின் செயலாளர் குமாரி ஜயசேகரவும், ஆரம்ப சிறுவர் கால மேம்பாடு தொடர்பான தேசிய செயலாளர் காரியாலய பணிப்பாளர் நயனா த சில்வா, உதவிப் பணிப்பாளர் லக்மி சௌபாக்கியாவும் கலந்து கொண்டார்கள். -Thinakaran-