காத்தான்குடி, மாத்தளையில் பயங்கரவாத நடவடிக்கை குற்றச்சாட்டில் இருவர் கைது

தீவிரவாத சித்தாந்தங்களைப் பரப்பியமை மற்றும் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு நிதி சேகரித்த குற்றச்சாட்டில் இரு நபர்களை பயங்கரவாத விசாரணைப் பிரிவு பொலிஸார் கைது செய்துள்னர்.

இவர்களில் ஒருவர் காத்தான்குடியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

49 வயதான இவர், உயிர்த்த ஞாயிறு தின குண்டுத் தாக்குதல்களின் சூத்திரதாரியாக கருதப்படும் ஸஹ்ரான் ஹாஷிமுடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தவர் என பொலஸார் தெரிவித்துள்ளனர்.

பேஸ்புக் உட்பட சமூகவலைத்தளங்கள் ஊடாக தீவிரவாத கடும்போக்குவாத கருத்துக்களை இவர் பரப்பினார் எனத் தெரிவிக்க்பபட்டுள்ளது,

மற்றொருவர் மாத்தளையில் கைது செய்யப்பட்டுள்ளார்.

46 வயதான இந்நபர், சமூக வலைத்தளங்கள் ஊடாக தீவிரவாத சித்தாந்தங்களைப் பரப்பியதுடன், ஐக்கிய அரபு இராச்சியத்தில் வசிக்கும் இலங்கையர்களிடமிருந்து நிதி சேகரித்த்துடன், தீவிராத மற்றும் பயங்கரவாத ஊக்கவிப்பு நடவடிக்கைகளுக்கு அப்பணத்தை அனுப்பியதாகவும் பொலிஸ் விசாரணைகளிலிருந்து தெரிய வந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இவர் ஐக்கிய அரபு இராச்சியத்திலிருந்து கடந்த டிசெம்பர் 5 ஆம் திகதி நாடு கடத்தப்பட்டவர் எனவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். -மெட்ரோ நியூஸ்-

Check Also

ஹங்வெல்லை துப்பாக்கிச் சூடு நடந்தது என்ன?

வாஹித் லெப்பை மொஹம்மது பர்சான் 46 வயதான மூன்று பிள்ளைகளின் தந்தை. ஹங்வெல்லை நகரின் ஹோட்டல் ஒன்றினை நடாத்திச் செல்பவர். …

Free Visitor Counters Flag Counter