பொதுமக்களைப் பாதுகாப்புக்காவும் அமைதியை நிலைநாட்டவும் 25 மாவட்டங்களிலும் முப்படையினர் கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளனர். இது தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷவினால் நேற்று (21) புதன்கிழமை அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
ஏப்ரல் 22 ஆம் திகதி முதல் (இன்று முதல்) இந்த நடைமுறை அமுல்படுத்தப்படும் என்று குறித்த வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கொழும்பு, கம்பஹா, களுத்துறை, காலி , மாத்தறை, அம்பாந்தோட்டை, யாழ்ப்பாணம், மன்னார், முல்லைத்தீவு, மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை, புத்தளம், கண்டி, மாத்தளை, நுவரெலியா, கிளிநொச்சி, வவுனியா, குருணாகல், அநுராதபுரம், பொலன்னறுவை, பதுளை, மொனராகலை, இரத்தினபுரி மற்றும் கேகாலை ஆகிய அனைத்து மாவட்டங்களிலும் இவ்வாறு முப்படையினர் கடமையில் ஈடுபடுத்தப்படுவர் என்று வர்த்தமானி அறிவித்தலில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.