தேவையுடையோருக்கு உதவி செய்து அல்லாஹ்வின் ரஹ்மத்தை பெற்றுக் கொள்வோம். தற்போது உலக நாடுகளை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸினால் பலர் பாதிக்கப்பட்டுள்ளதை யாவரும் அறிவோம். பாதிக்கப்பட்ட அனைவரும் அவசரமாக இந்நோயிலிருந்து குணமடைய வேண்டுமென அகில இலங்கை ஐம்இய்யத்துல் உலமா பிரார்த்திக்கின்றது.
இவ்வைரஸின் பாதிப்பால் நாட்டில் பலரின் இயல்பு வாழ்வு பாதிக்கப்பட்டிருக்கின்றது. நாளாந்தம் உழைத்து தமது அன்றாட தேவைகளை பூர்த்தி செய்யக்கூடியவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டி ருக்கின்றார்கள். இவ்வாறானவர்கள் அடையாளம் காணப்பட்டு அவர்களுக்கு தம்மால் முடிந்த உதவிகளை செய்ய முன் வரவேண்டுமென அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா அனைவரையும் கேட்டுக் கொள்கிறது.
அயலவன் பசித்திருக்க தான் மாத்திரம் வயிறு நிரம்ப புசிப்பவன் உண்மை விசுவாசியல்ல என நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். எனவே உணவளிப்பது என்பது இஸ்லாத்தில் பெரும் நன்மையை ஈட்டித் தரும் செயலாகும். அதேபோன்று ஸதகாக்கள் சோதனைகளை விட்டும் எம்மை பாதுகாக்கும் என்பதும் நபி மொழியாகும். இவ்வாறான சந்தர்ப்பங்களில் அதிகமாக ஸதகாக்களில் ஈடுபடுவது சிறந்ததாகும்.
குறிப்பாக நாட்டில் பல பாகங்களிலும் ஊரடங்கு சட்டம் நடைமூறைப்படுத்தப்பட்டு வருவதோடு நாளாந்தம் உழைத்து தமது அன்றாட தேவைகளை பூர்த்தி செய்யக்கூடிய பலரின் தொழில்களும் நிறுத்தப்பட்டிருப்பதை அவதானிக்க முடிகின்றது. இவ்வாறானவர்கள் முறையாக இனங்காணப்பட்டு அவர்களுக்கும் உணவுகளுக்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டும்.
எனவே,
01 ஒவ்வொருவரும் தனது அயலவர்களின் நிலைகளை அறிந்து உதவலாம்.
02 அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் கிளைகள், மஸ்ஜித் சம்மேளனங்கள், மஸ்ஜித்கள் தத்தம் பிரதேசங்களில் மக்களை இனங்கண்டு உதவிகளை செய்யலாம்.
03 அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவினூடாக உதவிகளை செய்ய விரும்புவோர் கீழ் வரும் தொலைபேசி இலக்கத்தினூடாக தொடர்பு கொண்டு உதவிகளை வழங்கலாம்.
இவற்றுக்கான ஏற்பாடுகளை செய்கின்றவர்கள் அரசாங்கத்தின் சட்டங்களை மதித்து இவற்றுக்கான ஏற்பாடுகளை முன்னெடுக்குமாறும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா வேண்டிக் கொள்கிறது.
0777571876 | 0117490490 | 0771778831
COMMERCIAL BANK AMANA BANK
ALL CEYLON JAMIYYATHUL ULAMA ALL CEYLON JAMIYYATHUL ULAMA
A/C NO 1901005000 A/C NO 0010112110014
COMMERCIAL BANK AMANA BANK
BRANCH : ISLAMIC BANKING UNIT BRANCH : MAIN BRANCH
SWIFT CODE : CCEYLKLX SWIFT CODE : AMNALKLX
குறிப்பு: ஜம்இய்யாவினால் குறித்த ஒரு சமூக சேவைக்காக சேரக்கப்படும் பணம் குறித்த தேவை பூர்த்தி செய்யப்பட்டதன் பின் மீதமானால் அத்தொகை அது போன்றதொரு சமூக சேவைக்கு பயன்படுத்தப்படும்.