கொரோனா பற்றிய இன்றைய தகவல்கள் 17-03-2020

கைதிகளை பார்வையிட முடியாது

யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் தடுத்து வைத்துள்ள கைதிகளை நாளை முதல் இரண்டு வாரங்களுக்கு பார்வையிட முடியாது என சிறைச்சாலை நிர்வாகம் அறிவித்துள்ளது

பொருட்களின் விலைகள் குறைப்பு

இன்று நள்ளிரவு முதல் பருப்பு ஒரு கிலோ 65 ரூபாவுக்கும், தகரப் பேணியில் அடைக்கப்பட்ட மீனின் விலை 100 ரூபாவிற்கும் விற்பனை செய்யப்பட வேண்டும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

சாரதி அனுமதிப்பத்திர கால எல்லை நீடிப்பு

அந்தவகையி்ல் மார்ச் 16 – ஏப்ரல் 15 காலப் பகுதியில் காலாவதியாகும் சாரதி அனுமதிப்பத்திர செல்லுபடியாகும் காலம் ஜூன் 30 வரை நீடிக்க போக்குவரத்து அமைச்சு தீர்மானித்துள்ளது.

பொது தேர்தலை பிற்போட வேண்டும்.

கொரோனா அச்சுறுத்தல் காணப்படுவதன் காரணமாக பொது தேர்தலை பிற்போட வேண்டும் என முன்னாள் எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஷ தெரிவித்துள்ளார்.

கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 43 ஆக உயர்வு

கொரோனா வைரஸ் (கொவிட் 19) தொற்றுக்கு உள்ளான மேலும் 9 பேர் இன்று (17) இனங்காணப்பட்டுள்ளதாகவும் இதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 43 ஆக உயர்வு.

மேலும் 6 பேருக்கு கொரோனா

இதற்கைமய, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 34 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி இதனைத் தெரிவித்துள்ளார்

கொரோனா தொற்றாளர்களின் தற்போதைய நிலை.

நாட்டில் தற்பொழுது கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டு வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருபவர்களின் நிலை கவலைகிடமாக இல்லை என சுகாதார சேவைகள் பணிப்பாளர் அனில் ஜாசிங்க தெரிவித்தார்.

வெளிநாட்டில் இருந்து வந்தவர்களுக்காக 5 தொலைபேசி இலக்கங்கள்

0112 444 480, 0112 444 481, 0115 978 720, 0115 978 730, 0115 978 734 ஆகிய இலக்கங்களே இவ்வாறு அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

போலியான தகவல்களை பதிவிட்ட இருவர்

கொரோனா வைரஸ் (கொவிட் 19) தொடர்பில் போலியான தகவல்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்ட மேலும் இருவர் இனங்காணப்பட்டுள்ளனர்.

சிறைக் கைதிகளை பார்வையிட தடை

சிறைக் கைதிகளை பார்வையிடுவது மறு அறிவித்தல் வரும் வரை உடனடியாக இடைநிறுத்துமாறு சிறைச்சாலைத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு பயணிகள் வர தடை

ஏனைய நாடுகளில் இருந்து விமான பயணிகள் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு வருகை தருவது தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.

புகையிரத பயணிகளுக்கான ஓர் செய்தி

புகையிரத பயணசீட்டு வழங்குவதையும், பொதிகள் ஏற்ப்பதனையும் இன்று முதல் இடைநிறுத்த புகையிரத திணைக்களம் தீர்மானித்துள்ளது. குறித்த திட்டம் இன்று மதியம் 12 மணிமுதல் செயல்ப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா – 7,100-ஐ தாண்டிய பலி எண்ணிக்கை

உலகளவில் 7,174 பேர் உயிரிழந்துள்ளனர், 1,82,870 பேருக்கு நோய் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் 27 பேர் உயிரிழந்துள்ளனர், புதிதாக 418 பேருக்கு நோய் உறுதியானது.

பல பகுதிகளில் கொரோனா தொற்று ஏற்படுவதற்கான சாத்தியம்..!

புத்தளம், கொழும்பு உள்ளிட்ட மேல் மாகாணத்தின் பல பகுதிகளிலும் தென் மாகாணத்தின் சில இடங்களிலும் கொரோனா வைரஸ் தொற்று பரவக்கூடிய சாத்தியம் உள்ளதாக இலங்கை பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. தெரிவித்துள்ளது.

கட்டார் உட்பட 03 நாடுகளிலில் இருந்து இலங்கைக்கு வர தடை

இன்று நள்ளிரவு முதல கட்டார், பஹ்ரைன் மற்றும் கனடா ஆகிய நாடுகளில் இருந்து வருகை தரும் பயணிகளுக்கு இலங்கை நுழைவதற்கு அனுமதி வழங்கப்பட மாட்டாது என சிவில் விமான சேவைகள் தலைவர் உபுல் தர்மதாஸ தெரிவித்துள்ளார்.

