அண்மைக் காலங்களில் சிங்கள மக்கள் மத்தியில் இனவாதமே பிரதான பேசு பொருளாகவுள்ளது. குறிப்பாக பெரும்பான்மை சிங்கள சமூகத்தின் அரசியல் தலைவர்களும் சரி மத தலைவர்களும் சரி தமது சமூகத்தின் உள்ளே கவனிக்கப்பட வேண்டிய பல்வேறு பிரச்சினைகளை புறந்தள்ளிவிட்டு இந்த நாட்டில் வாழுகின்ற ஏனைய தமிழ், முஸ்லிம் சமூகங்களின் உள் விவகாரங்களிலேயே அதிகம் கவனம் செலுத்துவதை காண்கிறோம்.
இது இந்த நாட்டில் தேவையற்ற பிரச்சினைகளுக்கும் வழிவகுத்துள்ளது. உண்மையில் உலகெங்கிலும் உள்ள சமூகங்கள் இன்று அதிகம் முகங்கொடுககின்ற சவாலே ஒழுக்க வீழ்ச்சியாகும். இதே பிரச்சினை இலங்கையிலும் தலை விரித்து ஆடுகின்றது. இதற்கு சிங்கள சமூகமும் விதிவிலக்கல்ல.
இந் நிலையில் 2021 பெப்ரவரி மாத ‘சன்னஸ’ ஆங்கில சஞ்சிகையில் அஸேல ரணசிங்க என்பவர் சமகால சிங்கள சமூகத்தில் காணப்படும் ஒழுக்க வீழ்ச்சி பற்றிய விரிவான விபரங்களை தொகுத்து வழங்கியுள்ளார்.
அடுத்த சமூகங்களின் விவகாரங்களில் கவனம் செலுத்துவதை விடுத்து தமது சமூகத்தின் அழிவுக்கு வித்திடும் இந்த ஒழுக்க வீழ்ச்சி குறித்து சிங்கள மக்களும் அரசியல்வாதிகளும் பௌத்த பிக்குகளும் கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். சிங்கள சமூகத்தில் சனத்தொகை வீழ்ச்சி ஏற்படுவதற்கான பல நியாயமான காரணங்களையும் அவர் பட்டியலிட்டுள்ளார். அதன் தமிழ் மொழிபெயர்ப்பு.
சமூக வலையமைப்புக்களில் கணிசமான அளவில் பாலியல் தொடர்பான விடயங்களில் ஈடுபட்டிருப்பது சிங்கள இளைஞர்கள் தான்.
சிங்கள மக்களில் பெரும்பான்மையினர் பொழுது போக்குகள் மற்றும் வேடிக்கைகளில் தமது காலத்தையும் பணத்தையும் வீண் விரயம் செய்யும் நோக்கில் மதுபாவனை, போதைப் பொருள் பாவனை மற்றும் புகைத்தல் போன்ற விடயங்களில் ஈடுபட்டிருப்பதுடன் சூதாட்டம் மற்றும் விபச்சாரம் போன்ற துர்நடத்தைகளிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
சிங்கள இளைஞர்களில் அநேகர் முகநூல் களியாட்டங்களிலும் இரவு விடுதி களியாட்டங்களிலும் கலந்து கொள்வதுடன் கணிசமான அளவில் செலவு ஏற்படக்கூடிய ஒன்று கூடல்களிலும் கலந்து கொள்கின்றனர்.
சிங்கள சமூகத்தில் திருமணங்களை ஒத்திப்போடும் நிலைமையும் காணப்படுகிறது. சராசரியாக அவர்கள் 38 வயதிற்குப் பின்னரே திருமணம் செய்து கொள்கின்றனர்.
நியாயமான காரணமின்றி பெரும் எண்ணிக்கையிலான சிங்கள இளைஞர்களும் யுவதிகளும் திருமணமின்றியே காலத்தைக் கடத்துகின்றனர். கவலைக்குரிய விடயம் என்னவெனில் மிக அதிகமான சிங்களப் பெண்களால் மண மகனுக்கு சீதனம் கொடுக்க முடியாமல் இருப்பதே அதற்கான காரணமாகும்.
சிங்கள இளம் சந்ததியினரில் அநேகர் சட்டரீதியாக திருமணம் செய்து கொள்ளாது இணைந்து வாழ்வதையே விரும்புகின்றனர். பெற்றோராக வாழ்வதற்கு விருப்பமின்மையே அதற்கான காரணமாகும்.
சிங்கள சமூகத்தில் கணிசமான அளவிலான பெற்றோர் குழந்தைகள் இன்றியே வாழ விரும்புகின்றனர். சில வேளை குழந்தைப் பேற்றைப் பெற்றாலும் ஒன்று அல்லது இரண்டுக்கு மேல் குழந்தைகளை பெற்றுக்கொள்ள அவர்கள் விரும்புவதில்லை. இந்த நிலை எதிர்காலத்தில் வயோதிபர்கள் மற்றும் இளைஞர்களுக்கிடையில் சனத்தொகையில் பாரிய ஏற்றத் தாழ்வை ஏற்படுத்தும்.
