அக்குறணை ஜம்இய்யதுல் உலமா வழங்கும் கிராம உத்தியோகத்தர் விண்ணப்பம் தொடர்பான வழிகாட்டல்கள்.

அக்குரணை பிரதேசம் 36 கிராமசேவகர் பிரிவுகளை கொண்டது. குறிப்பாக, 24 முஸ்லிம் பிரதேசங்களை உள்ளடக்கியதாகும். என்றபோதிலும், பிரதேச செயலகங்களில் எமது சமூகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் வெறும் இரண்டு கிராம சேவை அதிகாரிகள் மாத்திரமே உள்ளார்கள். அவர்களும் தற்போது ஓய்வு பெறுவதற்கான நிலைமையிலேயே இருக்கிறார்கள். எனவே, எதிர்காலத்தில் எமது சந்ததியினரை வழிகாட்டும் பண்பாடு மிகுந்த தலைமுறையினரை உருவாக்குவதற்கு இன்றே பங்காற்றுவோம்.

விண்ணப்பிப்பதற்கான குறைந்தபட்ச தகுதி

● 21 க்கும் 35 வயதுக்கும் இடைப்பட்ட வயதை உடையவராக இருத்தல்.
● க.பொ.த (சா/த) (O/L) பரீட்சையில் கணிதம், மொழி ஆகிய பாடங்கள் உட்பட 4 பாடங்களில் திறமை சித்தியுடன் (C) ஆறு பாடங்களில் சித்தியடைந்திருத்தல்.
● க.பொ.த (உ/த) (A/L) பரீட்சையில் 3 சித்திகள்.

விண்ணப்ப முடிவுத் திகதி : 2021.06.28.

எனவே மேற்குறிப்பிட்ட தகுதிகளை உடைய இளைஞர்களை கீழுள்ள லிங்கினூடாக விண்ணப்பப்படிவத்தைப் பெற்றுக்கொள்ளலாம்.

விண்ணப்பப்படிவத்தைப்பெற்றுக்கொள்வதற்கான லிங்க் https://sltimes.lk/applications-are-invited-for-the-recruitment-of-grama-niladhari-post/

போதுமான ஊதியம் வழங்கப்படுவதோடு, அரசு பணி என்பதனால் ஓய்வூதியமும் வழங்கப்படும். எனவே, மஸ்ஜித்கள் தங்களது மஹல்லாவுக்கு உட்பட்ட வாலிபர்களை சமூகத்திற்கு பயன்மிக்க பண்பாடு மிகுந்த தலைமுறையினரை உருவாக்குவதற்கு முயற்சிப்போம்.

வாலிபர்களை சமூகத்திற்கு பயன்மிக்க ஆளுமைகளாக உருவாக்கும் நோக்குடன் கிராம சேவை அதிகாரிகளாக பதவியை பெற்றுக் கொள்வதற்கு இலவச பயிற்சிக்கருத்தரங்கு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருக்கின்றது. இப்பயிற்சிக்கருத்தரங்கு மூலமாக எவ்வாறு இந்தப்பரீட்சையை முகங்கொள்வது என்பது குறித்து தெளிவான விளக்கத்தைப் பெற்றுக்கொள்ள முடியும். கீழுள்ள இலக்கங்களுக்கு தொடர்புகளை மேற்கொண்டு மேலதிக தகவல்களை பெற்றுக் கொள்ளுமாறு ஜமாஅத்தார்களை அன்புடன் வேண்டிக்கொள்கிறோம்.

Shimree Kamil : 0775213055
Azeemul Haq : 0775112696

அக்குறணை ஜம்இய்யதுல் உலமா.

Check Also

அக்குறணை வெள்ளப் பிரச்சினை பற்றிய எனது பார்வை

அண்மையில் (2023/12/07 மற்றும் 08 ஆம் திகதி) அக்குறணையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு பலரது பேசுபொருளாக மாறியிருப்பதை நேரடியாகவும் சமூக வலைதளங்கள் …

Free Visitor Counters Flag Counter