பொது இடங்களுக்குள் புர்கா, நிகாப் அணிந்துவருபவர்கள் நுழையாதிருக்க நாம் நடவடிக்கை எடுப்போம் – ரத்ன தேரர்

தேசிய ஒற்றுமைக்கு குந்தகமாக இருக்கும் மத பின்பற்றல்களை நிறுத்துவதற்கு ஜம்இய்யதுல் உலமா நடவடிக்கை எடுக்கவேண்டும். அவ்வாறு இல்லாவிட்டால் புர்கா, நிகாப் அணிந்துவருபவர்கள் பொது இடங்களுக்கள் நுழையவிடாமல் இருப்பதற்கு நாங்கள் நடவடிக்கை எடுப்போம் என ரத்ன தேரர் தெரிவித்துள்ளார். 

அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் தலைமையகத்துக்கு  முன் அனுமதியின்றி நேற்று வந்திருந்திருந்த ரத்னதேரர் மற்றும் ஞானசார தேரர் கலந்துரையாடலுக்கு அனுமதி கிடைக்காத நிலையில் அறிக்கையொன்றை கையளித்துவிட்டு சென்றுள்ளனர்.

கையளிக்கப்பட்ட அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

இலங்கை சமூகத்துக்குள் சிங்களம் முஸ்லிம் மக்கள் மத்தியில் சமூக பிளவு மற்றும் அவநம்பிக்கை தலைதூக்கி இருக்கின்றது.

இந்த நிலைமையை போக்கி சமாதான நிலைமையை ஏற்படுத்துவது அவசியமாகும். அண்மைக்காலமாக முஸ்லிம் சமூகத்துக்குள் புர்கா, நிகாப் அணிவது பாரியளவில் அதிகரித்திருக்கின்றது. இந்த அதிகரிப்பு அயல்நாடான பங்களாதேஷிலும் காணமுடியாத நிலைமையாகும். 

ஏனைய மத கலாசார அடையாளங்களை ஏற்றுக்கொள்வதற்கு  நாங்கள் தயார். என்றாலும் மத அடிப்படைவாதங்களை ஏற்றுக்கொள்வதற்கு நாங்கள்  தயார் இல்லை. சிங்கள, முஸ்லிம் சமூகங்களுக்கு மத்தியில் பிளவுகளுக்கு காரணமாக இருக்கும் மத பிரசாரம் அண்மைக்காலமாக தலைதூக்க ஜம்இய்யதுல் உலமா அமைப்பும் பொறுப்பு கூறவேண்டும் என்பதே எமது நம்பிக்கையாகும். 

அதனால் தேசிய ஒற்றுமைக்கு குந்தகமாக இருக்கும் மத பின்பற்றல்களை நிறுத்துவதற்கு ஜம்இய்யதுல் உலமா நடவடிக்கை எடுக்கும் என நாங்கள் எதிர்பார்க்கின்றோம்.

இதனை இவ்வாறு அமைதியான முறையில் தீர்த்துக்கொள்ள ஜம்இய்யதுல் உலமா அமைப்பு முயற்சிக்காவிட்டால், அவ்வாறான ஆடைகளில் வருபவர்கள் பொது இடங்களுக்கு நுழையவிடாமல் தடுப்பதற்கு எங்களால் நடவடிக்கை எடுக்கநேரிடும். புர்கா மற்றும் நிகாப் அணிவதற்கு பல நாடுகள் தடைவிதித்திருக்கின்றன. ஒருசில முஸ்லிம் நாடுகளும் இதனை கட்டுப்படுத்தி இருக்கின்றன.

அதனடிப்படையில் பிரச்சினைகள் எதுவும் இன்றி, விசேட சட்டங்கள் அமுல்படுத்தல்கள் எதுவும் இல்லாமல், உங்களது அமைப்பு இந்த அடிப்படைவாத நிலைமையை மாற்றியமைக்க நடவடிக்கை எடுக்கும் என நாங்கள் நினைக்கின்றோம்.

அதேபோன்று நாடொன்றில் பொதுவான தேசிய ஒற்றுமையை கல்வியின் மூலமே ஏற்படுத்த முடியும். என்றாலும் மத்ரஸா பாடசாலை என்ற பெயரில் முதலாம் வகுப்பில் இருந்து 13 ஆம் வகுப்புவரை விசேட மத பாடசாலை கட்டமைப்பொன்றை, கல்வி அமைச்சின் நிர்வாகத்துக்கு அப்பாட்பட்டு மேற்கொள்ளப்படுகின்றது. இலங்கையில் இருக்கும் அனைத்து பிள்ளைகளும் ஒரு பாடத்திட்டத்தையே கற்றொழுகவேண்டும்.

என்றாலும் மத்ரஸா பாடசாலைகளில் பல்வேறு தரத்தில் மத அடிப்படைவாதத்தை அடிப்படையாக அமைந்த கற்றல் மற்றும் பயிற்சிகள் மேற்கொள்ளப்படுவது தற்போது வெளிப்பட்டிருக்கின்றது. சஹ்ரான் போன்ற மனித கொலைகாரர்களும் உருவாகுவது இவ்வாறான கல்வி முறையிலாகும்.

Check Also

ஹங்வெல்லை துப்பாக்கிச் சூடு நடந்தது என்ன?

வாஹித் லெப்பை மொஹம்மது பர்சான் 46 வயதான மூன்று பிள்ளைகளின் தந்தை. ஹங்வெல்லை நகரின் ஹோட்டல் ஒன்றினை நடாத்திச் செல்பவர். …

Free Visitor Counters Flag Counter