உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான ஆணைக்குவின் அறிக்கையால் அதிர்ச்சிக்கு உள்ளாகியவா்களுள் நானும் ஒருவன். அறிக்கை என் மீது சுமத்தியிருக்கும் குற்றச்சாட்டுக்களை அவதானிக்கும்போது எனது உண்மையான நிலையைப் புறக்கணித்து என்னைப் பற்றிய போலியான பயங்கரமானதொரு பிம்பத்தைத் தோற்றுவிப்பதாகவே தோன்றுகின்றது எனபயங்காவாக புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ள ஜமாஅதே இஸ்லாமியின் முன்னாள் தலைவர் உஸ்தாத் ரஷீத் ஹஜ்ஜுல் அக்பர் தான் கைது செய்யப்படவதத்கு முன்னர் எழுதிய விளக்க அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
11 03.2021 திகதியிட்டு என் மீதான அடிப்படையற்ற குற்றச்சாட்டுக்கள் எனும் தலைப்பில் வெளியிடப்பட்டுள்ள 38 பக்கங்கள் கொண்ட குறித்த அறிக்கையில் உஸ்தாத் ஹஜ்ஜுல் அக்பர், ஜமாஅதே இஸ்லாமி மற்றும் அல் ஹஸனாத் சஞ்சிகை தொடர்பில் ஆணைக்குழுவின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களுக்கு பதிலளிக்கப்பட்டுள்ளது.
குறித்த அறிக்கையில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டு குற்றம்சாட்டப்பட்டேன்’ எனும் தலைப்பில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, நான் 2019ஆம் ஆண்டு கைதுசெய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்டவன் என்ற வகையில் இங்கு சுட்டிக்காட்டப்பட வேண்டிய தொரு விடயமும் இருக்கின்றது.
அப்போது என்னைக் கைது செய்தவர்கள் என் மீது எந்தக் குற்றச்சாட்டையும் சுமத்தவில்லை. மாறாக விசாரணைக்கு அழைத்துச் செல்கிறோம் என்று கூறி அழைத்துச் சென்ற பின்னரே நான் கைது செய்யப்பட்டிருப்பதாக அறிவித்தார்கள்.
அவ்வாறு அழைத்துச் சென்ற மறுநாள் சில சிங்களப் பத்திரிகைகள் என் மீதான குற்றசாட்டுக்கள் அனைத்தும் ஆய்வு செய்யப்பட்டு உறுதிப்படுத்தப்பட்டு விட்டதைப் போன்று மிக மோசமான வகையில் சோடனை செய்து பிரசுரித்திருந்தன. அக்குற்றச்சாட்டுகள் அனைத்தும் போலியானவை, அபாண்டமானவை என அப்போதே எமது மக்கள் பேச ஆரம்பித்தனர். எனது உண்மை நிலையை வலியுறுத்தி எனக்காக எழுதவும் பேசவும் செய்தனர்.
அதே குற்றச்சாட்டுகள்தான் இப்போது ஆணைக்குழுவின் அறிக்கையில் எனக்கெதிராக முன்வைக்கப்பட்டுள்ளன. இந்தப்
பின்னனியில் பார்க்கும்போது இக் குற்றச்சாட்டுகள் ஆய்ந்தறிந்து கண்டுபிடிக்கப்பட்டவையல்ல. மாறாக எங்கோ யாராலோ
ஊகங்களின் அடிப்படையில் முன்முடிவுகளோடு தயாரிக்கப்பட்டவைகள் என்றே புலனாகின்றது. இந்த வகையில் இக்குற்றச்சாட்டுக்களை நான் முற்றாக மறுக்கிறேன். இதே குற்றச்சாட்டுக்கள் நன்கு விசாரிக்கப்பட்ட நிலையில்தான் நான் நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டேன் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.