கிலாபத்‌ ஆட்சியை உருவாக்கும்‌ எண்ணம்‌ கிழக்கில்‌ சில இளைஞர்‌களிடம்‌ உள்ளது.

கலீபா ஆட்சியை இலங்கையில்‌ உருவாக்க வேண்டும்‌ என்ற எண்ணம்‌ கிழக்கில்‌ ஒரு சில இளைஞர்‌ மத்தியில்‌ உள்ளது எனவும்‌ வெளிநாடுகளில்‌ இயங்கும்‌ அடிப்படைவாத அமைப்புகள்‌ இலங்கையிலும்‌ பெயர்‌ மாற்றப்பட்டு இயங்குவதாகவும்‌ ஆளும்‌ கட்சி உறுப்பினர்‌ சிவனேசதுரை சந்திரகாந்தன்‌ சபையில்‌ தெரிவித்தார்‌.

பாராளுமன்றத்தில்‌ நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு இன தாக்குதல்‌ தொடர்பான ஜனாதிபதி
ஆணைக்குழுவின்‌ அறிக்கை தொடர்பான மூன்றாம்‌ நாள்‌ விவாதத்தில்‌ உரையாற்றுகையில்‌ இவ்வாறு தெரிவித்த
அவர்‌ மேலும்‌ கூறுகையில்‌

இன்று இஸ்லாத்தில்‌ இருக்கும்‌ வஹாப்வாத கொள்கையே பல்வேறு பிரச்சனைகளை உருவாக்கியுள்ளது. கலீபா ஆட்சியை இலங்கையில்‌ உருவாக்க வேண்டும்‌ என்ற எண்ணம்‌ கிழக்கில்‌ ஒரு சில இளைஞர்‌ மத்தியில்‌ உள்ளது. அதனை தடுத்து நிறுத்தி இந்த சரியாக கையாள வேண்டிய பொறுப்பு அரசாங்கத்திடம்‌ உள்ளது.

அகற்காக ஒட்டுமொத்த இஸ்லாமியர்‌களையும்‌ இலக்கு வைக்கக்கூடாது. இன்று வெளிநாடுகளில்‌ இயங்கும்‌ அடிப்படைவாத அமைப்புகள்‌ இலங்கையிலும்‌ பெயர்‌ மாற்றப்பட்டு இயங்கி வருகின்றன. எனவே இவற்றை சரியாக கையாண்டு நாட்டை பாதுகாக்கும்‌ நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும்‌.

எமது பகுதியில்‌ உள்ள பிராந்திய பள்ளிவாசல்கள்‌ கூட பிற்போக்கான கருத்துக்‌களை சமூகத்தில்‌ விதைத்து குழப்பங்‌களை ஏற்படுத்துவதை அவதானிக்க முடிகின்றது. எனவே மத ரீதியிலான முரண்பாடுகளை ஏற்படுத்தாத சூழல்‌ எதிர்காலத்தில்‌ உருவாக வேண்டும்‌ என்றார் -vidivelli-‌

Check Also

ஹங்வெல்லை துப்பாக்கிச் சூடு நடந்தது என்ன?

வாஹித் லெப்பை மொஹம்மது பர்சான் 46 வயதான மூன்று பிள்ளைகளின் தந்தை. ஹங்வெல்லை நகரின் ஹோட்டல் ஒன்றினை நடாத்திச் செல்பவர். …

Free Visitor Counters Flag Counter