பள்ளிவாயல்களுக்கான அவசர கொவிட் – 19 கட்டுப்பாடுகள்

சகல பள்ளிவாயல் நம்பிக்கையாளர்களுக்கும்/பொறுப்பாளர்களுக்கும்,

பள்ளிவாயல்களுக்கான அவசர கொவிட் – 19 கட்டுப்பாடுகள்

கொவிட் 19 அசாதாரண பரவலைக் கருத்திற் கொண்டு, சுகாதார அதிகாரிகளின் ஆலோசனைக் கேற்ப, இலங்கை வக்பு சபை பின்வருமாறு தீர்மாணித்துள்ளது;

சகல பள்ளிவாயல்களிலும் தராவீஹ், ஜூம்ஆத் தொழுகை மற்றும் பயான்கள், கியாமுல்லைல், இஃதிகாப் தவ்பா போன்ற அனைத்து கூட்டுச் செயற்பாடுகளையும் மறு அறிவித்தல் வரை தற்காலிகமாக இடைநிறுத்தல்.

எந்தவொரு பள்ளியிலும் ஒரு நேரத்தில் அதி கூடியது 25 பேர் என்ற உச்ச வரம்புக்குட்பட்டு ஐவேளை ஜமாஅத் தொழுகைக்கு அனுமதி வழங்கல்.

முகமறைப்பு (Mask) அணிதல், ஒரு மீட்டர் இடைவெளியைப் பேணல், தொழுகை விரிப்பை கொண்டு வருதல், வீட்டிலிருந்து வுழு செய்து கொண்டு வருதல் ஆகியன கட்டாயமாகும். வுழூ செய்யும் பகுதியை மூடிவைத்தல்

தனிமைப்படுத்தப்பட்ட அல்லது வரையறுக்கப்பட்ட சகல பகுதிகளிலும் அனைத்து பள்ளிவாயல்களும் மறு அறிவித்தல் வரை மூடப்பட்டிருத்தல் வேண்டும்.

சுகாதார மற்றும் பாதுகாப்பு அதிகாரிகளால் வெளியிடப்பட்டுள்ள ஏனைய அனைத்து வழிகாட்டல்களும் வக்பு சபையின் முன்னைய பணிப்புரைகளும் மிகக் கண்டிப்பாகப் பின்பற்றப்படல் வேண்டும்.

மேலுள்ள வழிகாட்டல்களை பின்பற்றுவது நடைமுறைச் சாத்தியமற்றது அல்லது சிரமம் எனில் பள்ளிவாயல்களை மூடுவதற்கு நம்பிக்கையாளர்களுக்கு/ பொறுப்பாளார்களுக்கு அனுமதி வழங்கப்படுகின்றது.

இலங்கை வக்பு சபையின் பணிப்புரைக்கேற்ப,

ஏ.பி.எம்.அஷ்ரப் .

பணிப்பாளர், முஸ்லிம் பள்ளிகள் மற்றும் அறக்கட்டளைகள் மற்றும் முஸ்லிம் சமய பண்பாட்டல்கள் திணைக்களம்

Check Also

ஹங்வெல்லை துப்பாக்கிச் சூடு நடந்தது என்ன?

வாஹித் லெப்பை மொஹம்மது பர்சான் 46 வயதான மூன்று பிள்ளைகளின் தந்தை. ஹங்வெல்லை நகரின் ஹோட்டல் ஒன்றினை நடாத்திச் செல்பவர். …

Free Visitor Counters Flag Counter