முதல் இலங்கை நோயாளி குணமடைந்துளார்

நாட்டில் COVID-19 கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட முதல் இலங்கை நோயாளி இப்போது குணமடைந்துள்ளதாக சிலோன் டுடே செய்தித்தாள் செய்தி வெளியிட்டுள்ளன.

இலங்கையில் விமான நிலையம் முழுமையாக மூடப்படுகிறதா?

கொரோனா வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்தல் நடவடிக்கையின் கீழ் விமான நிலையத்தையும், துறைமுகங்களையும் மூடிவிடுமாறு அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சம்மேளனம் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தாஜ்மஹால் மூடப்பட்டது

உலக அதிசயங்களில் முக்கியமானதும், இந்தியாவின் மிக முக்கிய சுற்றுலாத்தலங்களில் ஒன்றான தாஜ்மஹால் இம்மாதம் இறுதி வரை மூடப்பட்டு, அங்கு பார்வையாளர்கள் வருவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஒப்புதல் இல்லாமல் முக கவசங்களை ஏற்றுமதி செய்ய தடை

தேசிய மருந்து ஒழுங்குமுறை ஆணையத்தின் முன் ஒப்புதல் இல்லாமல் முக கவசங்களை ஏற்றுமதி செய்யவோ அல்லது மீள் ஏற்றுமதி செய்யவோ கூடாது என சுகாதார அமைச்சு வர்த்தமானி அறிவித்தல் ஒன்றை வெளியிட்டுள்ளது.

நியூயோர்க் நகரில் புதிய சட்டம்.

அமெரிக்காவின் நியுயோர்க் நகரில் உள்ள அனைத்து உணவகங்கள், மதுபான நிலையங்கள் மற்றும் விடுதிகள் இன்று முதல் மூடப்படவுள்ளன.

இத்தாலியில் இதுவரை 2,158 பேர் உயிரிழப்பு

இத்தாலியில் இதுவரை பலியானவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 158 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா தொற்று காரணமாக இத்தாலியில் 27 ஆயிரத்து 980 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மலேசியா எடுத்த அதிரடி தீர்மானம்

கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் நோக்கில், மலேசியர்கள் வெளிநாடுகளுக்குச் செல்வதையும், வெளிநாட்டவர் மலேசியாவுக்குள் நுழைவதையும் இரண்டு வாரங்களுக்கு நிறுத்தப்போவதாய் மலேசியா அறிவித்துள்ளது.

119 ஊடாக பதிவு செய்யும் நடவடிக்கை

மார்ச் மாதம் 1-15 வரையிலான காலப்பகுதிக்குள் ஐரோப்பா, ஈரான், தென்கொரியா ஆகிய நாடுகளில் இருந்து வருகை தந்துள்ளவர்கள். 119 என்ற இலக்கத்தை தொடர்பு கொண்டு தம்மை பதிவு செய்து கொள்ள முடியும்.

88 ரயில் சேவைகள் இரத்து

இன்று(17) முதல் எதிர்வரும் 19ம் திகதி வரை ரயில்வே சேவைகளில் 88 இரத்தாகும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

170 பேர் பரிசோதனைகள் மேற்கொள்ளவில்லை

இம்மாதம் இத்தாலி மற்றும் தென்கொரியாவில் இருந்து நாடு திரும்பிய சுமார் 170 பேர் நாட்டிற்குள் உள்ளனர். அவர்கள் மருத்துவ பரிசோதனை பெறவில்லை.இவர்கள் உடனடியாக அருகிலுள்ள பொலிஸ் நிலையம் சென்று பதிவு செய்வதன் ஒத்துழைக்குமாறு அரசு வேண்டியுள்ளது.

இலங்கையின் தற்போதைய கொரோனா நோயாளிகள் (09:45)

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 10 பேர் இன்று புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 28 ஆக அதிகரித்துள்ளது. – அரச தகவல் திணைக்களம் –

வெளிநாட்டினர் நுழைவதற்கு தடைவிதித்த ரஷ்யா

COVID-19 பரவுவதைத் தடுக்க வெளிநாட்டவர்கள் நாட்டிற்குள் நுழைவதை தற்காலிகமாக கட்டுப்படுத்த ரஷ்ய அரசு முடிவு செய்துள்ளது. இந்த விதிகள் புதன்கிழமை முதல் நடைமுறைக்கு வந்து மே 1 வரை நீடிக்கும்

WWE வரலாற்றில் முதல் முறையாக நடந்த அதிசயம்

கொரோனா அச்சம் காரணமாக WWE வரலாற்றில் முதல் முறையாக ஸ்மாக்டவுன் நிகழ்ச்சி எவ்வித பார்வையாளர்களும் இல்லாமல் நடைபெற்றது.WWE வீரர்கள் மட்டுமே காம்பைரிங் செய்து ஒருவருக்கொருவர் சண்டையிட்டு விளையாடிவிட்டு சென்றுள்ளனர்.

