Akurana Jamiyyathul Ulama & Akurana Mosque Federation
ඉස්ලාම් ආගමික වියතූන්ගෙ සංගමය අතුරණ මුස්ලිම් දෙවස්ථාන සම්මේලනය
இஸ்லாமிய மார்க்க அறிஞர்கள் சபை & அக்குறனை பள்ளிவாயல் சம்மேளனம்
Asna Central Mosque, 6th Mile Post, Akurana, Kandy, Srilanka
ஜனாப் நஜா யஹ்யா ஆசிரியர் சம்பந்தமாக சமூக தளங்களில் பிழையாக பரப்பப்பட்டுள்ள வதந்திகள் சம்பந்தமான எமது நிலைப்பாடு.
ஜனாப் நஜா ஆசிரியர் அவர்கள் 2003ம் ஆண்டிலிருந்து அக்குறணையின் சிவில் தலைமனத்துவத்தை பிரதிநிதித்துவப்படுத்தப்படும் அக்குறணை ஜம்இய்யதுல் உலமா மற்றும் அக்குறணை பள்ளிவாயல்கள் சம்மேளனம் என்பவற்றுடன் இணைந்து பல செயற்திட்டங்களில் பங்காற்றி வருகின்றார்.
2004ம் ஆண்டு சுனாமியில் பாதிக்கப்பட்டவர்களுக்காக அக்குறணையால் முன்னெடுக்கப்பட்ட செயற்திட்டங்களில் பங்காற்றியதுடன் 2006ம் ஆண்டு மூதூரிலிருந்து பலவந்தமாக வெளியேற்றப்பட்டவர்களுக்காக கந்தளாயில் அக்குறணை ஜம்இய்யதுல் உலமாவினால் நிறுவப்பட்ட வாழ்வாதார சேவை முகாமிற்கு பொறுப்பாளர்களில் ஒருவராக இருந்து செயற்பட்டார்.
குறிப்பாக 2018ம் ஆண்டு முஸ்லிம்களுக்கு எதிராக அடர்ந்தேரிய கலவரத்தின்போது சமாதானக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் என்ற வகையில் பல உப குழுக்களை அமைத்து பாதிக்கபட்டவர்களுக்கு நிவாரணம் மற்றும் நஷ்டயீடு பெற்றுத்தரும் செயற்பாடுகளிலும், சமூகங்களை ஒன்றினைக்கின்ற சகவாழ்வு செயற்பாடுகளிலும் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றார். இதே ஆண்டில் அக்குறணையில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்காக நிவாரணம் பெற்றுத்தரும் நடவடிக்கைகளில் எம் சார்பாக ஈடுபட்டதுடன், வெள்ள தடுப்பிற்காக உருவாக்கப்பட்ட பாராளமன்ற விஷேட செயலணியில் அஸ்னா மத்திய பள்ளிவாயலின் பிரதிநிதியாக நியமிக்கப்பட்டார்.
அஸ்னா மத்திய பள்ளிவாயல் நிர்வாகத்திற்கு மூன்றவாது முறையாக தெரிவு செய்யப்பட்டு செயலாளர்களில் ஒருவராக செயற்படுகின்றார். தற்போது அக்குறணை பள்ளிவாயல்கள் சம்மேளனம், அக்குறணை உயர் முகாமைத்துவக் குழு (Akurana Top Management) ,பைதுல்மால், அக்குறணை பிரதேச சர்வ மதக்குழு மற்றும் சுகாதாரக் குழு என்பவற்றின் செயலாளராக செயற்பட்டு வருவதுடன், கொவிட் தொற்றின் பரவலைத்தடுப்பதற்காக பிரதேச சபை மற்றும் பிரதேச காரியாலயத்தின் இணைத்தலைமையில் உருவாக்கப்பட்ட அக்குறனை கொவிட்-19 செயலணியை பிரதிநிதித்துவப்படுத்துகின்றார்.
கோவிட்-19 நோய் பரவலின் பாதிப்புக்களுக்கு பதிலளிப்பதற்காக எமது நிறுவனங்களின் கீழ் அமையப்பெற்றுள்ள கல்வி வழிகாட்டல், நிவாரணம், பொருளாதார வழிகாட்டல், ஜனாஸா கமிட்டி மற்றும் கிராம கண்கானிப்புக் குழு என்பவற்றின் உருவாக்கத்திலும் செயற்திட்ட அறிமுகத்திலும் ஆரம்பத்திலிருந்தே செயற்பட்டார்.
மாவட்ட சுகாதாரப் பணிப்பாளர் மற்றம் பிரதேச வைத்திய அதிகாரி என்பவர்களின் வழிகாட்டலில் அக்குறணை ஜம்இய்யதுல் உலமா மற்றும் பள்ளிவாயல்களின் சம்மேளனத்தின் கீழ் நிறுவப்பட்ட கிராம கண்கானிப்புக் குழு (CVVT) இனை உருவாக்க மாவட்ட வைத்திய அதிகாரிகளுடன் இணைந்து ஆரம்பத்திலிருந்தே செயற்பட்டதுடன் CVVT குழுக்கான செயற்திட்டத்தினை அறிமுகம் செய்து இன்றுவரை CVVT இன் செயற்திட்டங்களை வழி நடத்தி முன்னெடுப்பவராக செயற்பட்டு வருகின்றார்.
இந்த நீண்ட காலப்பகுதியில் நஜா யஹ்யா நிதி நிர்வாகம் சம்பந்தமான எந்த ஒரு பொறுப்பிலும் நியமிக்கப்படவில்லை என்பதனையும் மேற்சொன்ன எந்த ஒரு பொறுப்பிற்கும் அவர் பலவந்தமாகவின்றி ஜனநாயக முறையில் கலந்துறையாடல் (மஷுரா) அடிப்படையிலேயே நியமிக்கப்பட்டார் என்பதனையும் உறுதிப்படுத்துகின்றோம்.
நிதி மோசடி, பலவந்தமாக பதவிகளைப் பெற்றமை, CCVTயின் செயற்திட்ட மேளாலர் அல்ல மற்றும் CVVTயிற்கும் ஜனாப். நஜா யஹ்யா ஆசிரியர் அவர்கட்கும் எந்த தொடர்பும் இல்லை என்பன அனைத்தும் பொய் மற்றும் இட்டுக்கட்டப்பட்ட வதந்திகள் என்பதனை இத்தால் அறியத்தருகின்றோம்.
தலைவர் அக்குறணை ஜம்இய்யதுல் உலமா
As-Sheik M.A.M. Siyam
தலைவர் அக்குறணை பள்ளிவாயல்கள் சம்மேளனம்
AZMY FAROOK (LL.B) Attorney-at-Law
பொருளாளர் – அஸ்னா மத்திய பள்ளி
A.F.M Azmy