பிரதி வருடமும் கணிசமான சிங்கள இளைஞர்கள் பிக்குகளாக மாறுகின்றனர். அது அவர்கள் விரும்பியோ அல்லது சிலரது வற்புறுத்தல் காரணமாகவோ நடைபெறுகிறது. இதன் விளைவாகவும் சிங்கள மக்களது சனத்தொகையில் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டு வருகிறது.
திருமணம் முடித்த இளம் சிங்கள குடும்பத்தினர் முறையான காரணமின்றி குழந்தைகளைப் பெற்றுக் கொள்வதில் தாமதத்தை ஏற்படுத்திக் கொள்கின்றனர்.
இலங்கையில் ஒவ்வொரு மாவட்டத்திலும் சிங்களப் பெண்களில் கணிசமானோர் பிரதி வருடமும் கருச்சிதைவு செய்து கொள்வோராக உள்ளனர்.
திருமணமானவர்களில் கணிசமான அளவிளான சிங்களவர்கள் ஏனைய ஆண் அல்லது பெண்களுடன் தகாத பாலியல் தொடர்புகளை வைத்துக் கொள்வதனால் பிரதி வருடமும் பெரும் எண்ணிக்கையிலான விவாகரத்துக்கள் நிகழ்கின்றன.
. பொருளாதாரப் பிரச்சினை மற்றும் ஏனைய தனிப்பட்ட பிரச்சினைகள் காரணமாக பெருந்தொகையான சிங்களவர்கள் தற்கொலை செய்து கொள்ளும் எண்ணிக்கை அதிகரித்துச் செல்கிறது.
பிரதி வருடமும் சிங்கள யுவதிகள் சினிமா நடிகைகளாகவும் மொடல்களாகவும் விபச்சாரிகளாகவும் மாறுவதுடன், தவறான பாலியல் தொடர்புகளுக்காக அவர்கள் பயன்படுத்தப்படுகின்றனர். ( இவ்வாறானவர்கள் திருமண வாழ்க்கையை விரும்புவதில்லை. அதன் விளைவாக சிங்கள மக்களின் சனத்தொகை பாரிய அளவில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது)
நாட்டிலுள்ள சிங்களவர்களில் பலர் மஸாஜ் நிலையங்களையும் (Massage Parlors) மதுபானக் கடைகளையும், சூதாட்ட நிலையங்களையும் நடத்தி வருகின்றனர். அது மட்டுமன்றி அவர்களில் சிலர் பாடசாலை மாணவ, மாணவிகள் வந்து தற்காலிகமாக தங்கிச் செல்வதற்கான நிலையங்களை அமைத்து அதன் மூலம் தமது வருவாயைக் கூட்டிக் கொள்கின்றனர். அதன் விளைவாக, ஒழுக்க வீழ்ச்சி ஏற்படுவதுடன், கருச்சிதைவு மற்றும் சுகாதாரப் பிரச்சினைகள் மட்டுமன்றி சிங்கள சமூகம் ஒழுக்க சீர்கேடுகளைக் கொண்ட ஒரு சமூகமாகவே மாறிவருகின்றது.
சந்தர்ப்பவாத அரசியல் அல்லது பல்வேறு வகையான இலாபங்களை அடையும் நோக்கில் செயலடுவதால் சிங்கள சமூகத்தில் கணிசமான அளவினர் கட்சி, அரசியல், மதம், குலகோத்திரம் போன்றவை காரணமாகவும் பிரிந்து வாழ்கின்றனர்.
தனிநபர் ஒழுக்க வீழ்ச்சி காரணமாக பெண்கள், முதியோர் மற்றும் சிறுவர்கள் சிங்கள சமூகத்தில் கௌரவப்படுத்தப் படுவதில்லை.
சிங்கள பொது மக்களில் கணிசமான அளவினர் அரசியல்வாதிகளால் மடையர்களாக மாற்றப்பட்டுள்ளனர். அரசியல் ரீதியான இலாபங்களை அடைவதற்காகவே சிங்கள அரசியல் வாதிகள், சுதந்திரமாகவும் பகிரங்கமாகவும் இவ்வாறு செயல்படுகின்றனர்.
40 வயதுக்குட்பட்டவர்களில் கணிசமான எண்ணிக்கையிலான சிங்கள இளைஞர்கள் நியாயமான காரணமின்றி கடனாளிகளாக மாறியிருக்கின்றனர். (இப்பதிவின் பகுதி இரண்டின் தொடர்ச்சி >>>)