இன்று முதல் எல்லைகள் அனைத்தும் மூடப்படும்: பிரான்ஸ்

கோவிட் -19 பரவுவதைக் கட்டுப்படுத்தும் முயற்சியாக நாளை முதல் ஷெங்கன் பிரதேச எல்லைகள் மூடப்படும் என பிரான்ஸ் ஜனாதிபதி அறிவித்துள்ளார்.

உலக சுகாதார அமைப்பு விடுத்துள்ள கோரிக்கை

கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி இருக்கலாம் என சந்தேகிக்கப்படும் அனைவரையும் சோதனைக்கு உட்படுத்துமாறு உலக சுகாதார அமைப்பு அனைத்து நாடுகளையும் கோரியுள்ளது.

அவுஸ்திரேலியா வேகப்பந்து வீச்சாளருக்கு கொரோனா

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக அவுஸ்திரேலிய அணியின் வேகபந்து வீச்சாளர் கேன் ரிச்சட்சன் நியூசிலாந்து அணிக்கெதிரான போட்டியில் விளையாட மாட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேவாலயத்தில் தீர்த்தம் குடித்த 46 பேருக்கு கொரோனா

தென் கொரியாவில் உள்ள தேவாலயம் ஒன்றில் தீர்த்தம் குடித்த 46 பேருக்கு கொரோனா வைரஸ் தாக்குதல் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

பாதுகாப்பு அமைச்சு விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு

கடந்த மார்ச் 1 – 15 வரையான காலப்பகுதியில் ஐரோப்பா, ஈரான் மற்றும் தென்கொரியாவிலிருந்து இலங்கைக்கு வருகைத் தந்த அனைவரும் அருகிலுள்ள பொலிஸ் நிலையங்களுக்கு சென்று தங்களை பதிவு செய்து கொள்ளுமாறு பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது

கனேடியர்கள் உடனடியாக நாடு திரும்புங்கள்

கொரோனா வைரஸ் பரவலை எதிர்ப்பதற்கான நடவடிக்கையாக, தனது எல்லைகளை மூடுவதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அறிவித்துள்ளார்.

கிரிக்கட் போட்டியை காணச் சென்ற கொரோனா நோயாளி

கொவிட் 19 வைரஸ் தொற்றுக்கு உள்ளான விமானி, சமீபத்தில் இடம்பெற்ற ரோயல் மற்றும் புனித தோமஸ் இடையில் இடம்பெற்ற கிரிக்கட் போட்டியை காணச் சென்றுளள்ளதாக தகவல்கள் உறுதியாகியுள்ளன.

அடையாள அட்டை ஒருநாள் சேவை இடைநிறுத்தம்

அடையாள அட்டை விநியோகிக்கும் ஒருநாள் சேவையை இன்று (17) முதல் தற்காலிகமாக இடைநிறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

வைரஸ் தொற்றுக்கு உள்ளான மேலும் 6 பேர்

அதன்படி இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 28 ஆக அதிகரித்துள்ளது.

முக கவசங்களுக்கான சில்லரை விலை நிர்ணயிப்பு

முக கவசம் ஒன்றை 50 ரூபாய்க்கும் என் 95 ரக முக கவசம் ஒன்றை 325 ரூபாய்க்கும் விற்பனை செய்ய வேண்டும் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அரச நிறுவனங்களுக்கு 3 நாட்கள் விடுமுறை

சுகாதாரம், உணவு, போக்குவரத்து, அத்தியாவசிய சேவை, வங்கி, மாவட்ட செயலாளர் அலுவலகம் மற்றும் பிரதேச செயலாளர் அலுவலகம் தவிர்ந்த ஏனைய அனைத்து அரச நிறுவனங்களுக்கு மூன்று நாட்கள் விடுமுறை

Check Also

ஹங்வெல்லை துப்பாக்கிச் சூடு நடந்தது என்ன?

வாஹித் லெப்பை மொஹம்மது பர்சான் 46 வயதான மூன்று பிள்ளைகளின் தந்தை. ஹங்வெல்லை நகரின் ஹோட்டல் ஒன்றினை நடாத்திச் செல்பவர். …

Free Visitor Counters Flag Counter